1, 2-விட்டிக் மறுசீராக்கல் வினை

1, 2-விட்டிக் மறுசீராக்கல் வினை (1,2-Wittig rearrangement) என்பது ஈதருடன் ஆல்கைல் இலித்தியம் சேர்மம் வினைபுரியும்போது ஈதரில் நிகழ்கின்ற 1,2-மறுசீரமைப்பைக் குறிக்கிறது. கரிம வேதியியலில் நடைபெறுகின்ற வகைப்படுத்தப்பட்ட வினைகளில் மறுசீராக்கல் வினை என்பதும் ஒரு வினை வகையாகும்[1][2]. நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர் கியார்க் விட்டிக் என்பவர் பெயரால் இவ்வினை அழைக்கப்படுகிறது.

ஆல்காக்சி இலித்தியம் உப்பு ஓர் இடைநிலை விளைபொருளாகவும் ஓர் ஆல்ககால் இறுதி விளைபொருளாகவும் கிடைக்கின்றன. R" என்பது சயனைடு குழுவைப் போல ஒரு நல்ல விடுபடும் குழுவாகவும் எலக்ட்ரானை எடுத்துக் கொள்ளும் வேதி வினைக்குழுவாகவும் இருந்தால் இவ்வினை நிகழ்கிறது[3] இக்குழுவானது நீக்கப்பட்டு தொடர்புடைய ஒரு கீட்டோன் உருவாகிறது.

வினை வழிமுறை தொகு

இலித்தியத்துடன் கூடிய ஒரு தனி உறுப்பு இணை கார்பன் அணுவிலிருந்து ஆக்சிசன் அணுவிற்கு இடம்பெயர்வதை மையமாகக் கொண்டே வினைவழி முறை அமைகிறது. R தனி உறுப்பு பின்னர் மீண்டும் கீட்டைலுடன் சேர்கிறது.[4]

 
The 1,2-Wittig rearrangement reaction mechanism

.

வெப்ப இயக்கவியல் நிலைப்புத்தன்மை அடிப்படை வரிசையில் ஆல்கைல் குழு இடம்பெயர்கிறது. மெத்தில் < முதலாம் நிலை ஆல்கைல் < இரண்டாம் நிலை ஆல்கைல் < மூன்றாம் நிலை ஆல்கைல் என்ற வரிசையில் தனி உறுப்பு வழிமுறை அமைகிறது. கரைப்பான் கூடு விளைவு காரணமாக தனி உறுப்பு-கீட்டைல் இணை சிறிது நேரத்தில் சில மாற்றியமாதல் வினைகள் நிகழ்கின்றன. எலக்ட்ரான் அமைப்பு தலைகீழ் திருப்பமாக மாறுகிறது. சில அல்லைல் அரைல் ஈதர்களுடன் வினை என்றால் இணை வினை வழிமுறை நிகழ்கிறது[4]. −78 °செல்சியசு வெப்பநிலையில் அல்லைல்பீனைல் ஈதரின் வினை 1 இலித்தியமேற்ற இடைநிலையைக் கொடுக்கிறது. 2 இதை −25 °செல்சியசு வெப்பநிலைக்குச் சூடுபடுத்தும் போது மட்டும் மறுசீராக்கல் விளைபொருளாக 5 மாறுகிறது. ஆனால் இலித்தியம் ஆல்காக்சைடுடன் டிரைமெத்தில்சிலில் குளோரைடு கவர்ந்து கொண்ட பின்னர் மாறுவதில்லை. இதனால் மெய்செனெய்மர் அணைவுச் சேர்மத்திற்கு 3b ஆதரவாக தனி உறுப்பு-கீட்டைல் இடைநிலை3a வெளியேற்றப்படுகிறது. ஒரு பாரா-மூன்றாம் நிலை-பியூட்டைல் பதிலீட்டுடன் வினை செயலிழந்திருப்பதைக் கண்டுபிடிப்பதன் மூலம் இந்த வினைவழிமுறைக்கான கூடுதல் சான்று கிடைக்கிறது.

 
1,2-Wittig rearrangement competing mechanism

இவ்வினை ஒரு மரபுசார்ந்த டையோடிராபிக் வினை வகையாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. Georg Wittig, L. Löhmann, Ann. 550, 260 (1942)
  2. G. Wittig, Experientia 14, 389 (1958).
  3. Preparation of aryl benzyl ketones by [1,2]-Wittig rearrangement Alan R. Katritzky, Yuming Zhang, Sandeep K. Singh Arkivoc pp. 146–50 2002 (vii) link
  4. 4.0 4.1 Wittig Rearrangement of Lithiated Allyl Aryl Ethers: A Mechanistic Study Sven Strunk, Manfred Schlosser European Journal of Organic Chemistry Volume 2006, Issue 19 , pp. 4393–97 எஆசு:10.1002/ejoc.200600304