2024 மகளிர் ஆசிய வெற்றியாளர் கோப்பை

2024 மகளிர் ஆசிய வெற்றியாளர் கோப்பை (2024 Women's Asian Champions Trophy) என்பது ஆசிய வளை கோல் பந்தாட்ட கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் சிறந்த ஆறு அணிகள் போட்டியிடும் பன்னாட்டு வளை கோல் பந்தாட்டப் போட்டியாகும்.[1] இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த தொடரில், 2024 ஆம் ஆண்டில் நடப்பு வெற்றியாளர் அணியாக இந்திய தேசிய மகளிர் வளைதடிப் பந்தாட்ட அணி திகழ்கிறது. இந்தியாவின் பீகார் மாநிலம் ராச்கீர் நகரத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி சீன அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.[2] இதுவரை நடைபெற்ற தொடர்களில் இந்திய மற்றும் தென் கொரிய அணிகள் தலா மூன்று முறையும். சப்பான் அணி ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளன.[3]

தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தியா இந்த போட்டியை நடத்தியது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Women's Asian Champions Trophy 2024 hockey: India to host tournament in Rajgir, Bihar". Olympics (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-11.
  2. "Women's Asian Champions Trophy hockey 2023: India beat Japan to win second title". Olympics (in அமெரிக்க ஆங்கிலம்).
  3. "மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: சீனாவை வீழ்த்தி இந்தியா 3-வது முறையாக சாம்பியன்!". Hindu Tamil Thisai. 2024-11-20. பார்க்கப்பட்ட நாள் 2024-11-21.
  4. Kaushik, Aditya (30 August 2024). "Bihar's Rajgir to host 2024 Women's Asian Champions Trophy: Hockey India". Business Standard. https://www.business-standard.com/sports/other-sports-news/bihar-s-rajgir-to-host-2024-women-s-asian-champions-trophy-hockey-india-124083000540_1.html.