2022 பிரான்சு வறட்சி

2022 ஆகத்து மாதத்தில் நிலவியது

2022 பிரான்சு வறட்சி (2022 France drought) பிரான்சு நாட்டின் வரலாற்றில் மிகவும் மோசமான வறட்சியாகக் கருதப்படுகிறது.[1] பிரான்சு நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் வரலாறு காணாத அளவிற்கு வறட்சி அதிகரித்துள்ளது. கோடை காலம் தொடங்கியது முதல் நாட்டில் மூன்று முறை வெப்ப அலை வீசியுள்ளது. நாட்டின் பல பகுதிகளிலும் நீர் இருப்பு குறைந்துள்ளதால் விவசாயிகளும், கடும் வறட்சியினால் சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டு பல்வேறு உயிரினங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன என்று கூறி பிரான்சின் பிரதம மந்திரி எலிசபெத் போரன் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.[2]

ஆகத்து மாதத்தில் 100 கிராமங்கள் குடிநீரின்றி தவித்தன.[3] இதனால் 93 பிராந்தியங்களில் நீர் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது.[4] கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவு சூலை மாதத்தில் பிரான்சு நாட்டை தாக்கிய வெப்ப அலைகளால் இவ்வறட்சி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.[5] மேலும் வெப்பம் தொடரலாம் என்பதாலும் மழையின்மை காரணமாகவும் நாடு கடும் வறட்சி எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. Breeden, Aurelien (2022-08-05). "‘Most Severe’ Drought Grips France as Extreme Heat Persists in Europe" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2022/08/05/world/europe/france-drought-europe-heat.html. 
  2. "பிரான்சில் கடும் வறட்சி நிலவுகிறது:பிரதமர் எலிசபெத் போர்னே". தினமணி. https://www.dinamani.com/world/2022/aug/05/severe-drought-in-france-pm-3893246.html. பார்த்த நாள்: 6 August 2022. 
  3. "PM Borne says France going through 'severe' drought, 100 villages out of drinking water" (in en). Le Monde.fr. 2022-08-05. https://www.lemonde.fr/en/environment/article/2022/08/05/french-pm-says-france-s-severe-drought-100-villages-out-of-drinking-water_5992615_114.html. 
  4. "France drought: Parched towns left short of drinking water" (in en-GB). BBC News. 2022-08-05. https://www.bbc.com/news/world-europe-62436468. 
  5. "France's 'most severe' drought leaves towns short of drinking water". ITV News (in ஆங்கிலம்). 2022-08-05. பார்க்கப்பட்ட நாள் 2022-08-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=2022_பிரான்சு_வறட்சி&oldid=3488401" இலிருந்து மீள்விக்கப்பட்டது