2020 உசுபெக்கிசுதானில் கொரோனாவைரசுத் தொற்று
2020 உசுபெக்கிசுதானில் கொரோனாவைரசுத் தொற்று (2020 coronavirus pandemic in Uzbekistan) என்பது 2020 ஆம் ஆண்டில் உசுபெக்கிசுத்தான் நாட்டில் கொரோனாவைரசால் ஏற்பட்டு வரும் பாதிப்புகளை குறிப்பதாகும். மே 01, 2020 நிலவரப்படி, உசுபெக்கிசுத்தான்னில் 2,017 பேருக்கு கொரோனாவைரசுத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
2020 உசுபெக்கிசுதானில் கொரோனாவைரசுத் தொற்று 2020 coronavirus pandemic in Uzbekistan | |
---|---|
நோய் | கொரோனாவைரசுத் தொற்று |
தீநுண்மி திரிபு | கோவிட்-19, கடுமையான சுவாச கோளாறு |
அமைவிடம் | உசுபெக்கிசுத்தான் |
முதல் தொற்று | பிரான்சு, துருக்கி, ஐக்கிய இராச்சியம் |
வந்தடைந்த நாள் | 15 மார்ச்சு 2020 (4 ஆண்டுகள், 8 மாதங்கள் மற்றும் 7 நாட்கள்) |
உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் | 2,017 |
குணமடைந்த நோயாளிகள் | 1,096 |
இறப்புகள் | 9 |
உலகளாவிய அபாயம்
தொகுகொரோனாவைரசு தொற்று நோயை உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய தொற்றுநோய் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒரு தொற்றுநோய் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவினால் மட்டுமே அந்நோயை உலகளாவிய தொற்றுநோய் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கும்.
2020 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 28 அன்றைய நிலவரப்படி 190-க்கும் மேற்பட்ட நாடுகளில், 597,000 பேருக்கும் மேலானோர் இத்தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட 27,300 பேர் இப்பெருந்தொற்று நோய்க்கு பலியாகி இறந்துள்ளனர்[1].
கடந்த இரண்டு மாதங்களாக உலக மருத்துவர்கள் பலரும் இந்நோய்த்தொற்றை குறித்து முழுமையாக புரிந்து கொள்ள மட்டுமே இன்னும் முயன்று வருகின்றனர். உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளின் எண்ணிக்கையை எண்ணிப்பார்த்தாலேயே கொரோனாவைரசு தொற்றுநோயின் தீவிரத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
கோவிட்-19 வைரசு பாதிக்கப்பட்டவரின் மூக்கு அல்லது வாயிலிருந்து வெளியேறும் நீர்த்துளிகள் மூலமாகவே கண்ணிமைக்கும் நேரத்தில் அருகில் உள்ளவர்களுக்கு நோயை பரப்பிவிடும் அபாயத்தை கொரோனாவைரசு தனது பலமாக வைத்திருக்கிறது.
காலக்கோடு
தொகு2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் நாள் கொரோனாவைரசுவைரசு தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட முதல் நபர் உசுபெக்கிசுத்தானில் கண்டறியப்பட்டார்.[2] இதன் மூலம் இப்பெருந்தொற்று நோய் உசுபெக்கிசுதானிலும் பரவுவதற்கு வாய்ப்புகள் இருக்குமென உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டுள்ள நபர் பிரான்சிலிருந்து திரும்பிய ஒர் உசுபெக் குடிமகன் ஆவார். உசுபெக்கிசுதானின் சுகாதார அமைச்சகம் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பு கொண்டிருந்த நபர்களின் பட்டியலைத் தயாரித்து வைத்துள்ளது.[3] அவர்களைத் தனிமைப்படுத்தும் திட்டங்களையும் திட்டமிட்டுள்ளது. உசுபெக்கிசுதானில் கொரோனாவைரசு பாதிப்பு அறிவிக்கப்பட்ட பின்னர் கசகசுத்தான் குடியரசுத் தலைவர் காசிம்-யோமார்ட் டோக்காயேவ் கசகசுத்தானில் அவசரகால நிலையை அறிவித்தார். உடனடியாக உசுபெக்கிசுதானுடனான தனது நாட்டு எல்லையை மூடிவிட்டார்.[4]
புள்ளிவிவரம்
தொகு
Source: Gisanddata Maps
மேற்கோள்கள்
தொகு- ↑ "Coronavirus Update (Live): 284,712 Cases and 11,842 Deaths from COVID-19 Virus Outbreak - Worldometer". www.worldometers.info.
- ↑ "Uzbekistan confirms first coronavirus case - govt". Reuters. 15 March 2020. பார்க்கப்பட்ட நாள் 20 March 2020.
- ↑ "Uzbekistan confirms its first coronavirus case". aa.com.tr. பார்க்கப்பட்ட நாள் 15 March 2020.
- ↑ "Kazakhstan, Uzbekistan close borders after first coronavirus cases". National Post (in கனடிய ஆங்கிலம்). Reuters. 15 March 2020. பார்க்கப்பட்ட நாள் 15 March 2020.