1,2-டையாக்சின்

1,2-டையாக்சின் (1,2-Dioxin) என்பது C4H4O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு பல்லின வளையக் கரிமச் சேர்மமாகும். எதிர் அரோமாட்டிக் சேர்மமான இச்சேர்மம் 1,4-டையாக்சின் அல்லது பாரா டையாக்சினுடைய மாற்றியன் வடிவமாகக் கருதப்படுகிறது.

ஒரு பெராக்சைடின் பண்புகளைப் பெற்றுள்ள காரணத்தால் 1,2-டையாக்சின் நிலைப்புத் தன்மையற்றும், தனித்துப் பிரிக்க இயலாத நிலையிலும் உள்ளது. 1,4-டைபீனைல்-2,3-பென்சோடையாக்சின் போன்ற இச்சேர்மத்தின் பதிலீட்டு வழிப்பொருட்களும் கூட நிலைப்புத்தன்மையின்றி நிலைமாறக்கூடியவையாகவே உள்ளன[1]. 3,6-பிசு(பா-தொலைல்)-1,2-டையாக்சின் என்ற சேர்மம் நிலைப்புத்தன்மை கொண்ட ஒரு வழிப்பொருள் என தவறுதலாக 1990 ஆம் ஆண்டில் கணக்கில் கொள்ளப்பட்டது[2]. இச்சேர்மத்தின் தொடக்கச் சேர்மம் 1,2-டையாக்சினின் வழிப்பொருள் அல்லவென்றும், அது வெப்பவியக்கவியல் நிலைப்புத்தன்மை கொண்ட டையோன் என்று பின்னர் சுட்டிக்காட்டப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. J. P. Smith, A. K. Schrock, G. B. Schuster: Chemiluminescence of organic peroxides. Thermal generation of an o-xylylene peroxide, J. Am. Chem. Soc., 1981, 104, 1041–1047; எஆசு:10.1021/ja00368a021.
  2. H. J. Shine, D. C. Zhao: Electron transfer to excited doublet states. Photoirradiation of 10-methylphenothiazine cation radical perchlorate in solutions of phenylacetylene and p-tolylacetylene in acetonitrile, J. Org. Chem., 1990, 55, 4086–4089; எஆசு:10.1021/jo00300a026.
"https://ta.wikipedia.org/w/index.php?title=1,2-டையாக்சின்&oldid=2164284" இலிருந்து மீள்விக்கப்பட்டது