1962 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல்
இந்தியாவின் 3வது குடியரசுத் தலைவர் தேர்தல்
இந்தியக் குடியரசின் மூன்றாவது குடியரசுத் தலைவர் தேர்தல் 1962 இல் நடைபெற்றது. 1952 முதல் துணைக் குடியரசுத் தலைவராக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், இத்தேர்தலில் வெற்றி பெற்று குடியரசுத் தலைவரானார்.
| ||||||||||||||||||||
| ||||||||||||||||||||
|
பின்புலம்
தொகுமே 7, 1962ல் இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. 1950 முதல் குடியரசுத் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் ஓய்வு பெற்றதால் இத்தேர்தலில் போட்டியிடவில்லை. குடியரசுத் துணைத் தலைவராக பத்தாண்டுகள் பதவி வகித்திருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளராக ஏற்றுக் கொண்டன. கட்சி சார்பற்ற வேட்பாளராகவே அவர் போட்டியிட்டார். மேலும் இரு சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிட்டனர். மிகப்பெரும்பாலான கட்சிகளின் ஆதரவையும் மதிப்பையும் பெற்றிருந்த ராதாகிருஷ்ணன் 98.2 % வாக்குகளுடன் எளிதில் வெற்றி பெற்றார்.
முடிவுகள்
தொகுவேட்பாளர் | வாக்காளர் குழு வாக்குகள் |
---|---|
சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை | 5,53,067 |
சவுதிரி ஹரி ராம் | 6,341 |
யமுனா பிரசாத் திரிசூலியா | 3,537 |
மொத்தம் | 5,62,945 |