54-நெம்மேலி
54-நெம்மேலி (54-Nemmeli), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்ட மன்னார்குடி வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.[1]
புவியியல்
தொகுஇவ்வூரின் அமைவிடம் 10.67ஊ N 79.43ஊ E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 6 மீட்டர் (19 அடி) உயரத்தில் இருக்கின்றது. இவ்வூர் மன்னார்குடியிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
பொருளாதாரம்
தொகுஇவ்வூரின் பொருளாதாரம் முழுவதும் விவசாயத்தை சார்ந்தது.
கோயில்கள்
தொகு54-நெம்மேலியில் குண்டு முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் நெம்மேலி ஊர் மக்களின் மிக முக்கிய கோயிலாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறும். அப்பொழுது காவடியாட்டம், பால்குடம், பூக்குழித் திருவிழா ,மொட்டை போட்டுக்கொள்ளுதல், கலை நிகழ்ச்சிகள் என விழாக்கோலம் பூண்டிருக்கும். வெளியூர்களில் வசிக்கும் இவ்வூர் மக்கள் ஒன்றுகூடும் நாளாகவும் இந்த கோயில் திருவிழா அமைந்திருக்கின்றது.
2014 வருடம் மற்றொரு கோயிலான பச்சை காளி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா இனிதே நடைபெற்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "54 Nemmeli Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.