2022 பப்புவா நியூ கினி நிலநடுக்கம்
2022 பப்புவா நியூ கினி நிலநடுக்கம் (2022 Papua New Guinea earthquake) 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதியன்று உள்ளூர் நேரப்படி காலை 9:46 மணிக்கு பப்புவா நியூ கினியில் 7.6 அல்லது 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.[1][2][3] அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உயிரிழப்பு மற்றும் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளது. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
நிலநடுக்க அளவு | 7.6 Mww |
---|---|
ஆழம் | 90.0 km (55.9 mi) |
நிலநடுக்க மையம் | 6°15′22″S 146°28′08″E / 6.256°S 146.469°E |
பாதிக்கப்பட்ட பகுதிகள் | பப்புவா நியூ கினி |
அதிகபட்ச செறிவு | VIII (Severe) |
நிலநடுக்கம்
தொகுஇந்த நிலநடுக்கம் உந்தத்திறன் ஒப்பளவு அளவில் 7.6 ஆக இருந்தது. 90.0 கிலோமீட்டர் ஆழத்தில் நிகழ்ந்திருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறுகிறது.[4] இதற்கிடையில், புவிவாய்ப்பு என்கிற அமைப்பு நிலநடுக்க அளவு 7.7 என்றும் 39 கிலோமீட்டர் ஆழத்தில் நிகழ்ந்தது என்றும் அளவிட்டுள்ளது. புவியின் இடை ஆழத்தில் மேற்கு வடமேற்கு-கிழக்கு தென்கிழக்கு மோதல் அல்லது வடக்கு-வடகிழக்கு தள மூழ்கல் அல்லது கிழக்கு-மேற்கு தாக்கம் மற்றும் தெற்கு தளம் அமிழ்தல் போன்ற காரணங்கள் ஒன்றின் விளைவாகும்.[5]
விளைவுகள்
தொகுநிலநடுக்கம் ஏற்பட்ட மையத்தைச் சுற்றியுள்ள 1000 கிலோமீட்டர் சுற்றளவில் பப்புவா நியூ கினியா மற்றும் இந்தோனேசியா கடற்கரை பகுதிகளில் சுனாமி அச்சுறுத்தல் செய்தியை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் வெளியிட்டது.[6] சுனாமி அச்சுறுத்தல் முடிந்துவிட்டதாக பிறகு இம்மையம் அறிவித்தது.[7]
சில உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் சந்தேகிக்கிறது.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "பப்புவா நியூ கினியா தீவில் பூகம்பம்: சுனாமி எச்சரிக்கை". Dinamalar. 2016-12-17. பார்க்கப்பட்ட நாள் 2022-09-11.
- ↑ தினத்தந்தி (2019-05-15). "பப்புவா நியூ கினியாவில் 7.5 அளவில் பயங்கர நிலநடுக்கம் -சுனாமி எச்சரிக்கை". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-11.
- ↑ மலர், மாலை (2019-05-07). "பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்- சுனாமி ஆபத்து இல்லை". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-11.
- ↑ "M 7.6 - 67 km E of Kainantu, Papua New Guinea". earthquake.usgs.gov. ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. 10 September 2022. பார்க்கப்பட்ட நாள் 11 September 2022.
- ↑ "EASTERN NEW GUINEA REG., P.N.G. 2022/09/10 23:46:55 UTC, Mw=7.7". GEOSCOPE Observatory. 10 September 2022. பார்க்கப்பட்ட நாள் 11 September 2022.
- ↑ "TSUNAMI MESSAGE NUMBER 1 NWS PACIFIC TSUNAMI WARNING CENTER HONOLULU HI 2355 UTC SAT SEP 10 2022". Pacific Tsunami Warning Center. 10 September 2022. பார்க்கப்பட்ட நாள் 11 September 2022.
- ↑ "TSUNAMI MESSAGE NUMBER 2 NWS PACIFIC TSUNAMI WARNING CENTER HONOLULU HI 0025 UTC SUN SEP 11 2022". Pacific Tsunami Warning Center. 11 September 2022. பார்க்கப்பட்ட நாள் 11 September 2022.
- ↑ "Strong earthquake detected in Papua New Guinea". அசோசியேட்டட் பிரெசு. 11 September 2022. https://apnews.com/article/earthquakes-papua-new-guinea-climate-and-environment-a21e3974c67cb6db47e9865378204f14.