1971 கோலாலம்பூர் வெள்ளம்

1971 கோலாலம்பூர் வெள்ளம் (1971 Kuala Lumpur floods) மலேசியாவில் 1971 ஆம் ஆண்டு சனவரி மாதம் ஏற்பட்ட மிகப்பெரிய ஒரு பேரழிவு நிகழ்வாகும். கடுமையான பருவ மழையின் விளைவாக இவ்வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.[1] இதனால் கிளாங்கு, பாட்டு, மற்றும் கோம்பாக் நதிகளில் அபாய அளவைத்தாண்டி வெள்ளம் பெருகியது.[2] 32 பேர் இப்பேரழிவினால் கொல்லப்பட்டனர். 180,000 பேர் பாதிக்கப்பட்டனர்.[3][4] மலேசியப் பிரதமர் துன் அப்துல் இரசாக் மேற்கு மலேசியாவில் தேசிய பேரிடர் நிலையை அறிவித்தார்.[4]

1926 ஆம் ஆண்டுக்குப் பிறகு மலேசியாவில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளம் என 1971 கோலாலம்பூர் வெள்ளம் கருதப்பட்டது.[5] இவ்வெள்ளத்தின் விளைவாக கோலாலம்பூர் வெள்ளத் தணிப்புத் திட்டம் அமைக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள் தொகு

மேலும் வாசிக்க தொகு

  • Chronicles of Malaysia (1957-2007)
"https://ta.wikipedia.org/w/index.php?title=1971_கோலாலம்பூர்_வெள்ளம்&oldid=3620927" இலிருந்து மீள்விக்கப்பட்டது