ஹேமச்சந்திர பருவா
'ஹேமச்சந்திர பருவா (Hemchandra Barua) ஹேம் பருவா என்றும் அழைக்கப்படும் அசாமைச் சேர்ந்த இவர் ஒரு முக்கிய எழுத்தாளர் ஆவார். 19 ஆம் நூற்றாண்டின் அசாமிய சமூக சீர்திருத்தவாதியான இவர் அசாமின் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள தேர்கான் பகுதியை சேர்ந்தவர்.
இலக்கியப் பணி
தொகுசமசுகிருதத்தை அடிப்படையாகக் கொண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹேம்கோஷ் என்ற முழுமையான அசாமிய அகராதியின் தொகுப்பாளர் ஆவார். இது அசாமிய மொழியின் இரண்டாவது அகராதியாகும். [1] இது 1900 இல் இவர் இறந்த பிறகு கர்னல் கார்டன் என்பவரது உதவியுடன் ஹேமச்சந்திர கோஸ்வாமி என்பவரால் வெளியிடப்பட்டது.
சான்றுகள்
தொகு- ↑ Sarma, Anjali (1990), Among the luminaries in Assam: a study of Assamese biography, Mittal Publications, p. 118