20 பைசா (இந்திய நாணயம்)

இருபது பைசா என்பது ஒரு நாணய அலகாகும். இதன் மதிப்பு இந்திய ரூபாயில்  15 ஆகும். பைசாவின் சின்னம் p. 1968 முதல் 1997 வரை இருபது பைசா நாணயங்களை இந்திய அரசு அச்சிட்டது. ஜூன் 30 2011 அன்று இருபது பைசா நாணயங்கள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. [1]

இருபது பைசா
இந்தியா
மதிப்பு20 (15)
Mass2.00 g
Compositionஅலுமினியம் மெக்னிசியம்
Obverse
Reverse

நாணய அமைப்பு மற்றும் தகவல்கள்

தொகு

தாமரை காசுகள்

தொகு
 
1969 இல் வெளியிடப்பட்ட 20 பைசா தாமரை காசு

1968 முதல் 1971 வரை வெளியிடப்பட்ட இருபது பைசா நாணயங்கள் நிக்கல்-பித்தளை உலோக கலவையால் செய்யப்பட்டவை. இந்நாணயங்களின் முன்பக்கம் மையமாக சிங்க லட்சனையும், அதன் இருபக்கமும் ஆங்கிலம், இந்தியில் இந்தியா எனவும் பொறிக்கப்பட்டிருந்தது. பின்பக்க நாணயத்தில் மலர்ந்த தாமரை மையமாக இருந்தது. தாமரையின் வலது இடது பக்கங்களில் பைசா என ஆங்கிலம், இந்தியில் பொறிக்கப்பட்டிருந்தது. தாமரையின் மேலே 20 என்றும், கீழ்பகுதியில் நாணயத்தின் ஆண்டு மற்றும் அச்சக குறியீடும் இருந்தது. இந்த நாணயங்கள் தாமரை காசுகள் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளன.

இந்த நாணயங்கள் 4.6 கிராம் எடை கொண்டதாகவும், 22 மில்லி மீட்டர் விட்டம் கொண்டதாகவும், 1.75 தடிமன் கொண்டதாகவும் இருந்தன. இந்த நாணயங்கள் வட்ட வடிமனாவை.

அலுமினிய நாணயங்கள்

தொகு

1982 முதல் 1997 வரை இருபது பைசா நாணயங்கள் அலுமினிம் உலோகத்தால் வெளியிடப்பட்டன. இந்நாணயங்கள் 2.2 கிராம் எடை கொண்டனவாகவும், 26 மில்லிமீட்டர் விட்டம் கொண்டவையாகவும், 1.7 மில்லிமீட்டர் தடிமன் கொண்டவையாகவும் இருந்தன. இந்நாணயங்கள் அருங்கோண வடிவம் கொண்டவை.

நினைவு நாணயங்கள்

தொகு

மகாத்மா காந்தி பிறந்த நூற்றாண்டு

தொகு

1969 இல் மகாத்மா காந்தி பிறந்த நூற்றாண்டு நினைவு நாணயத்தினை இந்திய அரசு வெளியிட்டது. இந்நாணயத்தின் முன்பக்கத்தில் மையமாக சிங்க இலட்சனையும், இலட்சனையின் கீழே 20 என்றும், இலட்சனையின் வலது இடது கீழ் பகுதியில் பைசா என இந்தி, ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருந்தது. இலட்சனையில் வலது இடது மேல் பகுதியில் இந்தியா என இந்தியிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருந்தது. இந்நாணயத்தின் பின்பகுதியில் இடது பக்கம் பார்க்கும் காந்தியின் முகம் பொறிக்கப்பட்டிருந்தது. காந்தியின் உருவத்தினைச் சுற்றி महात्मा गांधी - MAHATMA GANDHI 1869-1948 என எழுதப்பட்டிருந்தது.

இந்நாணயம் 20 பைசா தாமரை காசு அளவும், வட்ட வடிவமும் கொண்டிருந்தாலும், அலுமினியம் பித்தளை உலோக கலவையால் செய்யப்பட்டது. இந்நாணயம் 4.5 கிராம் எடை கொண்டதாக இருந்தது.

1970 உலக உணவு நாள்

தொகு

1970 மற்றும் 1971 ஆகிய இரு ஆண்டுகளில் உலக உணவு நாளுக்கான நாணயத்தினை இந்திய அரசு வெளியிட்டது. இந்நாணயத்தின் முன்பக்கத்தில் மையமாக சிங்க இலட்சனையும், இலட்சனையின் கீழே 20 என்றும், இலட்சனையின் வலது இடது கீழ் பகுதியில் பைசா என இந்தி, ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருந்தது. இலட்சனையில் வலது இடது மேல் பகுதியில் இந்தியா என இந்தியிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருந்தது. இந்நாணயத்தின் பின்பகுதியில் சூரியனுக்குக் கீழே மிதக்கும் தாமரை மலரும், தாமரையின் இருபுறமும் கோதுமை தானியமும் பொறிக்கப்பட்டிருந்தது. கீழ்பகுதியில் FOOD FOR ALL सब के लिए अन्न என பொறிக்கப்பட்டிருந்தது.

இந்நாணயம் தாமரை காசு போல நிக்கல் பித்தளை உலோக கலவையால் செய்யப்பட்டது. 4.5 கிராம் எடை கொண்டதாக இருந்தது

1982 உலக உணவு நாள்

தொகு

1982 இல் உலக உணவு நாளுக்கான நாணயத்தினை இந்திய அரசு வெளியிட்டது. இந்நாணயத்தின் முன்பக்கத்தில் மையமாக சிங்க இலட்சனையும், இலட்சனையின் கீழே 20 என்றும், இலட்சனையின் வலது இடது கீழ் பகுதியில் பைசா என இந்தி, ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருந்தது. இலட்சனையில் வலது இடது மேல் பகுதியில் இந்தியா என இந்தியிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருந்தது. இந்நாணயத்தின் பின்பகுதியில் சூரியன் போன்ற வடிவமைப்பிற்குள் தானியக்கதிர் இருப்பது போன்று பொறிக்கப்பட்டிருந்தது. அதனைச் சுற்றி विशृव खाद्य दिवस - WORLD FOOD DAY -1982 என பொறிக்கப்பட்டிருந்தது.

ஆதாரங்கள்

தொகு
  1. "20 Paise, India". en.numista.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=20_பைசா_(இந்திய_நாணயம்)&oldid=2996313" இலிருந்து மீள்விக்கப்பட்டது