1883 கொட்டாஞ்சேனைக் கலவரம்
கொட்டாஞ்சேனைக் கலவரம் (Kotahena riots) என்பது இலங்கையில் 1883 ஆம் ஆண்டு கொழும்பு நகரில் கொட்டாஞ்சேனைத் தெருக்களில் பௌத்தரும், கத்தோலிக்கரும் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக் கொண்ட ஒரு நிகழ்வு ஆகும்.[1] இலங்கையில் இரு இனங்களுக்கிடையில் இடம்பெற்ற முதலாவது மோதலாகவும் இது கொள்ளப்படுகின்றது.[2]
பௌத்தர்களின் மதமாற்றம்
தொகுகிறித்தவ நிறுவனங்களின் மிசனரி நடவடிக்கைகளால் பௌத்தர்கள் மனவேதனை அடைந்தனர். கிறித்தவர்கள், பௌத்தர்கள் என்ற சமய வேறுபாடு ஒருபுறமிருக்க பௌத்த சிங்கள எழுச்சியாளர்களை கிறித்தவருக்கெதிராக தூண்டிய விடயம் கிறித்தவர்களின் அரசியல், பொருளாதார அந்தஸ்து உயர்ந்த நிலையில் இருந்தது என்ற காரணத்தையே பெரிதும் ஆதாரமாகக் கொள்கின்றனர்.
பௌத்த மறுமலர்ச்சி இயக்க எழுச்சி
தொகுபௌத்த மறுமலர்ச்சி இயக்கங்கள் எழுச்சிபெற கிறித்தவ எதிர்ப்புணர்வு மக்கள் மத்தியில் பரப்பப்பட்டது. பௌத்த இனத்தைச் சேர்ந்த சிறு வணிகர்கள், அரச உத்தியோகத்தர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்ற பிரிவினர் பௌத்த எழுச்சியை ஆதரித்து கிறித்தவ மேலான்மைக்கெதிராக செயல்பட்டனர்.
மத உணர்வுகள் தூண்டப்படல்
தொகு1883 கலவரத்தின் முன்னர் மத உணர்ச்சிகள் தூண்டப்பட்டன. அதற்கான செயல்வடிவங்களும் தரப்பட்டன. மிட்டுவத்தை குணானந்ததேரர், ஈஸ்டர் பண்டிகைகளின்போது கொட்டாஞ்சேனை கிறித்தவர்களின் புனித தேவாலயத்திற்கு அருகில் பௌத்த வழிபாட்டு நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்து நடத்தியதிலிருந்தே இரு சமயப்பிரிவினரும் கொழும்பு வீதியில் அன்று மோதிக் கொண்ட சம்பவம் நடந்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Sunday Times On The Web - Plus". www.sundaytimes.lk. Retrieved 2025-01-20.
- ↑ "வதந்திகளால் சிதைக்கப்பட்ட தீவு". thinakkural.lk (in ஆங்கிலம்). Retrieved 2025-01-20.
உசாத்துணை
தொகு- அனஸ் எம். எஸ். எம், அமீர்தீன். வீ, வஸீல் ஏ. ஜே. எல் - இலங்கையில் இனக்கலவரங்களும் முஸ்லிம்களும், மே 2003 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-97264-2-0
- ஆனந்தகுருகே டப்ளியு. பீ. - தர்மபாலலிப்பி (சிங்கள மூலம்) 1965
- N. Robert Kearney (1970) - The 1915 Riots in Ceylon in The Jurnal of Asian Studies Vol XXIX Nov. 2 Feb.