2022 பெட்ரோபோலிசு வெள்ளம்
பிப்ரவரி 15, 2022 அன்று, பிரேசிலில் உள்ள பெட்ரோபோலிஸ், ரியோ டி ஜெனிரோவில், கடுமையான மழை வெள்ளம் காரணமாக, நகரத்தில் மண் சரிவுகள் மற்றும் பிற சேதங்களை ஏற்படுத்தியது. இந்தப் பேரிடரில் குறைந்தது 171 பேர் உயிரிழந்தனர். [1]
பின்னணி
தொகுபெட்ரோபோலிஸ் பிரேசிலில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலா நகரமாகும். மேலும், அது விரிவாக்கமடைந்தவுடன், இந்நகரில் வாழ்ந்து வந்த ஏழ்மையான குடியிருப்பாளர்கள் அருகிலுள்ள மலைப்பகுதிகளில் வீடுகள் கட்டி குடியேறத் தொடங்கினர். இதனால் நகரின் இந்தப் பகுதிகளில் காடுகள் அழிந்து, மோசமான வடிகால் வசதி ஏற்பட்டது.பெட்ரோபோலிஸின் உள்ளூர் அதிகாரிகள் 2017 ஆம் ஆண்டில் ஒரு கணக்கெடுப்புக்கு உத்தரவிட்டு மழைப்பொழிவின் போது அழிந்து விடும் அபாயம் கொண்ட 15,240 வீடுகளை அடையாளம் கண்டுள்ளனர். அதிக மழைப்பொழிவு காரணமாக நகரத்தின் சுமார் 18% பகுதி அழிந்துவிடும் அபாயத்தில் உள்ளதாக அறிவித்தனர். இருப்பினும், இந்த அறிக்கையின் மீது நகர நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. [2] [3]
தேசிய இயற்கைப் பேரிடர் எச்சரிக்கை கண்காணிப்பு மையம் (செமடன்) பிப்ரவரி 15ல் வெள்ளம் ஏற்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு புயலின் அளவு குறித்து எச்சரிக்கை விடுத்தது. நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த எச்சரிக்கையானது குடியிருப்பாளர்களை வெளியேற்றுவதற்கு அதிகாரிகளைத் தூண்டியிருக்க வேண்டும். [4]
நிகழ்வு
தொகுபிப்ரவரி 15, 2022 அன்று, பெட்ரோபோலிஸ் நகரம் வழக்கத்திற்கு மாறாக மூன்று மணி நேரத்திற்குள் 258 மில்லிமீட்டர்கள் (10.2 அங்குலம்) மழையைப் பெற்றது. இது முந்தைய 30 நாட்களைக் காட்டிலும் அதிகமாகும். மேலும் 1932 ஆம் ஆண்டிற்குப் பிறகு நகரம் கண்ட மிக மோசமான மழைப்பொழிவாகும். செமடனின் கூற்றுப்படி, அன்று பதிவான மழையில், 250 மி.மீ (9.8 அங்குலம்) மாலை 4:20 மணி முதல் 7:20 மணி வரை பதிவு செய்யப்பட்டது. பிப்ரவரி மாத காலநிலை இயல்பளவானது 185 மில்லி மீட்டர் (7.3 அங்குலம்) ஆகும். 1932 ஆம் ஆண்டில் காலைநிலை அளவீடுகள் தொடங்கியதிலிருந்து, பெட்ரோபோலிஸின் வரலாற்றில் இது மிகப்பெரிய புயல் ஆகும். இதற்கு முன்பு பெய்த மிகப்பெரிய மழையின் அளவானது 24 மணி நேரத்தில் ஆகஸ்ட் 20, 1952 அன்று பெய்த மழையேயாகும். அம்மழையின் அளவானது 168.2 மி.மீ (6.62 அங்குலம்) ஆகும்.[5]
அதிக அளவு மழைப்பொழிவு நகருக்குள் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது, மேலும் மலைப்பகுதியை சீர்குலைத்து, சேற்றுச்சரிவுகளை ஏற்படுத்தியது. [2] நிலச்சரிவுகளால் மகிழுந்துகள் மற்றும் வீடுகள் இழுத்துச் செல்லப்படுவதைக் காட்டும் பேரழிவின் காணொலிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டன.[6] [7] இதுவரை 171 பேர் உயிரிழந்துள்ளனர்.
எதிர்வினைகள்
தொகுபெட்ரோபோலிஸ் நகர்மன்றத்தில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.
ரியோ டி ஜெனிரோ மாகாணத்தின் கவர்னர் கிளாடியோ காஸ்ட்ரோ, நிலைமையை ஒரு போர் மண்டலத்துடன் ஒப்பிட்டார்: "நிலைமை கிட்டத்தட்ட போர் போன்றது. . . மகிழுந்துகள் கம்பங்களில் தொங்கின, கவிழ்ந்தன, நிறைய சேறும் தண்ணீரும் இன்னும் இருக்கிறது." [8] [9]
வெள்ளம் ஏற்பட்ட நேரத்தில் உருசியா மற்றும் அங்கேரிக்கு அரசரீதியான பயணத்தில் இருந்த ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ, நகரத்திற்கு கூட்டுப்பொறுப்புணர்வை வெளிப்படுத்தினார். போல்சனாரோ பிரேசிலுக்குத் திரும்பும்போது பெட்ரோபோலிசுக்குச் செல்வார் என்பது பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது. [10] பிரேசிலிய மத்திய அரசும் நகரத்திற்கு R$2.3 மில்லியன் தருவதாக அறிவித்தது. [11]
மருத்துவ வளங்களை வழங்குவதன் மூலம் நிலைமையைச் சமாளிக்க உதவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 13 அடிப்படை சுகாதாரப் பிரிவுகளும் ஒரு அவசர சிகிச்சைப் பிரிவும் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். [12]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Chuvas em Petrópolis, no Rio de Janeiro, deixam ao menos 171 mortos" [Heavy rains in Petrópolis, Rio de Janeiro, claim at least 171 lives]. CNN Brasil (in பிரேசிலிய போர்ச்சுகீஸ்). 2022-02-20. பார்க்கப்பட்ட நாள் 2022-02-21.
- ↑ 2.0 2.1 "Survivors dig for loved ones as Brazil flood death toll reaches 105". February 17, 2022. பார்க்கப்பட்ட நாள் February 18, 2022 – via The Guardian."Survivors dig for loved ones as Brazil flood death toll reaches 105". Associated Press. February 17, 2022. Retrieved February 18, 2022 – via The Guardian.
- ↑ Berta, Ruben (2022-02-17). "Petrópolis sabia de 15 mil imóveis em risco na área da tragédia desde 2017" [Petrópolis knew since 2017 that fifteen thousand properties in the area were at risk]. noticias.uol.com.br (in பிரேசிலிய போர்ச்சுகீஸ்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-18.
- ↑ Moreira, Matheus (2022-02-16). "Petrópolis deveria ter sido evacuada após alerta há 2 dias, diz especialista". Folha de S.Paulo (in பிரேசிலிய போர்ச்சுகீஸ்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-16.
- ↑ Marcella Duarte (2022-02-17). UOL (ed.). "Petrópolis teve chuva de um mês em poucas horas; veja como medição funciona". பார்க்கப்பட்ட நாள் 2022-02-18.
- ↑ Real, Nayani (2022-02-16). "#Hashtag: Chuva em Petrópolis é associada à crise climática nas redes" [#Hashtag: Rains in Petrópolis is associated to the crisis climate in social media]. Folha de S.Paulo (in பிரேசிலிய போர்ச்சுகீஸ்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-16.
- ↑ Carvalho, Bruna; Couto, Camille (2022-02-16). "Desastre provocado pelas fortes chuvas deixa 104 mortos em Petrópolis (RJ)" [Disaster caused by heavy rains leaves 94 dead in Petrópolis (RJ)]. CNN Brasil (in பிரேசிலிய போர்ச்சுகீஸ்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-17.
- ↑ Rodrigues, Diarlei; Biller, David (2022-02-16). "Death toll rises to 78 from mudslides after storm in Brazil". AP NEWS (in ஆங்கிலம்). Associated Press. பார்க்கப்பட்ட நாள் 2022-02-20.Rodrigues, Diarlei; Biller, David (2022-02-16). "Death toll rises to 78 from mudslides after storm in Brazil". AP NEWS. Associated Press. Retrieved 2022-02-20.
- ↑ "Heavy rains, flooding kill dozens in Brazil's 'Imperial City'" (in en). 2022-02-16. https://www.reuters.com/business/environment/heavy-rain-leaves-least-34-dead-brazils-petropolis-2022-02-16/.Gaier, Rodrigo Viga (2022-02-16). "Heavy rains, flooding kill dozens in Brazil's 'Imperial City'". Reuters. Retrieved 2022-02-16.
- ↑ "Chuva em Petrópolis: Presidente irá à cidade na sexta, diz Flávio Bolsonaro" (in பிரேசிலிய போர்ச்சுகீஸ்). UOL. 2022-02-16. பார்க்கப்பட்ட நாள் 2022-02-16.
- ↑ "Após chuvas, governo federal libera repasse de R$ 2,3 mi para Petrópolis". UOL (in பிரேசிலிய போர்ச்சுகீஸ்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-18.
- ↑ Cardim, Maria Eduarda (2022-02-17). "Queiroga viaja a Petrópolis e calcula danos em 13 unidades básicas de Saúde". Correio Braziliense (in பிரேசிலிய போர்ச்சுகீஸ்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-17.