1972 ல் இலங்கையில் சனாதிபதி

மே 22 1972 ல் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட முதலாம் குடியரசு அரசியலமைப்பின் கீழ் இலங்கைத் தலைவராக சனாதிபதிப் பதவி ஏற்படுத்தப்பட்டது. இதற்கு முன்னைய சோல்பரி அரசியலமைப்பில் மகா தேசாதிபதியால் புரியப்பட்ட கடமைகளில் பெரும்பாலானவை சனாதிபதியால் புரியப்பட்டது. இங்கு முக்கிய மாற்றமாக சோல்பரி அரசியலமைப்பின் கீழ் நாம நிர்வாகமாகக் காணப்பட்ட மகாதேசாதிபதி (இலங்கை) பிரித்தானிய முடியால் நியமிககப்படுவார். இதனால் அவர் பிரித்தானிய முடிக்கு பொறுப்புச் சொல்ல வேண்டியவராக இருந்தார். ஆனால், 1972ம் ஆண்டு முதலாம் குடியரசு அரசியலமைப்பின் கீழ் சனாதிபதியை இலங்கைப் பிரதமர் நியமிப்பார். இவர் இலங்கைப் பிரதமருக்கும், மந்திரி சபைக்குப் பொறுப்புக் கூறக்கூடியவர். ஆகவேதான் சனாதிபதி நாம நிர்வாகியாகக் கருதப்பட்டார்.

சனாதிபதியின் தன்மைகள், தத்துவங்கள்

தொகு

அரசியலமைப்பின் 7ம் அத்தியாயம் 19, 20, 21ம் உறுப்புரைகள் குடியரசின் சனாதிபதியின் தன்மைகள், தத்துவங்கள் என்பவற்றைக் குறிப்பிடுகின்றன.

19ம் உறுப்புரை

இலங்கைக் குடியரசின் சனாதிபதி ஒருவர் இருத்தல் வேண்டும்.

20ம் உறுப்புரை

சனாதிபதி ஆட்சித்துறைத் தலைவரும், ஆயுதம் தாங்கிய படைகளின் படைத்தலைவருமாவார்.

21ம் உறுப்புரை

அவர் போர், சமாதானம் என்பவற்றைப் பிரகடனம் செய்யவும். தேசிய அரசுப் பேரவையைக் கூட்டவும், கூட்டத் தொடர்களை நிறுத்தவும், கலைக்கவும் அதிகாரமிக்கவர். முதலமைச்சரையும், அமைச்சரவைக்கான பிரதியமைச்சர்களையும் அவரே நியமிப்பார். மேலும், இலங்கைக் குடியரசின் பகிரங்க இலச்சனையைக் காப்பில் வைத்தும் இருப்பார்.

சனாதிபதி நியமனம்

தொகு

குடியரசு சனாதிபதியின் நியமனமும், அவர் பதவியேற்றலும் அரசியலமைப்பின் 25வது உறுப்புரையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய அரசுப் பேரவையின் உறுப்பினரைத் தெரியும் நோக்கத்திற்கான தேர்தல் ஒன்றில் தேருனரொருவராவதற்குத் தகுதியுடைய பிரசை எவரும் இலங்கைக் குடியரசின் சனாதிபதிப் பதவிக்கு முதலமைச்சரால் பெயர் குறிப்பிடலாம்.அவ்விதம் பெயர் குறிப்பிட்ட ஆள் மிகவுயர்ந்த மேன்முறையீட்டு நீதிமன்ற முதன்மை நீதிபதி முன்னர் அல்லது அந்நீதிமன்றத்தின் நீதிபதியொருவர் முன்னிலையில் சத்தியம் செய்து கொள்வதன்மேல் இலங்கைக் குடியரசின் சனாதிபதியாக பதவி மேற்கொள்வார். (இதன்படி சனாதிபதியை பிரதம மந்திரியே தெரிவுசெய்வார் என்பது புலப்படுகிறது. இலங்கையில் முதலாவது சனாதிபதியாக வில்லியம் கொப்பல்லாவ தெரிவு செய்யப்பட்டார்.)

பதவிக்காலம்

தொகு

இது பற்றி அரசியலமைப்பில் 26ம் உறுப்புரை பின்வருமாறு கூறுகின்றது. சனாதிபதியின் பதவிக்காலம் 4 ஆண்டுகளாகும். ஆயினும், இக்கால எல்லை கழியினும்கூட அடுத்துவரும் சனாதிபதி அவரது பதவியை ஏற்கும் வரை தொடர்ந்தும் சனாதிபதிப் பதவியை வகித்தல் வேண்டும்.

சனாதிபதிப் பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பங்கள்

தொகு

(26ம் உறுப்புரை 2ம் உப பிரிவு)

அ. சனாதிபதி இருக்குமிடத்து அல்லது,

ஆ. இராஜினாமாச் செய்யுமிடத்து

. உளப்பலவீனம் அல்லது உடற்பலவீனம் காரணமாக சனாதிபதி அவரது பதவியின் பணிகளைப் புரிய இயலாதவராகிவிட்டார் என முதலமைச்சர் தீர்மானிக்குமிடத்து,

ஈ. முதலமைச்சராற் பிரேரிக்கப்படுவதான சனாதிபதிக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைத் தீர்மானம் ஒன்றைத் தேசிய அரசுப் பேரவை நிறைவேற்றுமிடத்து,

உ. தேசிய அரசுப் பேரவை உறுப்பினரின் மொத்தத் தொகையில் ஆகக்குறைந்தது அரைபங்கினருக்குக் குறையாதோராற் கையொப்பமிடப்பட்டதும் எவரேனும் உறுப்பினராற் கையொப்பமிடப்பட்டு சபாநாயகருக்கு முகவரியிடப்பட்டதுமான எழுத்திலான அறிவித்தலொன்றின் மூலம் கொண்டுவரப்படும் சனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைத் தீர்மானமொன்றை (சமுகமாயிராதோர் உட்பட) தேசிய அரசுப் பேரவை உறுப்பினர்களின் மொத்த தொகையில் ஆகக் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கினரின் வாக்குக் கொண்டேனும் தேசிய அரசுப் பேரவை நிறைவேற்றுமிடத்து

  • சனாதிபதியின் அந்தஸ்தும், அதிகாரமும் மகாதேசாதிபதியை ஒத்தது. (ஆனால் மகா தேசாதிபதியின் சில கடமைகளை நேரடியாக நிறைவேற்றலாம்)
  • தேசிய அரசுப் பேரவை ஆக்கும் சட்டங்களுக்கு சனாதிபதியின் அங்கீகாரம் பெறவேண்டியதில்லை. அவர் நிறைவேற்றிய, நிறைவேற்றாது விட்ட எந்தவொரு விடயம் சம்பந்தமாகவும் கேள்வி கேட்க முடியாது.
  • இவரின் செயற்பாடு தொடர்பாக இவருக்கெதிராக வழக்குத் தொடரவும் முடியாது. இவர் அமைச்சரவையின் ஆலோசனைப்படி செயலாற்றுவதால் அமைச்சரவையே இறுதிப் பொறுப்புக் கூறும்.

கடமைகளும், அதிகாரங்களும்

தொகு

சனாதிபதியின் கடமைகளையும், அதிகாரங்களையும் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.

சட்டத்துறை சார்ந்த அதிகாரங்களும், கடமைகளும்

தொகு

1. தேசிய அரசுப் பேரவையைக் கூட்டல், கலைத்தல், ஒத்தி வைத்தல்

2. சடங்கு ரீதியான இருக்கைகளுக்கு தலைமை விகத்தல்

3. அரச கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்தல்.

4. பொது இலட்சினையை வைத்திருத்தல் பிரயோகித்தல்.

5. அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தல்.

6. பொதுத் தேர்தலின் பின் அரசாங்கத்தை அமைத்தல்.

ஆ. நிர்வாகத்துறை சார்ந்த அதிகாரங்களும், கடமைகளும்

தொகு

1. போர், சமாதானம் என்பவற்றைப் பிரகடனப்படுத்தல்.

2. பிரதமர், அமைச்சர்கள்ää பிரதியமைச்சர்கள் போன்றோரை நியமித்தல்.

3. அரசாங்கசேவை செயலாளர்கள், உயர் அதிகாரிகள், இராணுவம் தளபதி ஆகியோரை நியமித்தல்.

4. கணக்காளர் நாயகத்தை நியமித்தல்

5. வெளிநாட்டுத் தூதுவர்கள் உயர்ஆணையாளர்கள் பூரண அதிகாரம் பெற்ற முகவர்கள், இராஜதந்திரிகள் போன்றோரை நியமித்தலும் வரவேற்றலும்

6. அரசாங்க சேவை ஆலோசனை சபை, அரசாங்க சேவை ஒழுக்காற்று சபை உறுப்பினர்களை நியமித்தல்

7. கெபினட் செயலாளர்கள், பாராளுமன்றச் செயலாளர் ஆகியோரை நியமித்தல்

இ. நீதித்துறை சார்ந்த அதிகாரங்களும், கடமைகளும்

தொகு

1. உயர்நீதிமன்ற நீதியமைச்சர்களையும், மேல்நீதிமன்ற நீதியமைச்சர்களையும் நியமித்தல்

2. நீதித்துறை நாயகத்தைத் தெரிவு செய்தல்

3. நீதிச்சேவை ஆணைக்குழு உறுப்பினர்களை நியமித்தல்.

4. நீதிச்சேவை ஒழுக்காற்று உறுப்பினர்களை நியமித்தல்

5. குற்றவாளிகளை மன்னித்தல்

ஆதாரம்

தொகு
  • 1972 முதலாம் குடியரசு அரசியலமைப்பு

வெளி இணைப்புகள்

தொகு