ஹோட்டல் கால்வேஸ்
அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் அமைந்துள்ள கால்வெஸ் ஹோட்டல் மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்கது. இந்த ஹோட்டல் 1911[2] ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இது பெர்னார்டோ டி கால்வெஸ் மாட்ரிட் அவர்களைக் கௌரவிக்கும் பொருட்டு அவரின் பெயர் இந்த ஹோட்டலுக்கு வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 4, 1979 இல் தேசிய அளவிலான வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் இந்த ஹோட்டல் சேர்க்கப்பட்டது.
Galvez Hotel | |
---|---|
ஐ.அ. தேசிய வரலாற்று இடங்கள் பதிகை | |
The Hotel Galvez in 2006
| |
அமைவிடம்: | 2024 Seawall Blvd Galveston, Texas |
ஆள்கூறு: | 29°17′33″N 94°47′10″W / 29.29250°N 94.78611°W |
கட்டியது: | 1911 |
நிர்வாக அமைப்பு: | Wyndham Hotels and Resorts, LLC |
தே.வ.இ.பவில் சேர்ப்பு: |
April 4, 1979 |
தே.வ.இ.ப குறிப்பெண் #: |
79002944[1] |
வைதாம் கிராண்ட் ஹோட்டல், ஹோட்டல் கால்வெஸ் மற்றும் ஸ்பாவினை நிர்வகிக்கும் பணியினைச் செய்கிறது. வைதாம் கிராண்ட் ஹோட்டல், வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்க ஹோட்டல்களின் உறுப்பினராக உள்ளது.[3] ஏப்ரல் 4, 1979 இல் இது NRHP உடன் சேர்க்கப்பட்டது. இதன் NRHP குறிப்பு எண் 79002944 ஆகும்.[1]
வரலாறு
தொகுகால்வெஸ் தீவில் இருந்த பெரிய ஹோட்டல் (கடற்கரை ஹோட்டல்) ஒன்று தீ விபத்தால் அழிந்ததால், கால்வெஸ்டன் நகரின் தலைவர்கள் கால்வெஸ் ஹோட்டலைக் கட்ட 1898 ஆம் ஆண்டில் தீர்மானித்தனர். 1900 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக இந்த ஹோட்டலை சுற்றுலா பயணிகளைக் கவரும் வண்ணம் கட்டும் முயற்சியில் இறங்கினர். மிஷன் ரெவிவல் மற்றும் ஸ்பானிஷ் ரெவிவல் ஆகிய வடிவமைப்புகளின் கலப்பில் இந்த ஹோட்டலை வடிவமைத்தனர். கால்வெஸ் ஹோட்டலினை மவுரன், ரஸல் மற்றும் க்ரோவல் ஆஃப் லூயிஸ் ஆகியோர் இணைந்து வடிவமைத்தனர். இந்த ஹோட்டல் 1911 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திறக்கப்பட்டது, அதற்காக சுமார் ஒரு மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டன.[2]
அக்டோபர் 3, 1940 இல் கால்வெஸ் ஹோட்டல் வில்லியம் லெவிஸ் மூடி அவர்களால் வாங்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க கடலோர காவல்படை இந்த ஹோட்டலைக் கைப்பற்றியது, அத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு எந்தவித சுற்றுலா பயணிகளுக்கும் ஹோட்டல் அறைகள் வாடகைக்கு கொடுக்கப்படவில்லை. இதன் பொருளாதார நிலை 1940 முதல் 1950 வரையிலான ஆண்டு காலத்தில் மீண்டு வந்தது. இதற்கு இங்கு நடைபெற்ற சூதாட்ட விளையாட்டுக்கள் முக்கியக் காரணமாகும். சட்ட விரோதமான சூதாட்ட விளையாட்டுக்கள் 1950 ஆம் ஆண்டில் சட்டப்படி இழுத்து மூடப்பட்டன. அப்போது கால்வெஸ் ஹோட்டல் மீண்டும் பாதிப்பிற்குள்ளானது.[4]
அதன் பின்பு கால்வெஸ் ஹோட்டலின் புதுப்பிப்பு பணிகள் 1965 ஆம் ஆண்டில் தொடங்கின. அப்போது ஹோட்டலை ஹார்வி ஓ. மெக்கார்தே மற்றும் டாக்டர். லியோன் ப்ரோபெர்க் ஆகியோர் வாங்கினர். 1978 ஆம் ஆண்டில் ஹோட்டல் மீண்டும் கைமாறியது, அச்சமயம் டென்டன் கூலே ஹோட்டலை வாங்கினார். பின்னர் 1979 ஆம் ஆண்டில் மறு சீரமைப்பு பணிகளை அவர் தொடங்கினார். ஏப்ரல் 1965 இல் ஜார்ஜ் பி. மிட்செல் ஹோட்டலை வாங்கினார். அவர் கால்வெஸ்டனில் பிறந்தவர் மற்றும் வீட்டு மனைகளை புதுப்பித்து விற்கும் தொழில் செய்பவர் ஆவார். மிட்செல் ஹோட்டலுக்கு சிறந்த சீரமைப்பு பணிகளைக் கொடுத்து 1911 ஆம் ஆண்டில் ஹோட்டலுக்கு வரலாற்று சிறப்புமிக்க பார்வையினைக் கொடுத்தார். 1996 ஆம் ஆண்டு மிட்செல்லிடம் இருந்து உரிமைகள் அனைத்தையும் வைதாம் ஹோட்டல் மற்றும் ரிசார்ட்ஸ் வாங்கினர். அதன் பின்னர் ஹோட்டலின் செயல்பாட்டினை ‘ஹோட்டல் கால்வெஸ்’ என்ற பெயருடன் வைதாம் ஹோட்டல் மற்றும் ரிசார்ட்ஸ் நிர்வகிக்க தொடங்கியது. இந்த ஹோட்டலில் 226 அறைகள் மற்றும் சூட்கள் உள்ளன.[2]
2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சூறாவளியால் ஹோட்டலின் மேற்புற கூரையில் ஒட்டியிருந்த கலை வண்ணங்கள் அழிக்கப்பட்டன. அத்துடன் ஸ்பா, உடல்நல மையம், வணிக அலுவலகங்கள் மற்றும் சலவைக்கான இடம் ஆகியவை இருந்த இடங்களில் வெள்ளம் ஏற்பட்டதால் ஹோட்டலின் கீழ்புற அமைப்புகளில் பெரும் சேதம் ஏற்பட்டது.[5] கால்வெஸ் என்பதற்கு “தென்மேற்குப் பகுதியின் விளையாட்டு மைதானம்” என்று பொருள். இங்கு பெரும்பாலான பணக்காரர்களும், முக்கியப் பிரமுகர்களும் தங்கியுள்ளனர். அமெரிக்க அதிபர்களான ஃப்ராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட், ட்வைட் டி. ஈசன்ஹோவர் மற்றும் லைன்டண் பி. ஜான்சன் ஆகியோரும் ஜெனரல் டௌக்ளஸ் மெக்ஆர்தரும் இங்கு தங்கியுள்ளனர். ஜிம்மி ஸ்டூவர்ட், ஃப்ராங்க் சினட்ரா மற்றும் ஹோவர்ட் ஹியூஜஸ் ஆகியோர் பிற குறிப்பிடத்தக்கவகையில் பிரபலமானவர்கள். இந்த ஹோட்டலின் ஆறாவது மற்றும் ஏழாவது மாடிகளின் கீழ்த்தர மற்றும் மேல்தர அறைகள் மேற்கூறப்பட்டவர்களான பிரபலம் மற்றும் பிரபலமில்லாதவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.
ஹோட்டல் கால்வெஸ் மற்றும் ஸ்பா, வைதாம் ஹோட்டல் அறைகள் மற்றும் வசதிகள்
தொகுஒவ்வொரு அறைக்கும் அதன் கட்டணத்திற்கு தகுந்த வகையில் தொலைக்காட்சி, கேபிள் வசதி, தனிப்பட்ட குளியலறை, தொலைபேசி என பலதரப்பட்ட வசதிகள் அளிக்கப்படுகின்றன. அத்துடன் அடிப்படை வசதிகளாக ஒவ்வொரு வகை அறைக்கும் அளிக்கப்படும் வசதிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.[6]
இரண்டடுக்கு நகர பார்வை
- பாதுகாப்பு
- இஸ்திரி வசதி
- இணைய வசதி
- குளிர்சாதனப் பெட்டி
- செய்தித்தாள்
ராஜ அறை – நகர பார்வை
- பாதுகாப்பு
- இஸ்திரி வசதி
- இணைய வசதி
- குளிர்சாதனப் பெட்டி
- செய்தித்தாள்
ராஜ அறை – பாதி வளைகுடா பார்வை
- பாதுகாப்பு
- இஸ்திரி வசதி
- இணைய வசதி
- குளிர்சாதனப் பெட்டி
- செய்தித்தாள்
ராஜ அறை – முழு வளைகுடா பார்வை
- பாதுகாப்பு
- இஸ்திரி வசதி
- இணைய வசதி
- குளிர்சாதனப் பெட்டி
- செய்தித்தாள்
இரு இரண்டடுக்கு – பாதி வளைகுடா பார்வை
- பாதுகாப்பு
- இஸ்திரி வசதி
- இணைய வசதி
- குளிர்சாதனப் பெட்டி
- செய்தித்தாள்
இரு இரண்டடுக்கு – முழு வளைகுடா பார்வை
- பாதுகாப்பு
- இஸ்திரி வசதி
- இணைய வசதி
- குளிர்சாதனப் பெட்டி
- செய்தித்தாள்
ஹோட்டலின் இதர வசதிகளின் பட்டியல் பின்வருமாறு
தொகுஅடிப்படை வசதிகள்
- குளிரூட்டும் சாதனம்[7]
- உணவகம்
- பார்
- அறைச் சேவை
- வயரில்லா இணையச் சேவை
- இணையவசதி
- வணிக மையம்
- உடற்பயிற்சி செய்யுமிடம்
ஹோட்டல் வசதிகள்
- விரைவாக பதிவு செய்தல்
- விரைவாக வெளியேறுதல்
- வரவேற்பு அறை
- முடி உலரவைப்பான்
- நீச்சல் குளம்
- நீச்சல் குளத்துடன் கூடிய சிறிய உணவகம்
- பணியாட்கள் (சுமை தூக்குபவர்கள்)
வணிகச் சேவைகள்
- விரைவாக பதிவு செய்தல்
- விரைவாக வெளியேறுதல்
- வரவேற்பு அறை
- முடி உலரவைப்பான்
- நீச்சல் குளம்
- நீச்சல் குளத்துடன் கூடிய சிறிய உணவகம்
- பணியாட்கள் (சுமை தூக்குபவர்கள்)
கேலரி
தொகு-
Hotel Galvez, Galveston, Texas (postcard, circa 1911-1924
-
Galveston Electric Co. tracks adjacent to Hotel Galvez (in background) after the 1915 Galveston Hurricane
-
Galveston Electric Co. tracks through City Park adjacent to Hotel Galvez after the 1915 Galveston Hurricane
மேலும் காண்க
தொகுவெளி இணைப்பு
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "National Register Information System". 2006-03-15. Archived from the original on 2010-12-04. பார்க்கப்பட்ட நாள் 2014-12-25.
- ↑ 2.0 2.1 2.2 Carmack, Liz. "Historic Hotels of Texas". Texas A&M University Press: College Station,Texas, 2007. pp 47–49. Archived from the original on 2009-03-10. பார்க்கப்பட்ட நாள் 2014-12-25.
- ↑ "Hotel Galvez & Spa, A Wyndham Grand Hotel, a Historic Hotels of America member". Historic Hotels of America. பார்க்கப்பட்ட நாள் 28 January 2014.
- ↑ "Galvez Hotel". Texas Historic Sites Atlas. பார்க்கப்பட்ட நாள் Dec 27, 2008.
- ↑ Wirstiuk, Laryssa. "Hotel Galvez Reopens After Hurricane Ike". Preservation Magazine. பார்க்கப்பட்ட நாள் Dec 27, 2008.
- ↑ "Hotel Galvez". Cleartrip.com.
- ↑ "Hotel Galvez Amenities".