2010 விசுவமடு கும்பல்-வல்லுறவு வழக்கு
2010 விசுவமடு கும்பல்-வல்லுறவு வழக்கு என்பது இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்து விசுவமடு பகுதியில் இரண்டு தமிழ்ப் பெண்கள் மீது நடத்தப்பட்ட கும்பல்-வல்லுறவு குறித்தான வழக்காகும்.[1][2][3]
தீர்ப்பு விவரம்
தொகுராணுவ வீரர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு, 30 ஆண்டுகால கடுஞ்சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது[1].
தண்டனை விவரம்
தொகு- இரண்டு குழந்தைகளின் தாயாகிய பெண்ணை கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றத்திற்காக நால்வரும் தலா 20 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். ஐந்து பிள்ளைகளின் தாயாகிய பெண்ணை பாலியல் முறைகேடுக்கு உட்படுத்திய குற்றத்திற்காக 5 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
- வல்லுறவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக 5 லட்ச உரூபாவும், பாலியல் முறைகேட்டால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக ஒரு லட்ச ரூபாவும் வழங்க வேண்டும். இழப்பீடுகளை செலுத்தத் தவறும் பட்சத்தில் குற்றவாளிகள் ஒவ்வொருவரும் 3 வருட கடூழியச் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
- கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு 25 ஆயிரம் உரூபா தண்டப்பணமும், பாலியல் முறைகேட்டிற்கு 10 ஆயிரம் உரூபா தண்டப்பணமும் செலுத்த வேண்டும். இதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் குற்றவாளிகள் ஒவ்வொருவரும் 2 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
- தீர்ப்பின்படி, குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் அதிகபட்சமாக 30 ஆண்டுகள் குற்றவாளிகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்[4].
தீர்ப்பு குறித்தான ஊடகங்களின் பார்வை
தொகுவழக்கத்திற்கு மாறான ஒரு நடவடிக்கை (In an unusual move) என தீர்ப்பு குறித்து பிபிசி தெரிவித்தது. பாலியற் குற்றங்களுக்காக பாதுகாப்பு வீரர்களின் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது இலங்கையில் மிகவும் அரிதானது (extremely rare) எனவும் பிபிசி தெரிவித்தது[5].
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "கூட்டு பாலியல் வல்லுறவு: 4 ராணுவத்தினருக்கு 30 ஆண்டு சிறை". பிபிசி தமிழோசை. 7 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 10 அக்டோபர் 2015.
- ↑ "இராணுவ சிப்பாய்களுக்கு 30 ஆண்டு சிறை". தினகரன். 8 அக்டோபர் 2015. Archived from the original on 2015-10-09. பார்க்கப்பட்ட நாள் 10 அக்டோபர் 2015.
- ↑ "இராணுவத்தின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக அதியுச்ச தண்டனை : இளஞ்செழியன்". உதயன். 7 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 10 அக்டோபர் 2015.
- ↑ "விசுவமடு கூட்டுப்பாலியல் வல்லுறவு வழக்கு: 4 இராணுவ சிப்பாய்களுக்கு 30 ஆண்டுகள் கடூழியச் சிறை : இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பு". உதயன். 7 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 10 அக்டோபர் 2015.
- ↑ "Four Sri Lankan soldiers convicted of raping Tamil woman". பிபிசி. 7 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 10 அக்டோபர் 2015.