1859 சூரியப் புயல்

1859 சூரியப் புயல் 1859 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதலாம் இரண்டாம் திகதிகளில் ஏற்பட்ட சூரியப் புயலினைக் குறிக்கும். இப்புயல் பூமியின் காந்தசக்தியினைப் பாதித்தது. இச்சூரியப்புயலே பூமியினைத் தாக்கிய மிகப்பெரிய புவிக்காந்தப் புயல் ஆகும். இதனை ஹரிங்டன் நிகழ்வு[1] எனவும் அழைக்கப்பட்டது. இப்புயலானது பத்தாம் சூரியச் சுழற்சிக்காலத்தில் இடம்பெற்றது. இப்புயலின் போது உலகம் பூராகவும் சோதி தென்பட்டடது. குறிப்பாக கரீபியன் தீவுப் பகுதிகளிலும் ரொக்கி மலைத் தொடர்ப் பகுதியிலும் மிகவும் பிரகாசமாக இச்சோதி தென்பட்டது.Green, J.; Boardsen, S.; Odenwald, S.; Humble, J.; Pazamickas, K. (2006). "Eyewitness reports of the great auroral storm of 1859". Advances in Space Research 38 (2): 145–154. doi:10.1016/j.asr.2005.12.021. Bibcode: 2006AdSpR..38..145G. [2] இச்சொதியினால் இரவு நேரத்தினை காலை நேரமாகா மாற்றி ஓர் பாரிய தோற்ற மயக்கத்தை அளித்ததுடன் மட்டுமன்றி இப்பிரதேசங்களில் வசித்து வந்த மக்கள் தமது காலை உணவுகளையும் தயாரிக்கத் தொடங்கினார்கள் என செய்திகள் குறிப்பிடுகின்றன.[3]

இதன் காரணமாக வட அமெரிக்கா, ஐரோப்பா முழுவதும் தொலைத்தந்திச் சேவைகள் பாதிக்கப்பட்டன.[4] அவற்றுள் சில தாமாகவே செய்திகள் அனுப்பியதுடன், சில தீப்பற்றி எரிந்தன.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=1859_சூரியப்_புயல்&oldid=2014040" இலிருந்து மீள்விக்கப்பட்டது