5ஜி

கையடக்கத் தொலைபேசி தொடர்பாடலின் ஐந்தாம் தலைமுறை தரநிலை

தொலைத் தொடர்பியலில், 5ஜி என்பது கையடக்க தொலைபேசி தொடர்பாடலின் அகலப்பட்டையைக் குறிக்கும் ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பத் தரநிலை ஆகும். இது 4ஜி தொழில்நுட்பத்தின் மேம்பாடாக அறியப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு முதல், கையடக்கத் தொலைபேசி நிறுவனங்கள் தங்களின் திறன்பேசிகளை 5ஜி தொழில்நுட்பத்தை ஏற்பிக்கும் வகையில் தயாரித்து வருகின்றன.[1]

2025 இன் முடிவில், 5ஜி வலைப்பின்னல் சுமார் 170 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் என்று கணித்திருக்கிறது ஜிஎஸ்எம் கூட்டுக்குழு. [2]மிகவும் அகலமான அலைக்கற்றைகறைக் கொண்ட 5ஜி தொழில்நுட்பத்தைக் கொண்டு நொடிக்கு 10 கிகாபைட்டு வரையிலான தரவுகளை பரிமாற்றிக் கொள்ள முடியும் என்று அறியப்படுகிறது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "வலைத்தளம் டிஜிட்டல் ட்ரெண்ட்ஸில் 5ஜி தொழில்நுட்பத்தை விளக்கி வெளியான பக்கம் (ஆங்கிலம்)".
  2. "வலைத்தளம் ஃபாரஸ்ட் இண்டரேக்டிவ் 5ஜி தொழில்நுட்பம் குறித்து வெளியிட்ட கட்டுரை (ஆங்கிலம்)".
  3. "வலைத்தளம் ஹௌட்டூ கீக்கு 5ஜி தொழில்நுட்பத்தின் வேகம் குறித்து வெளியிட்ட பக்கம் (ஆங்கிலம்)".
"https://ta.wikipedia.org/w/index.php?title=5ஜி&oldid=3363312" இலிருந்து மீள்விக்கப்பட்டது