2011 யெமனிய எதிர்ப்புப் போராட்டங்கள்

2011 யெமனியப் புரட்சி (2011 Yemeni protests) துனீசியப் புரட்சியின் துவக்க காலத்திலேயே தொடங்கி 2011 எகிப்திய புரட்சி [1] மற்றும் பிற 2011 அரபுலக போராட்டங்களின் காலத்திலேயே இணையாக எழுந்தது. துவக்கத்தில் வேலையின்மை, பொருளாதாரநிலை, ஊழல் குறித்தே போராட்டங்கள் நடந்தன[2] யெமன் நாட்டு அரசியலமைப்பை மாற்றும் அரசின் திட்டத்திற்கு எதிராகவும் போராட்டங்கள் நிகழ்ந்தன. எழுச்சியின் உச்சகட்டமாக குடியரசுத் தலைவர் அலி அப்துல்லா சாலேயின் பதவி விலகலை வற்புறுத்துமளவிற்கு போராட்டங்கள் சென்றுள்ளன.

யெமனியப் போராட்டக்காரர்கள் பெப்ரவரி 3, 2011 அன்று சன்ஆவில்
போராளிகள் தலையில் இளஞ்சிவப்பு பட்டை அணிதலும் இளஞ்சிவப்பு சின்னங்களை தரித்தலும்.

இளஞ்சிவப்பு பயன்பாடு தொகு

யெமனியப் போராட்டக்காரர்கள் தங்கள் வன்முறை சாரா நோக்கத்தைக் குறிக்கவும் "யாசுமின் புரட்சியின்" நினைவாகவும் இளஞ்சிவப்பு தலைப்பட்டைகளை அணிந்திருந்தனர்.[3] எதிர்கட்சித் தலைவரும் சட்டவியலாளருமான சாகி அல்-காதி இளஞ்சிவப்பு அன்பைத் தெரிவிக்கவும் போராட்டங்கள் அமைதியாக நடைபெறும் என்பதைக் குறிக்கவும் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறினார்.[4] போராட்ட கூட்டங்களின் நடுவே தென்பட்ட கூடுதலான இளஞ்சிவப்பு பட்டைகள் எந்தளவு திட்டமிடல் நடந்தேறியுள்ளது என்பதைக் காட்டுவதாக அமைந்திருந்தது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "Yemen protests: Thousands call on president to leave". BBC News. 27 Jan 2011. http://www.bbc.co.uk/news/world-middle-east-12295864. 
  2. "Yemen protests: 'People are fed up with corruption'". BBC News. 27 January 2011. http://www.bbc.co.uk/news/world-middle-east-12298019. 
  3. Finn, Tom (27 January 2011). "Yemenis take to the streets calling for President Saleh to step down". guardian.co.uk. http://www.guardian.co.uk/world/2011/jan/27/yemen-protests-president-saleh. 
  4. 4.0 4.1 Bakri, Nada (January 27, 2011). "Yemen’s Opposition Goes to Code Pink". The New York Times. http://thelede.blogs.nytimes.com/2011/01/27/yemens-opposition-goes-to-code-pink/.