2 ஸ்டேட்ஸ்: தி ஸ்டோரி ஆஃப் மை மேரேஜ்

2 ஸ்டேட்ஸ்: தி ஸ்டோரி ஆஃப் மை மேரேஜ் என்பது சேத்தன் பகத் எழுதிய நாவல். இந்த கதையை தழுவி, 2 ஸ்டேட்ஸ் என்ற பெயரில் திரைப்படம் உருவானது. இது இந்தியாவின் இரு வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்குமான காதலைப் பற்றிய கதை.[1][2][3]

2 ஸ்டேட்ஸ்: தி ஸ்டோரி ஆஃப் மை மேரேஜ்
நூலாசிரியர்சேத்தன் பகத்
நாடுஇந்தியா
மொழிஆங்கிலம்
வகைபுனைவு, காதல்
வெளியீட்டாளர்ரூபா & கோ
வெளியிடப்பட்ட நாள்
அக்டோபர் 8, 2009
ISBN978-81-291-1530-0

கிரிஷ் பஞ்சாபைச் சேர்ந்த இளைஞன். அனன்யா, தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த இளம்பெண். இவர்களுக்கு இடையிலான காதலை, தன்வரலாறு வடிவில் எழுதியிருக்கிறார் ஆசிரியர்.

இருவரும் அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம் கல்லூரியில் படிக்கின்றனர் அவள் உணவு விடுதியில் வழங்கப்பட்ட உணவைப் பற்றி புகார் கூறி வாதிடுகிறாள். இதை காண்கிறான் கிரிஷ். சில நாட்களிலேயே இருவரும் நண்பர்களாகின்றனர். அந்த ஆண்டின் சிறந்த பெண் என்ற பட்டத்தைப் பெறுகிறாள். ஒவ்வொரு இரவும் இணைந்து படிக்க முடிவெடுக்கின்றனர். இதற்கிடையில், இருவருக்கும் காதல் மலர்கிறது. இருவருக்கும் பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன.

கிரிஷ் தன் காதலியின் பெற்றோரை சமாளித்து, திருமணம் செய்ய விரும்புகிறான். அவள் குடும்பத்தைச் சேர்ந்தோருக்கு உதவி, அவர்களின் மனதில் இடம் பெறுகிறான். பின்னர், கிரிஷின் குடும்பத்தை சமாளிக்கிறான். ஆனால், ஒரு தென்னிந்தியப் பெண்ணை திருமணம் செய்விக்க மறுக்கின்றனர். அனன்யா, அவர்களின் குடும்பத்திற்கு உதவி அவர்களின் விருப்பத்தைப் பெறுகிறாள். இரு குடும்பத்தினரும் கோவா செல்கின்றனர். கிரிஷின் குடும்பத்தின் மீதான சந்தேகத்தில், அனன்யாவின் அம்மா திருமணத்தை தடை செய்கிறார். பின்னர், கிரிஷின் அப்பா இரு குடும்பத்தையும் சமாளித்து, திருமணம் செய்து வைக்கிறார். கதையின் முடிவில், அனன்யாவிற்கு இரு குழந்தைகள் பிறக்கின்றன. இவை இரண்டும் "இந்தியா" என்ற நிலப்பகுதியைச் சேர்ந்தன என்று கதை முடிகிறது. தமிழ், பஞ்சாபி பண்பாடுகளை நகைச்சுவை கலந்த தொனியில் எழுதியிருக்கிறார் ஆசிரியர்.

திரைப்படம்

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Box Office: '2 States' rakes on Rs 70 cr". Mid Day. 28 April 2014. பார்க்கப்பட்ட நாள் 28 April 2014.
  2. Nagpal Tyagi, Shalu (18 April 2014). "Movie Review: '2 States'". Mid Day. http://www.mid-day.com/articles/movie-review-2-states/15238074. 
  3. bhagat, chetan (8 October 2009). 2 states. haider ali.

வெளி இணைப்புகள்

தொகு

அதிகாரப்பூர்வ இணையதளம்

மேற்கோள்கள்

தொகு