2009ம் ஆண்டு தமிழர் உரிமைப் போர் (கனடா)

இலங்கை அரசின் தமிழர் இனவழிப்பு நடவிடிக்கைகளை கண்டித்து அதற்கு எதிராக தொடர்ச்சியாக எதிர்ப்புப் போராட்டங்கள் கனடாவில் நடைபெற்றுவருகின்றன. சனவரி 30, 2009 அன்று ரொறன்ரோ, மொன்றியால், கல்கிறி உட்பட பல இடங்களில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. 12 தொடக்கம் இரவு வரை இந்தப் போராட்டம் நடைபெற்றது. பல்லியரக்காண மக்கள், குறிப்பாக இளையோர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டார்கள். டொரன்ரோவில் மட்டும் 45 000 மக்களுக்கு மேல் பங்ககு கொண்டதாக ரொறன்ரோ ஸ்ரார் செய்தி வெளியிட்டுள்ளது.[1]

இலங்கை உள்நாட்டுப் போருக்கு எதிராக கனடாவில் எதிர்ப்பு
எதிர்ப்பாளர்கள், கனடா
தேதி2009 (கி. நே. வ)
அமைவிடம்
கனடா
இலக்குகள்இலங்கை உள்நாட்டுப் போரை நிறுத்தல், ஈழத்தமிழர் உரிமைகளை மீழமைத்தல், இலங்கை அரசின் போர்க்குற்றங்களை விசாரணை செய்தல்
முறைகள்வன்முறையற்ற எதிர்ப்பு, மாணவர் எதிர்ப்பு, வேலை எதிர்ப்பு, மறியல், ஊர்வலம், இணையச் செயற்பாடு, மனிதச் சங்கிலி, உண்ணாவிரதம்

ரொறன்ரோ மையப் பகுதியானா யூனியன் நிலையம் அமைந்துள்ள "பிரண்ட் இசுட்ரீட் வெசுட்டு" (Front Street West) ஒரு பகுதி மூடப்பட்ட, அங்கு பல்லாயிரக்காண மக்கள் கோசம் எழுப்பி, உணர்ச்சிமயப்பட்டு நின்றார்கள். அந்த வீதியின் ஒரு பெரும் பகுதி நீட்டாக மக்கள் நின்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

ஊடகங்களின் கவனயீர்ப்பு

தொகு

யூனியன் நிலையத்தை அண்மித்து கனடிய ஓலி/ஒளி பரப்புக் கூட்டுத்தாபனம், குளோபில் மெயில், சிட்டி டிவி உட்பட பல ஊடக நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களுக்கு முன்னர் கூட்டாக நின்று பலர் கோசம் எழுப்பு கவனம் பெற முயன்றனர். அனேக ஊடக நிறுவனங்கள் இந்த நிகழ்வுக்கு முக்கியத்துவம் குடுத்து செய்தி வெளியிட்டனர்.

எழுப்பப்பட்ட கோசங்கள்

தொகு
  • Sri Lanka, Stop the War.
  • We Want, Justice.
  • We Want, Freedom.
  • Canada, Help Us.

படக்காட்சியகம்

தொகு

இவற்றையும் பாக்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. As many as 45,000 line downtown streets to beg for help in Sri Lanka's escalating civil war [1] Lesley Ciarula Taylor Jan 31, 2009