கரிம வேதியியலில் -ஏன் (-ane) என்ற பின்னொட்டு கரிமப் பொருட்களைப் பெயரிடுதல் முறையில் -C-C- தொகுதி முழுமையாக நிறைவுற்ற நிலையில் இருக்கும் பொழுது கரிமச் சேர்மங்களுக்கு பெயரிடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. உயிரொலி உடைய பின்னொட்டு சேரும் பொழுது கரிமச் சேர்மத்தின் அல்கேன் பெயரில் உள்ள இறுதி -e மறைகிறது. உதாரணமாக, அதிக முன்னுரிமை விதிகள் படி கரிம வகைப்பாட்டியலில் புரொப்பேன் உடன் ஆல்ககாலின் இறுதியில் உள்ள "-ol" சேரும் பொழுது இறுதி "-e" மறைந்து புரொப்பனால் ("propanol") என்றாகிறது.[1]

மாறாக, இது ஒரு தனிமத்தின் ஒற்றைக் கரு ஐதரைடு சேர்மத்தைக் குறிக்கலாம். உதாரணமாக, (CH4) மீத்தேன் என்றும், மற்றும் நீர் (H2O) ஆக்சிடேன் (oxidane) என்றும் அழைக்கப்படுகின்றன.[2] இதன் சொற்பிறப்பியல் பற்றி அறிய ஆல்க்கேன் என்ற தலைப்பைப் பார்க்கவும்.

மேலும் பார்க்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. The Commission on the Nomenclature of Organic Chemistry (1971) [1958 (A: Hydrocarbons, and B: Fundamental Heterocyclic Systems), 1965 (C: Characteristic Groups)]. Nomenclature of Organic Chemistry (3rd combined ed.). London: Butterworths. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-408-70144-7.
  2. A Guide to IUPAC Nomenclature of Organic compounds, IUPAC, Commission on Nomenclature of Organic Chemistry, 1993
"https://ta.wikipedia.org/w/index.php?title=-ஏன்&oldid=3778034" இலிருந்து மீள்விக்கப்பட்டது