1984 தெற்காசிய விளையாடுப் போட்டிகள் அல்லது முதலாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் (1st SAF Games) நேபாளத் தலைநகர் கத்மண்டுவில் 1984 செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 23 வரை தொடர்ச்சியாக ஆறு நாட்கள் நடைபெற்றது[1]. முதற்தடவையாக நடைபெற்ற இப்போட்டியில் ஐந்து விளையாட்டுப் பிரிவுகளில் நடத்தப்பட்டது. இப்போட்டியில் இந்தியாவில் இருந்து 113 பேரும், இலங்கையில் இருந்து 42 பேரும் கலந்து கொண்டனர். இலங்கை விளையாட்டு வீரர்கள் ஜுலியன் போலிங் தலைமையில் கலந்துகொண்டனர். இப்போட்டிகளில் இந்தியா அதிக தங்கப் பதக்கங்களை வென்று முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது.
ஒதுக்கப்பட்ட பதக்கங்கள்
தொகு
- போட்டியில் ஒதுக்கப்பட்ட தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை - 62
- வெள்ளிப் பதங்களின் எண்ணிக்கை - 62
- வெண்கலப் பதங்களின் எண்ணிக்கை - 61
- மொத்தப் பதக்கங்கள் -185