2016 இந்திய ஒன்றியத்தின் வரவு செலவுத் திட்டம்

2016- 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பிப்ரவரி 29, 2016 அன்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்[1].

முக்கியக் கூறுகள்

தொகு

வரிவிதிப்புகள்

தொகு
  • கட்டமைப்பு, வேளாண்மைக்கென செஸ் வரிகள் விதிக்கப்படும்.
  • புகையிலைப் பொருட்கள் மீதான கலால் வரிகள் 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
  • உரூபாய் 10 இலட்சத்துக்கு அதிகமான விலை மதிப்புடைய சொகுசு மகிழுந்துகள் வாங்கும்போது 1% சேவை வரி விதிக்கப்படும்.
  • பெரிய வகை மகிழுந்துகளுக்கு 4% அதி-கொள்ளளவு வரி விதிக்கப்படும்.
  • 5 கோடி உரூபாய்க்குக் குறைவான வருமானமுடைய நிறுவனங்களின்மீது 29% கூடுதல் வரி விதிக்கப்படும்.
  • தங்கம், வெள்ளி நகைகள் மீது 1% கலால் வரி விதிக்கப்படும்.
  • அனைத்து சேவைகளுக்கும் 0.5% கிரிசி கல்யாண் செஸ் விதிக்கப்படும்.
  • பெட்ரோல், எல்பிஜி, சிஎன்ஜி இவைகளில் இயங்கும் சிறிய வகை மகிழுந்துகள் மீது 1% மாசு செஸ் வரி விதிக்கப்படும். இவ்வரியானது, டீசலில் இயங்கும் சிறிய வகை மகிழுந்துகள் மீது 2.5% என இருக்கும்; உயர்வகை மகிழுந்துகளுக்கு 4% என இருக்கும்.

தனி மனிதர்களுக்கான நிதிக் கொள்கைகள்

தொகு
  • வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் ஏதுமில்லை.
  • பணியாளர் வைப்பு நிதிக்கு உரூபாய் 1000 கோடி ஒதுக்கப்படும்.
  • புதிதாக பணிக்குச் சேருபவர்களுக்கு, பணியாளர் வைப்பு நிதிக்கான 8.33% பங்களிப்பினை முதல் மூன்று ஆண்டுகளுக்கு அரசே வழங்கும்.
  • வீட்டு வாடகை செலுத்துதல் மீதான உரூபாய் 20,000 வரிவிலக்கு உரூபாய் 60,000 ஆக உயர்த்தப்படும்.
  • உரூபாய் 35 இலட்சம் வரையிலான வீட்டுக்கடனுக்கு, உரூபாய் 50,000 எனும் அளவில் கூடுதல் வரிவிலக்கு அளிக்கப்படும்.
  • 60 சதுர மீட்டருக்குக் குறைவானப் பரப்பளவு கொண்ட வீடுகள் கட்டப்படும்போது, சேவை வரி விலக்கு அளிக்கப்படும்.
  • குறிப்பிட்ட ஆண்டில், உரூபாய் 1 கோடிக்கு அதிகமான வருமானம் கொண்டோருக்கு 15% அதிகப்படியான வரி விதிக்கப்படும்.

வேளாண்மை

தொகு
  • வேளாண்மை, விவசாயிகள் நலனுக்கென 35,984 கோடி உரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • 28.5 இலட்சம் கெக்டெர் அளவிலான நிலங்கள் நீர்ப்பாசன வசதி பெறும்.
  • அடுத்த மூன்று ஆண்டு காலத்தில், 5 இலட்சம் ஏக்கர் நிலங்களில் அங்கக வேளாண்மை நடைபெற வழிவகை செய்யப்படும்.
  • வேளாண்மைக்கும் ஊர்ப்புற வளர்ச்சிக்குமான தேசிய வங்கியில் நீர்ப்பாசனத்திற்கென 20,000 கோடி உரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கப்படும்.
  • நிலத்தடி நீர் செறிவூட்டலுக்கென 60,000 கோடி உரூபாய் ஒதுக்கப்படும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Highlights of Union Budget 2016-17". தி இந்து (ஆங்கிலம்). 1 மார்ச் 2016. http://www.thehindu.com/business/budget/highlights-of-union-budget-201617/article8295451.ece?homepage=true. பார்த்த நாள்: 2 மார்ச் 2016. 

உசாத்துணை

தொகு

வெளியிணைப்புகள்

தொகு