.br பிரேசிலின் அதியுயர் ஆள்கள இணைய நாட்டுக் குறியீடு (ccTLD) ஆகும். 2005 வரை இதனை பிரேசிலிய இணைய வழிநடத்துக் குழு (Comitê Gestor da Internet no Brasil) மேலாண்மை செய்து வந்துள்ளது. 2005இலிருந்து இதன் மேலாண்மையை பிரேசிலிய பிணையத் தகவல் மையம் (Núcleo de Informação e Coordenação do Ponto br) செய்து வருகின்றது. எந்தவொரு பதிவிற்கும் உள்ளூர் தொடர்பு தேவையான ஒன்று. போர்த்துக்கேய எழுத்துருக்களுடன் கூடிய ஆள்களப் பெயர்களும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

.br
அறிமுகப்படுத்தப்பட்டது 1989
அ. ஆ. பெ. வகை அதி உயர் ஆள்கள நாட்டுக் குறியீடு
நிலைமை செயலாக்கத்தில்
பதிவேடு ரெஜிஸ்ட்ரொ.பிஆர்
வழங்கும் நிறுவனம் கொமுடீ கெசுடோர் டா இன்டர்னெட் னோ பிரேசில்
பயன்பாட்டு நோக்கம் பிரேசிலுடன் தொடர்புள்ள அமைப்புக்கள்
உண்மை பயன்பாடு பிரேசிலில் மிகப் பரவலானப் பயன்பாடு (இணையத்தில் மிகப்பெரிய போர்த்துக்கேய மொழி இருத்தல்[1])
பதிவு கட்டுப்பாடுகள் இரண்டாம்நிலை பெயர் பதிவிற்கு பல்வேறுபட்ட கட்டுப்பாடுகள். பிரேசிலிய குடிமக்களுக்கு அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றது.
கட்டமைப்பு பல்வகை பகுப்புகளில் மூன்றாம்நிலை பதிவுகள். .com.br மற்றவையை விட கூடுதலான பயன்பாட்டைக் கொண்டுள்ளன.
ஆவணங்கள்
பிணக்கு கொள்கைகள்
வலைத்தளம் Registro.br

பல்கலைக்கழகங்களைத் தவிர்த்து, இரண்டாம்நிலை ஆள்களப் பெயர் நிலைநிறுத்தப்பட்டுள்ளது; ஒவ்வொரு பகுப்பினைப் பொறுத்து கொடுக்கப்பட்டுள்ள பட்டியலிலிருந்து தெரிந்தெடுத்துக் கொள்ளலாம். காட்டாக, site.art.br என்பது கலை (இசை, நாட்டுப்பாடல் போன்ற) பகுப்பிலும் site.org.br என்பது அரசு சார்பற்ற அமைப்பு பகுப்பிலும் வழங்கப்படுகின்றன. கல்வி நிறுவனங்கள் .edu.br என்ற இரண்டாம்நிலைப் பெயரைப் பயன்படுத்தலாம்; இருப்பினும், பெரும்பான்மையான பொதுத்துறை பல்கலைக்கழகங்கள் உட்பட, .com.br என்றும் .br என்றும் பயன்படுத்துகின்றன. ஏப்ரல் 2010 நிலவரப்படி பெரும்பான்மையான, பதிவானவற்றில் 90%க்கும் கூடுதலானவை, பகுப்புகளைக் கண்டுகொள்ளாது .com.br என்ற ஆள்களப் பெயரையே பயன்படுத்துகின்றன. .jus.br (நீதித்துறை), மற்றும் .b.br (வங்கிகள்) ஆள்களப் பெயர்களின் பயன்பாடு களப் பெயர் முறைமை பாதுகாப்பு நீட்சிகளால் (DNSSEC) கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

மேற்சான்றுகள்

தொகு
  1. As of February 18, 2010, Google showed 530.000.000 pages for site: .br, 95.100.000 for site: .pt (போர்த்துகல்) and 553.000 for site: .ao (அங்கோலா). Portuguese pages in the .com domain were 283.000.000.
"https://ta.wikipedia.org/w/index.php?title=.br&oldid=3068189" இலிருந்து மீள்விக்கப்பட்டது