2022 சைபீரிய காட்டுத்தீ
2022 சைபீரிய காட்டுத்தீ (2022 Siberian wildfires) உருசிய நாட்டின் சைபீரியாவில் மே மாதத்தின் தொடக்கத்தில் தொடங்கியது. கிராசுநோயார்சுக்கு மற்றும் அல்டாய் பகுதிகள், இர்குட்சுக்கு , கெமரோவோ, ஓம்சுக், குர்கன் மற்றும் ககாசியா பகுதிகளில் தீயின் அடர்த்தி குவிந்துள்ளது. மே மாதம் 15 ஆம் தேதி நிலவரப்படி தீயின் மொத்த பரப்பளவு சுமார் 20 ஆயிரம் எக்டேர் ஆகும். 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கணக்கிட்டால் தீயின் பரப்பளவு 100 ஆயிரம் எக்டேர்களுக்கும் மேலாகும்.
மே விடுமுறை நாட்களில் சுற்றுலாவின் போது தீயை கவனக்குறைவாக கையாளுதல், மின்கம்பிகள் மற்றும் துணை மின்நிலையங்களின் குறுகிய சுற்றுகள், காய்ந்த புல்லில் தீப்பிடித்தல் போன்றவை தீ ஏற்படுவதற்கான சாத்தியமான காரணங்களாகும்.
மே 11 நிலவரப்படி, 72 குடியிருப்பு பகுதிகளில் உள்ள 1298 கட்டடங்கள் எரிந்தன இதில் 730 குடியிருப்பு கட்டடங்களும் அடங்கும். ஒரு குழந்தை உட்பட குறைந்தது 17 பேர் இறந்துள்ளனர். சுமார் 2,000 பேர் வீடுகளை இழந்து தவித்தனர்.
மே 7 அன்று, கிராசுநோயார்சுக்கு பிரதேசத்தின் ஆளுநர் அலெக்சாண்டர் உசு அவசரகால நிலையை அறிவித்தார். உருசிய அதிபர் விளாடிமிர் புடின், ஆளுநர் அலெக்சாண்டர் உசுவின் அறிக்கைகளைக் கேட்டபின், அவருக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அறிவுறுத்தினார். அவசரகால சூழ்நிலைகள் அமைச்சகம், கைதிகள் மற்றும் உள்ளூர் காலனி ஊழியர்கள் போன்றவர்களை தீயை அணைக்க அனுப்பியது.
2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீதான உருசிய படையெடுப்பிற்காக திசைதிருப்பப்பட்ட படைகள் காரணமாக இத்தீ கட்டுப்பாடற்ற நிலைக்கு சென்றதாக வாதிடப்படுகிறது.[1][2][3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Siberian wildfires burning unchecked because Russian military units are at war". The Independent (in ஆங்கிலம்). 2022-04-24. பார்க்கப்பட்ட நாள் 2022-05-09.
- ↑ Times, The Moscow (2022-05-11). "Wildfires Kill 8 in Siberia". The Moscow Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-16.
- ↑ AFP (2022-05-07). "Two Hundred Homes Ablaze, Deaths in Siberia Fires: Authorities". The Moscow Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-16.
- ↑ Times, The Moscow (2022-04-20). "Public Outrage Mounts as Siberia Forest Fires Spread at Unprecedented Rate". The Moscow Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-16.