2002 பில்கிஸ் பானு வழக்கு

2002 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் வன்முறையின் போது பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தை உட்பட 14 பேர் மார்ச் 3-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டனர் . அத்துடன் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்நிகழ்வு தொடரப்பான வழக்குகளே பில்கிஸ் பானு வழக்கு என்று அழைக்கப்படுகின்றன .[1]

வன்முறை தொகு

குஜராத் மாநிலத்தின் தகோத் மாவட்டத்தைச் சேர்ந்த பில்கிஸ் பானு தனது 3 வயது குழந்தை உட்பட குடும்பத்தினர் 16 பேருடன், சபர்வாத் என்ற இடத்தில் இருந்து பானிவேலா என்ற இடத்தை நோக்கி, 2002-ஆம் ஆண்டு மார்ச் 3-ஆம் தேதி பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய கும்பல், பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தை உட்பட 14 பேரை அந்த இடத்திலேயே படுகொலை செய்தது.3 வயது சிறுமி சலீகாவின் தலை கல்லில் அடித்துச் சிதைக்கப்பட்டது. அத்துடன், 6 மாதக் கர்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவையும், 12 பேர் கொண்ட கும்பல் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியது .[2]

வழக்கின் போக்கு தொகு

நிகழ்வு நடந்த மறுநாள் அவர் அகமதாபாத் லிம்கேடா காவல் நிலையத்தில் கூட்டு பலாத்காரம் செய்தவர்களின் பெயர்களையும் வழங்கி புகார் செய்கிறார் . ஆனால் ஒருவரின் பெயர் கூட முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்படவில்லை .[3]

2003 - 2008 தொகு

நிகழ்ச்சி நடந்து ஓராண்டான பிறகு “Summary A” என்ற அறிக்கை தயார் செய்யப்படுகிறது. இதில் முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறது என்று லிம்கேடா மாஜிஸ்ட்ரேட்டால் மார்ச் 25, 2003 நிராகரிக்கப்பட்டு வழக்கு முடிக்கப்பட்டது.[3]

இதைத் தொடர்ந்து அவர் தேசிய மனித உரிமை ஆணையத்தை அணுகுகியதன் விளைவாக அவருக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கு மூத்த வழக்கறிஞரான ஹரிஸ் சால்வேயை ஆணையம் பணித்தது. ஜுலை, 2004 இல் , இந்த வழக்கு குஜராத்தில் நடந்தால் விசாரணையில் நியாயம் கிடைக்காது என்பதை உணர்ந்த பானு, வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தை நாடினார். பானுவின் முறையீட்டை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், வழக்கை மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது. [4][5]அங்கு வழக்கை விசாரித்த மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி யு.டி. சால்வி, 2008-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி தீர்ப்பளித்தார். [3]

2008 ஆம் ஆண்டு தீர்ப்பின் விவரங்கள் தொகு

யு.டி. சால்வி வழங்கிய தீர்ப்பில் . பில்கிஸ் பானுவை வல்லுறவுக்கு உள்ளாக்கியது; அவருடைய குடும்பத்தினரை கொலை செய்தது உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டிருப்பதாக கூறிய நீதிபதி, ஜஸ்வந்திபாய், கோவிந்த்பாய், சைலேஷ் பட், ராதீஷாம் ஷா, பிபின் ஜோஷி, கேசர்பாய் கோகானியா, பிரதீப் மோர்தியா, பாஹாபாய் வோஹானியா, ராஜன்பாய் சோனி, நித்தேஷ் பட், ரமேஷ் சந்தனா ஆகிய 12 பேரை குற்றவாளிகள் என்று அறிவித்தார்.இவர்களுக்கு இந்திய தண்டனைவியல் சட்டம் 302 (கொலை), 120 பி (சதித் திட்டம்), 149 (குற்றம் செய்யும் நோக்குடன் ஒன்று கூடியது), 376 (2) (இ) (ஜி) (கர்ப்பிணியை வல்லுறவுக்கு உள்ளாக்குதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் ஆயுள் தண்டனையும் வழங்கினார்.[2]

மேல் முறையீடுகள் தொகு

நீதிமன்றத்ததால் தண்டிக்கப்பட்டவர்களில் 11 பேர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதில் முக்கிய குற்றவாளிகளின் தண்டனையை அதிகரிக்க வேண்டும் என்றும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட 7 பேரையும் குற்றவாளிகள் என்று அறிவிக்க வேண்டும் என்றும் சிபிஐ மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.[3]

2017 ஆம் ஆண்டு தீர்ப்பின் விவரங்கள் தொகு

இரண்டு மேல்முறையீகள் மீதான தீர்ப்பை மும்பை உயர்நீதிமன்றம் வழங்கியது. இதில் குற்றம் சாட்டப்பட்ட 19 பேர் மீதான குற்றச்சாட்டை மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. தண்டனை வழங்கப்பட்ட 11 பேர் மீதான தண்டனையை உறுதி செய்தது. ஏழு காவல்துறை அதிகாரிகள் மற்றும் இரு அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட பேர்கள் ஆவணங்களை திருத்தியதற்கும் சாட்சியங்களை மிரட்டிக் கலைத்தற்குமான குற்றச்சாட்டை உறுதி செய்தது (குற்றம் சாட்டப்பட் ஒருவர் மரணமடைந்திருந்தாலும் மெண்டலாக நடித்து ஏமாற்ற நினைத்த மருத்துவரும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருக்கிறார். [3]

மேற்கோள்கள் தொகு