Z-குழாய்
Z-குழாய் (Z-tube) என்பது ஒரு திரவத்தின் இழுவிசைவலுவை அளவிடும் சோதனை உபகரணம் ஆகும்.
இது இருபுறமும் திறந்த முனைகள் கொண்ட ஒரு இசட் வடிவ குழாய், இது திரவம் நிரப்பப்பட்டு சுழல்மேசை மீது வைக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை குழாய் நேராக இருப்பின் சுழற்றப்படும்போது திரவமானது ஏதேனும் ஓர் முனை வழியே வெளியேறிவிட வாய்ப்புள்ளது. குழாயின் முனைகள் சுழற்சி மையத்தை நோக்கி வளைக்கப்படும்போது திரவம் மையத்தில் இருந்து விலகுகிறது. அதன் விளைவாக குழாயின் ஒருமுனையில் நீரின் மட்டம் உயர்கிறது, அதன் காரணமாக அம்முனையில் நீரின் அழுத்தம் உயர்கிறது. எனவே நீரானது மையத்தை நோக்கி திரும்புகிறது. சுழற்சியின் வேகத்தையும் சுழற்சியின் மையத்திலிருந்து வளைக்கப்பட்ட முனைகள் வரையிலான தூரத்தில் உள்ள நீரின் மட்டத்தையும் கணக்கிடுவதன் மூலம் குழாயில் உள்ள அழுத்த குறைவினை கணக்கிட இயலும்.
நீரில் கரைந்துள்ள வாயுக்களை வெளியேற்றும் செயல்முறைகளில் எதிர்மறை அழுத்தங்கள் (எ.கா பூச்சியத்தை விட குறைவான அழுத்தம், அல்லது இழுவிசை) கண்டறியப்பட்டுள்ளது. இம்முறையில் 280 வளிமண்டல அழுத்தங்கள் வரையிலான உயர் இழுவிசை ஆற்றல் கண்ணாடிக்குழாயில் வைக்கப்பட்ட நீரில் கண்டறியப்பட்டுள்ளது.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Smith, Andrew M. "Negative Pressure Generated by Octopus Suckers: A Study of the Tensile Strengths of Water in Nature," J. exp. Biol., 157, 257-271, 1991.
- ↑ Air and water: the biology and physics of life's media.