ஹொங் யென் சாங்

Hong Yen Chang1.jpg

ஹொங் யென் சாங் (Hong Yen Chang பிறப்பு: துல்லியமாக அறியப்படவில்லை; 1859 ஆம் ஆண்டு முதல் 1860 க்குள் இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது[1]) [2]) அமெரிக்காவில் வாழ்ந்த முதல் சீன வழக்கறிஞர் ஆவார். அமெரிக்காவில் குடியேறிய இவருக்கு இவரை மங்கோலியர் என்ற காரணத்தைக்காட்டி கலிபோர்னிய நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிய அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிகழ்வு நடந்தது 1890 [1][3] ஆம் ஆண்டு ஆகும்.[4]

இளமைக்காலம்தொகு

இவர் சீனாவின் ஹோங்டோங் மாகாணத்தில் 1860 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தை இவரின் பத்து வயதில் இறந்தார்.

கல்விதொகு

சீனாவின் கல்வி அறக்கட்டளையின் மூலம் இவர் அமெரிக்காவில் கல்வி பயில தேர்வு செய்யப்பட்டார்.[4] தனது 13ஆம் வயதில் அமெரிக்காவில் சென்று சேர்ந்தார். 1873 ஆம் ஆண்டில் கொலம்பியா சட்டக்கலூரியில் சட்டம் பயின்றார். வழக்கறிஞராகப் பணியாற்றும் உரிமம் அவருக்கு நியூயார்க் மாநிலத்தில் கிடைத்தது. ஆனால் 1890 இல் கலிபோர்னியா மாநிலத்தில் வழக்கறிஞராகப் பணியாற்ற அனுமதி வேண்டி விண்ணப்பித்தபோது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது[5] .

முடிவுதொகு

அமெரிக்க அரசு அவர் இறந்து 125 ஆண்டுகள் கழித்து அவருக்கு கொடுக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.[6] ஆனால் அந்த நேரம் வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லுபடியற்றது என்று தற்போது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

இறப்புதொகு

கலிபோர்னியாவின் பெர்க்லி என்ற இடத்தில் 1926 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி மரணம் அடைந்தார்.

மேற்கோள்தொகு

  1. 1.0 1.1 Chinese Educational Mission Connections, http://www.cemconnections.org/index.php?option=com_content&task=view&id=54.
  2. “A Chinese Lawyer,” New York Times (May 18, 1888), available at http://query.nytimes.com/mem/archive-free/pdf?res=F2061FFF355C10738DDDA10994DD405B8884F0D3.
  3. In re Hong Yen Chang, 84 Cal. 163 (1890).
  4. 4.0 4.1 Lani Ah Tye Farkas, Bury My Bones in America (1998), p.87.
  5. Naturalizing a Chinaman: Hong Yen Chang's Struggles to be Admitted to the Bar, New York Times (Nov. 19, 1887), available at http://query.nytimes.com/mem/archive-free/pdf?res=FA0A10F9355C15738DDDA00994D9415B8784F0D3.
  6. கலிபோர்னியா: 125 ஆண்டுகள் கடந்து வழங்கப்பட்ட வழக்கறிஞர் உரிமம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹொங்_யென்_சாங்&oldid=2707707" இருந்து மீள்விக்கப்பட்டது