1998 பிரான்கோட் படுகொலைகள்
ஜம்மு காஷ்மீர் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதல்
1998 பிரான்கோட் படுகொலைகள் (1998 Prankote massacre) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள பிரான்கோட் மற்றும் தகிகோட் ஆகிய இரண்டு கிராமங்களில் வாழ்ந்த 26 இந்துக்களை குறி வைத்து 17 ஏப்ரல் 1998 அன்று ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் தலை கொய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.[1]
இதனால் இக்கிராமங்களில் வாழ்ந்த 1,000 இந்துக்கள் இம்மாவட்டத்தின் ரியாசி, பௌனி, தன்பல், சாஸ்னா மற்றும் பிற நகரங்களில் புலம்பெயர்ந்தனர்.[2]
இப்படுகொலைக்களுக்கு காரணம் என சந்தேகப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் தீவிரவாதி அப்துல் ஹக் எனும் ஜாகங்கீர் பாதுகாப்பு படைகளின் தாக்குதலில் ஏப்ரல், 2008-இல் சுட்டுக்கொல்லப்பட்டான்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kashmir Terrorists Behead 26 Hindus in Prankote". www.jammu-kashmir.com. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2018-05-27.
- ↑ "Jammu averages 50 killings a month". www.rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2018-05-27.
- ↑ "The Tribune, Chandigarh, India - Main News". www.tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2018-05-27.