4 × 800 மீட்டர் அஞ்சல் ஓட்டம்

தடகள விளையாட்டுப் போட்டி வகை

4 × 800 மீட்டர் அஞ்சல் ஓட்டம் (4 × 800 meters relay) என்பது ஒரு தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வாகும். இவ்விளையாட்டில் ஒவ்வோர் அணியிலும் 4 ஓட்டக்காரர்கள் பங்கேற்பார்கள். ஒவ்வொருவரும் 800 மீட்டர் தூரம் ஓடி மொத்தம் 3200 மீட்டர் துரத்தை ஓடி முடிக்க வேண்டும். 400 மீட்டர் நீளம் கொண்ட தரமான ஓடுகளத்தில் இரண்டு சுற்று வட்டத்தை ஓடி முடிப்பது 800 மீட்டர் தூரம் எனக் கணக்கிடப்படுகிறது.

4 × 800 மீட்டர் அஞ்சல் ஓட்டப் போட்டிகளில் நிகழ்த்தப்படும் உலக சாதனைகளை பன்னாட்டு தடகள விளையாட்டுக் கூட்டமைப்புகள் சங்கம் ஏற்றுக் கொள்கிறது. 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற பன்னாட்டு தடகள விளையாட்டுக் கூட்டமைப்புகள் சங்கத்தின் உலக அஞ்சல் ஓட்டப் போட்டிகளின் ஒரு பகுதியாக, இப்போட்டியை உலக வெற்றியாளர் நிகழ்வுப் போட்டி என்ற ஒரு தடகளப் போட்டியாகவும் இச்சங்கம் மாற்றியது.

ஆண்களுக்கான 4 × 800 மீட்டர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் 7:02.43 நிமிடங்கள் என்பது உலக சாதனையாக உள்ளது. கென்யாவைச் சேர்ந்த யோசப் முட்டுவா, வில்லியம் இயாம்பொய், இசுமாயில் கோம்பிச், வில்பிரட் பங்கெய் ஆகியோரைக் கொண்ட அணி 2006 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 25 ஆம் தேதி பெல்கியத்தின் தலைநகரமான ப்ரசெல்சில் நடைபெற்ற வான் டாமே நினைவு ஆண்டு தடகளப்போட்டியில் பெண்களுக்கான இச்சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. பெண்களுக்கான 4 × 800 மீட்டர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் 7:50.17 நிமிடங்கள் என்பது உலக சாதனையாக உள்ளது. சோவியத் ஒன்றியம்|சோவித் ஒன்றியத்தைச்]] சேர்ந்த நடேழ்தா ஒலிசாரெங்கோ, இலியுபோவ் குரினா, இலியுத்மிலா போரிசோவா, பொத்யாலோவுசுகயா ஆகியோரைக் கொண்ட அணி 1984 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதி மாசுகோவில் இச்சாதனையை நிகழ்த்தியிருக்கிறது[1].

மேற்கோள்கள் தொகு

புற இணைப்புகள் தொகு