2021 அசாம் நிலநடுக்கம்

2021 அசாம் நிலநடுக்கம் (2021 Assam Earthquake) என்பது இந்தியாவில், அசாம் மாநிலத்தில், 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் நாள் இந்திய சீர் நேரம் 07.51 மணிக்கு தேகியாஜுளியிலிருந்து 11 கிமீ (7 மைல்) தூரத்திலுள்ள பகுதியை நிலநடுக்க அளவீட்டில் 6 மதிப்புடைய அளவில் தாக்கிய நில அதிர்வைக் குறிக்கிறது.[4] இந்த நிலநடுக்கம் கவுகாத்தி நகரின் வடக்கே 140 கிமீ (86 மைல்) தொலைவில் 34 கிமீ (21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டது. இதன் விளைவாக இரண்டு உயிரிழப்புகள் மற்றும் குறைந்தது 12 காயங்கள் ஏற்பட்டன.

2021 அசாம் நிலநடுக்கம்
2021 அசாம் நிலநடுக்கம் is located in இந்தியா
2021 அசாம் நிலநடுக்கம்
நிலநடுக்க அளவுMw 6.0[1]
6.4 [2]
ஆழம்34 km (21 miles)
நிலநடுக்க மையம்26°46′52″N 92°27′25″E / 26.781°N 92.457°E / 26.781; 92.457
உரசுமுனைKopili Fault
பாதிக்கப்பட்ட பகுதிகள்வங்காளதேசம், சீனா, மியான்மர், பூட்டான், and இந்தியா
அதிகபட்ச செறிவுVII (Very strong)
பின்னதிர்வுகள்Six. The strongest so far is an Mw 4.7 [3]
உயிரிழப்புகள்2 இறப்பு, 12 காயம்

நிலவியல் அடுக்கமைப்பு தொகு

அசாம் பிராந்தியத்தின் நிலவியலடுக்கின் அமைவானது, இந்தியா, பர்மா மற்றும் யூரேசிய தட்டுகளின் ஒருங்கிணைப்பால் ஆதிக்கத்திற்குள்ளாகின்ற பகுதியாகும். முதன்மை மேற்புற நிலவடுக்கு உந்துவிசை, முதன்மை எல்லைப்புற உந்துவிசை மற்றும் முதன்மை மைய உந்து விசை, முதன்மை இமாலய உந்து விசையின் அனைத்து பக்கவாட்டு விசைகள் ஆகிய அடிப்படை அமைப்புகள் இந்தியாவானது ஆசியாவின் இதரப் பகுதியை நோக்கிய அமுக்க வீதத்தைத் தன்னகத்தே கொண்டவையாக இருக்கின்றன. 1950ஆம் ஆண்டின் மிகப்பெரிய அசாம்-திபெத் நிலநடுக்கம் 8.6 நிலநடுக்க அளவுந்து விசை அளவுடையதாய், மிகப்பெரியதாய் இருந்தது. இந்த நிலநடுக்கமானது, முதன்மை இமாலய உந்து விசை மற்றும் முதன்மை மேற்புற நிலவடுக்கு உந்து விசை ஆகியவற்றில் ஏற்பட்ட சீர்குலைவின் காரணமாய் ஏற்பட்டதாய் இருந்தது.

நிலநடுக்கம் தொகு

 
பூகம்ப தீவிரம் வரைபடம்

இமயமலையின் அடிவாரத்தில் ஒரு மேலோட்டமான ஆழத்தில் சாய்ந்த சறுக்கலின் விளைவாக நிலநடுக்கம் ஏற்பட்டது.[5][6] இந்தியாவின் தேசிய நில அதிர்வு மையத்தின் பகுப்பாய்வில், நிலநடுக்கம் முதன்மை மேற்புரவடுக்கு உந்த விசை அருகில் உள்ள கோப்பிலி ஃபால்ட் வழியாக நழுவியது தெரியவந்தது. இது ஷில்லாங் பீடபூமியின் கிழக்கில் இருந்து, அசாம் பள்ளத்தாக்கு வழியாக மற்றும் பூட்டானில் மொத்தம் 300 கிமீ நீளமும், 30 கிமீ அகலமும் கொண்ட ஒரு வடகிழக்குப் பகுதியின் திடீர் சரிவு ஆகும்.[7] அதன் முதன்மையான நழுவல் உணர்வு வலது பக்க பக்க திடீர் சரிவு ஆகும்.[8]

தாக்கம் தொகு

இந்நிலநடுக்கம் அருகிலுள்ள கட்டிடங்களுக்கு மிதமான பரவலான சேதத்தை ஏற்படுத்தியது. ஆகையால், சரிவுகள் எதுவும் இல்லை.[9] பாதிக்கப்பட்ட கட்டிடங்களில் நாகானில் ஒரு பல்லடுக்கு மாடிக் கட்டிடம் அதன் பக்கவாட்டில் சாய்ந்து அருகிலுள்ள கட்டிடத்தின் மேல் சாய்ந்தது. வீடுகள் மற்றும் வணிக கட்டிடங்களின் சுவர்களிலும் விரிசல் தோன்றியது. செங்கற்கள் விழுந்ததில் ஒரு சில வாகனங்கள் சேதமடைந்தன.[10] நிலச்சரிவு மற்றும் நிலத்தின் சீர்குலைவு அசாமில் பதிவாகியுள்ளது.[11] அருகிலுள்ள பூடானிலும் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது, மேலும் இரண்டு நபர்கள் காயமடைந்தனர்.[12] காம்ரூப் மெட்ரோ மற்றும் நாகான் மாவட்டங்களில் இருவர் நிலநடுக்கத்தால் மாரடைப்பால் இறந்தனர், மேலும் பத்து பேர் காயமடைந்தனர்.[13][14]

மேற்கோள்கள் தொகு

  1. "M 6.0 - 9 km NNW of Dhekiajuli, India". earthquake.usgs.gov. USGS. பார்க்கப்பட்ட நாள் 14 May 2021.
  2. "Strong earthquake of 6.4 magnitude hits Assam". Business Today (India). பார்க்கப்பட்ட நாள் 28 April 2021.
  3. "Explained: In Assam earthquake, reminder of seismic hazard along HFT faultline". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 28 April 2021.
  4. "Northeast India hit by magnitude 6.4 earthquake". The Independent (in ஆங்கிலம்). 2021-04-28. பார்க்கப்பட்ட நாள் 2021-04-28.
  5. "Assam Earthquake: 6.4 magnitude quake, 7 aftershocks jolt Northeast, tremors felt in Bengal". இந்தியா டுடே. பார்க்கப்பட்ட நாள் 28 April 2021.
  6. "Official Website of National Center of Seismology". seismo.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-03.
  7. Kayal, J., Arefiev, S., Baruah, S., Tatevossian, R., Gogoi, N., Sanoujam, M., Gautam, J.L., Hazarika, D., & Borah, D. (2010). "The 2009 Bhutan and Assam felt earthquakes (Mw 6.3 and 5.1) at the Kopili fault in the northeast Himalaya region". Geomatics, Natural Hazards and Risk 1 (3): 273-281. doi:10.1080/19475705.2010.486561. 
  8. Kharita, Akash. "Strong earthquake jolts Assam". Temblor. doi:10.32858/temblor.171. பார்க்கப்பட்ட நாள் 15 May 2021.
  9. "Quake of magnitude 6 strikes India's Assam, damages some buildings". Reuters. 2021-04-28. பார்க்கப்பட்ட நாள் 2021-04-28.
  10. "From damage caused to relief operations, Assam earthquake explained in 10 points". 29 April 2021. https://www.indiatoday.in/coronavirus-outbreak/story/damage-caused-relief-operations-assam-earthquake-1796077-2021-04-29. 
  11. "Cracked roads, tilted buildings: Assam earthquake captured in scary photos, videos". 28 April 2021. https://www.indiatoday.in/india/story/massive-earthquake-assam-buildings-damaged-walls-cracked-photos-videos-1795765-2021-04-28. 
  12. "Earthquake causes structural damage". https://kuenselonline.com/earthquake-causes-structural-damage/. 
  13. "Assam earthquake: At least 10 injured, houses damaged". 29 April 2021. https://indianexpress.com/article/north-east-india/assam/assam-bengal-earthquake-7291892/. 
  14. "Two die of shock after 6.4 magnitude quake in Assam". 28 April 2021. https://www.thehindu.com/news/national/other-states/earthquake-of-magnitude-64-strikes-assam/article34427787.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=2021_அசாம்_நிலநடுக்கம்&oldid=3241436" இலிருந்து மீள்விக்கப்பட்டது