2023 நேபாள நிலநடுக்கம்
2023 நேபாள நிலநடுக்கம் (2023 Nepal earthquake) நேபாளத்தின் மேற்குப் பகுதியில் 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதியன்று நள்ளிரவு ஏற்பட்டது.[2] கர்னாலி மாகாணம் சாச்சர்கோட்டு பகுதியில் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிகழ்ந்த 6.4 ரிக்டர் அளவிலான இச்சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 153 பேர் உயிரிழந்தனர். 375 எண்ணிக்கைக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். நேபாளத்தின் சாச்சர்கோட்டு, ரூகம் மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டது. இரு மாவட்டங்களிலும் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்தன. நேபாள இராணுவம், காவல், ஆயுதப்படையை சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் இரவு, பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் உலங்கு வானூர்தி மூலம் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். நேபாள பிரதமர் பிரசண்டா நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
நிலநடுக்க அளவு | 6.4 Mw |
---|---|
ஆழம் | 16.5 km (10.3 mi) |
நிலநடுக்க மையம் | 28°53′17″N 82°11′42″E / 28.888°N 82.195°E |
பாதிக்கப்பட்ட பகுதிகள் | நேபாளம், இந்தியா |
மொத்த அழிவு | கடுமை |
அதிகபட்ச செறிவு | VIII (Severe) |
பின்னதிர்வுகள் | 109 (3 அளவுக்கு மேல் 4.0)[1] |
உயிரிழப்புகள் |
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "जाजरकोटमा भूकम्पका १०९ धक्का". Radio Nepal. 4 November 2023. https://onlineradionepal.gov.np/2023/11/04/439288.html.
- ↑ "நேபாளத்தில் நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 150ஐ தாண்டியது". பிபிசி. https://www.bbc.com/tamil/articles/czd2wl3ex44o. பார்த்த நாள்: 5 November 2023.