2015 இலாகூர் தொழிற்சாலை பேரழிவு
2015 இலாகூர் தொழிற்சாலை பேரழிவு (2015 Lahore factory disaster) 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று பாக்கித்தான் நாட்டின் இலாகூர் அருகே உள்ள சுந்தர் தொழிற்பேட்டையில் அமைந்திருந்த பொருட்கள் வாங்கும் பை தொழிற்சாலையில் நிகழ்ந்தது.[1] இவ்விபத்தில் குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 150 பேர் இடிபாடுகளில் சிக்கினர். [5][6][2] பாக்கித்தான் இராணுவம், பக்ரியா நகர மீட்புக் குழு ஆகியவற்றின் ஆதரவுடன் சுந்தர் தொழிற்பேட்டை மேலாண்மை வாரியத்தால் மீட்புப் பணிகள் நடைபெற்றன.
தொழிற்சாலையின் தோராய அமைவிடம் | |
நாள் | 4 நவம்பர் 2015 |
---|---|
அமைவிடம் | சுந்தர் தொழிற்பேட்டைக்கு அருகில், லாகூர், பாக்கித்தான்[1] |
புவியியல் ஆள்கூற்று | 31°17′00″N 74°11′10″E / 31.2834°N 74.1860°E |
வகை | தொழிற்சாலை சரிவு |
காரணம் | கட்டுமானம் காரணமாக இருக்கலாம்[2] அல்லது நிலநடுக்க பாதிப்பு[3] |
இறப்புகள் | 45[3] [4] |
காயமுற்றோர் | 100+[3] |
காணாமல் போனோர் | 150 பேர்[2] |
சொத்து சேதம் | தொழிற்சாலை அழிக்கப்பட்டது[2] |
பெரிய மீட்பு நடவடிக்கையில் இராணுவப் பொறியாளர்கள் மற்றும் நகர்ப்புற தேடல் மற்றும் மீட்புப் பணியாளர்கள் அடங்கிய குழு ஈடுபட்டது. [2][3] இடிபாடுகளில் சிக்கியவர்களிடமிருந்து கைபேசிகள் மூலம் செய்திகள் பெறப்பட்டன. நவம்பர் 4 ஆம் தேதி நிலவரப்படி, சரிவு ஏற்பட்ட இடத்திற்கு கனரக இயந்திரங்களை கொண்டு செல்வதில் ஏற்பட்ட சவால் மீட்பு முயற்சியில் தடையாக இருந்தது.
இப்பேரழிவு அனைத்து தொழிற் பேட்டையின் செயல்பாடு மற்றும் மேலாண்மை மற்றும் அவை பின்பற்றும் விதிகளின் மீது ஒரு முக்கிய விளைவை ஏற்படுத்தியது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Pakistan Lahore factory collapse: Hopes dim for survivors". BBC. 5 November 2015. பார்க்கப்பட்ட நாள் 7 November 2015.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 AFP (5 November 2015). "Race to find survivors after deadly factory collapse in Pakistan". 24France. பார்க்கப்பட்ட நாள் 5 November 2015.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "Hunt for survivors at collapsed Pakistan building site". Al Jazeera English. 5 November 2015. பார்க்கப்பட்ட நாள் 5 November 2015.
- ↑ Gabol, Imran (7 November 2015). "Lahore factory collapse: Search for survivors continues as death toll climbs to 45". Dawn (Pakistan). https://www.dawn.com/news/1218103/lahore-factory-collapse-search-for-survivors-continues-as-death-toll-climbs-to-45. பார்த்த நாள்: 3 June 2019.
- ↑ Gabol, Imran (5 November 2015). "At least 25 dead as rescuers scrabble through Lahore factory rubble". Dawn. AFP (Pakistan). https://www.dawn.com/news/1217633/at-least-23-dead-as-rescuers-scrabble-through-lahore-factory-rubble. பார்த்த நாள்: 3 June 2019.
- ↑ Shahzad, Muhammad (5 November 2015). "At least 23 killed in Lahore factory collapse; rescue operations underway". The Express Tribune (Pakistan). https://tribune.com.pk/story/985697/at-least-21-killed-in-lahore-factory-collapse-rescue-operations-underway/. பார்த்த நாள்: 3 June 2019.