2016 இந்திய இருப்புப் பாதை நிதியறிக்கை
2016- 2017ஆம் ஆண்டுக்கான இரும்புவழி நிதியறிக்கை பிப்ரவரி 25, 2016 அன்று இந்திய இரும்புவழி அமைச்சர் சுரேஷ் பிரபுவால் தாக்கல் செய்யப்பட்டது[1].
முக்கியக் கூறுகள்
தொகு- பயணியர் பயணக் கட்டணம் உயர்த்தப்படவில்லை.
- கடந்த ஆண்டில் அறிவிக்கப்பட்டவைகளில், 139 அறிவிப்புகள் மீதான செயற்பாடு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
- ஆளில்லா லெவல் கிராசிங்குகள் 2020ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நீக்கப்படும்.
- இந்த நிதியாண்டு முடிவதற்கு முன்னதாக 17,000 பயோடாய்லட்டுகள் தொடருந்து நிலையங்களில் அமைக்கப்படும்.
- வயது முதிர்ந்தவர்களுக்கும், பெண்களுக்குமான இருக்கை இட ஒதுக்கீடு அதிகரிக்கப்படும்.
- வைபை இணைய வசதி 100 தொடருந்து நிலையங்களில் இந்த ஆண்டும், 400 தொடருந்து நிலையங்களில் அடுத்த ஆண்டும் ஏற்படுத்தப்படும்.
- 2000 பயணச்சீட்டுகள்/நிமிடம் எனும் நிலையிலிருந்து 7200 பயணச்சீட்டுகள்/நிமிடம் எனும் நிலைக்கு இணையவழி பயணச்சீட்டுப் பதிவு முன்னேற்றம் கண்டுள்ளது. ஒரு நேரத்தில் 40,000 பயனர்கள் இணையவழி பயணச்சீட்டுப் பதிவை பயன்படுத்த இயலும் நிலை தற்போது 1,20,000 பயனர்கள் என மாறியுள்ளது.
- அனைத்து முக்கியத் தொடருந்து நிலையங்களிலும் சிசிடிவி கண்காணிப்பு படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும்.
- கழிப்பறைகளை சுத்தப்படுத்தக் கோரும் வேண்டுகோள்களை குறுஞ்செய்தி மூலமாக அனுப்பலாம்.
- ஜிபிஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்டு செயற்படும் எண்ணியத் திரைகள் பயணப் பெட்டிகளில் பொருத்தப்படும். அடுத்து வரவிருக்கும் தொடருந்து நிலையங்களை இதன் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
- பயணச் சீட்டை இரத்து செய்யும் வசதி, 139 எனும் உதவித் தொலைபேசி எண் மூலமாக ஏற்படுத்தப்படும்.
தமிழகத்துக்கான திட்டங்கள்
தொகு- டெல்லியில் இருந்து சென்னைக்கு புதிய சரக்கு தொடருந்துப் பாதை அமைக்கப்படும். இதன் மூலமாக நாட்டின் வடக்கு, தெற்குப் பகுதிகள் சிறப்பான முறையில் இணைக்கப்படும்.
- சென்னையில் உற்பத்தியாகும் தானுந்து வாகனங்களை தொடருந்து மூலம் அனுப்பும் வகையில் ‘Auto Hub’ எனப்படும் வாகன நடுவம் அமைக்கப்படும். இம்மாதிரியான வசதி இந்தியாவில் முதல்முறையாக செயற்படுத்தப்படவிருக்கிறது[2].
மேற்கோள்கள்
தொகு- ↑ "LIVE: Railways Minister Suresh Prabhu presents his second Rail Budget". தி இந்து (ஆங்கிலம்). 25 பிப்ரவரி 2016. http://www.thehindu.com/business/budget/live-railway-budget-201617/article8279199.ece?homepage=true. பார்த்த நாள்: 25 பிப்ரவரி 2016.
- ↑ "தமிழகத்துக்கு முக்கிய அறிவிப்பு இரண்டு மட்டுமே". தி இந்து (தமிழ்). 26 பிப்ரவரி 2016. http://tamil.thehindu.com/india/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87/article8283870.ece?homepage=true. பார்த்த நாள்: 26 பிப்ரவரி 2016.