4,4′-இருகுளோரோயிருபீனைல் சல்போன்

வேதிச் சேர்மம்

4,4′-இருகுளோரோயிருபீனைல் சல்போன் (4,4′-Dichlorodiphenyl sulfon) என்பது C12H8Cl2O2S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். (ClC6H4)2SO2 என்கிற அமைப்பு வாய்பாட்டாலும் இச்சேர்மம் அடையாளப்படுத்தப்படுகிறது. ஒரு சல்போன் வகை சேர்மம் என்று இதை வகைப்படுத்துகிறார்கள்.[1] வெண்மை நிறத்திலுள்ள இத்திண்மம் பொதுவாக பலபடிகள் தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுகிறது. இப்பலபடிகள் பாலியீத்தர்சல்போன் போல கடினமானவையாகவும் வெப்பநிலையை எதிர்த்து நிற்கக்கூடியவையாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.[2]

தயாரிப்பு

தொகு

4,4′-இருகுளோரோயிருபீனைல் சல்போன் சேர்மமானது கந்தக அமிலத்தை குளோரோபென்சீனுடன் சேர்த்து சல்போனேற்றம் செய்வதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலும் 4,4′-ஐசோமரின் உருவாக்கத்தை மேம்படுத்த பல்வேறு கூட்டுசேர் பொருள்கள் முன்னிலையாகப் பயன்படுத்தப்படுகின்றன.

ClC6H5 + SO3 → (ClC6H4)2SO2 + H2O

இருபீனைல் சல்போனை குளோரினேற்றம் செய்தும் 4,4′-இருகுளோரோயிருபீனைல் சல்போனை தயாரிக்கலாம்.[3]

குளோரைடு பதிலீடுகளை மாற்றியமைப்பதற்காக செயல்படுத்தப்பட்டால், 4,4′-இருகுளோரோயிருபீனைல் சல்போன் பாலிசல்போன்களின் உற்பத்தியில் பயனுள்ளதாக இருக்கும்:

n (ClC6H4)2SO2 + n NaO−X−ONa → [(O−X−OC6H4)2SO2]n + 2n NaCl

மேற்கோள்கள்

தொகு
  1. Sime, J. G; Abrahams, S. C. (1960). "The crystal and molecular structure of 4,4′-dichlorodiphenyl sulphone". Acta Crystallographica 13 (1): 1–9. doi:10.1107/S0365110X60000017. http://journals.iucr.org/q/issues/1960/01/00/a02720/a02720.pdf. 
  2. Parker, David; Bussink, Jan; Grampel, Hendrik T.; Wheatley, Gary W.; Dorf, Ernst‐Ulrich; Ostlinning, Edgar; Reinking, Klaus; Schubert, Frank; Jünger (2005), "Polymers, High‐Temperature", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a21_449.pub3
  3. Kovacic, Peter; Brace, Neal O. (1954). "Chlorination of Aromatic Compounds with Metal Chlorides". Journal of the American Chemical Society 76 (21): 5491–5494. doi:10.1021/ja01650a069. 

மேலும் வாசிக்க

தொகு