12-மணி நேர ஓட்டம்
12-மணி நேர ஓட்டம் (A 12-hour run) என்பது மாரத்தான் ஓட்டப்பந்தய தொலைவுக்கும் அதிகமான தொலைவைக் கடந்து ஓடும் ஓட்டமாகும். இப்போட்டியில் 12 மணி நேரத்திற்கு ஓட்டக்காரர்களால் எவ்வளவு தூரம் ஓடமுடியுமோ அவ்வளவு தூரம் ஒட முயற்சிக்கிறார்கள். குறிப்பாக இப்பந்தயம் 1 முதல் 2 மைல் நீளமுள்ள (1.6 கிலோமீட்டர் முதல் 3.2 கிலோமீட்டர்) வளையத் தடங்களில் நடத்தப்படுகிறது[1]. சில சமயங்களில் 400 மீட்டர் (0.25 மைல்) நீளமுள்ள ஓடுகளத்திலும் இப்போட்டியை நடத்துகிறார்கள். சில போட்டிகள் சாலைகளிலும் நகரப்பூங்காக்களின் நடைபாதைகளிலும் நடத்தப்படுகின்றன. முன்னணி ஓட்டக்காரர்கள் பெரும்பாலும் 60 மைல் தொலைவை (97 கிலோமீட்டர்) அல்லது அதற்கும் அதிகமான தொலைவை ஓடி முடிக்கிறார்கள். சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு 100 மைல் (160 கிலோமீட்டர்) தொலைவு மாரத்தான் ஓடுவது மிகச் சிறப்பாகக் கருதப்படுகிறது. சில பங்கேற்பாளர்களுக்கு உதவுவதற்காக குழுவும் இருப்பதுண்டு. மற்றவர்கள் தேவையான கருவிகளுடன் தொடக்கப் புள்ளிக்கு அருகில் முகாமை அமைத்து ஒவ்வொரு வளையத்தை ஓடி முடிக்கும்போதும் ஓட்டக்காரர்களின் நல்ல முன்னேற்றத்திற்கு உதவிபுரிகின்றனர்.
சாதனைகள்
தொகுபெண்கள் | ஆண்கள் | |||||
---|---|---|---|---|---|---|
ஓட்டக்காரர் | தொலைவு (மீ) | இடம் | ஓட்டக்காரர் | தொலைவு (மீ) | இடம் | |
சாலை | ஆன் திராசன் அமெரிக்கா |
144,840 | நியூயார்க்கு (குயின்சு), ஐக்கிய அமெரிக்கா 4 மே 1991 |
யியானிசு கௌரோசு கிரீசு |
162,543 | நியூயார்க்கு, ஐக்கிய அமெரிக்கா 7 நவம்பர் 1984 |
Track | கேமிலி எரான் அமெரிக்கா |
149,130 | போனிக்சு அரிசோனா, அமெரிக்கா 9/10 திசம்பர் 2017 |
சாச்சே பிட்டர் அமெரிக்கா |
163,785 | போனிக்சு அரிசோனா, அமெரிக்கா 14 திசம்பர் 2013 |
மேற்கோள்கள்
தொகு- ↑ If the loop is less than 1 km, run direction changes every 2-4 (sometimes 6) hours.
- ↑ "201608 WBP WABP overall.pdf" (PDF). Archived from the original (PDF) on 2017-06-23. பார்க்கப்பட்ட நாள் 2018-10-29.