18-எலக்ட்ரான் விதி

18-இலத்திரன் விதி (18-electron rule, 18-எலக்ட்ரான் விதி) என்பது கரிமஉலோக சேர்மங்களில் நிலையான உலோக அணைவுச் சேர்மங்களைக் கண்டறியப் பயன்படுத்தப்படுகிறது. இவ்விதி முதன் முதலில் 1921 ஆம் ஆண்டு அமெரிக்க வேதியியலாளர் இர்விங் லாங்மூர் என்பவரால் முன்மொழியப்பட்டது.[1]

இடைநிலை உலோகத் தனிமங்களில் ஒன்பது இணைதிறன் சுற்றுப்பாதைகளை (ஒரு s சுற்றுப்பாதை, மூன்று p சுற்றுப்பாதைகள் மற்றும் ஐந்து d சுற்றுப்பாதைகள்) உடைய தனிமங்கள் 18 இலத்திரன்களை, பிணைப்பு அல்லது பிணைப்பில்லா இலத்திரன் சோடிகளாகப் பகிர்ந்து கொள்கின்றன. இந்த ஒன்பது அணுவகச் சுற்றுப்பாதைகளும், ஈந்தணைவி சுற்றுப்பாதைகளும் சேர்ந்து ஒன்பது மூலக்கூறு சுற்றுப்பாதைகளை உருவாக்குகின்றன. இவை உலோக-ஈனி பிணைப்பு அல்லது பிணைப்பிலா பிணைப்பினை உருவாக்குகின்றன. 18 இலத்திரன்களைப் பெற்றுள்ள உலோக அணைவுச்சேர்மங்கள், மந்தவாயுக்களின் இலத்திரன் அமைப்பினைப் பெறுகின்றன. இடைநிலைத் தனிமங்கள் அல்லாத அணைவுச் சேர்மங்களுக்கு இவ்விதி பயன்படுவதில்லை.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Langmuir, I. (1921). "Types of Valence". Science 54 (1386): 59–67. doi:10.1126/science.54.1386.59. Bibcode: 1921Sci....54...59L. 
  2. Jensen, William B. (2005). "The Origin of the 18-Electron Rule". J. Chem. Educ. 82 (1): 28. doi:10.1021/ed082p28. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=18-எலக்ட்ரான்_விதி&oldid=2379859" இலிருந்து மீள்விக்கப்பட்டது