பயனர் பேச்சு:Rsmn/தொகுப்பு 3

Archive இது ஓர் முந்தைய உரையாடல்களின் பெட்டகம். இந்தப் பக்கத்தின் உள்ளடக்கத்தை தொகுக்க வேண்டாம். ஏதேனும் புதிய உரையாடலைத் துவக்க எண்ணினாலோ அல்லது பழைய உரையாடல் ஒன்றினைத் தொடர விரும்பினாலோ, தயவு செய்து நடப்பிலுள்ள பேச்சுப் பக்கத்தில் செய்யவும்.

உதவி

வணக்கம் மணியன் நிலக்கரி கட்டுரையில் ஆங்கிலப் பகுதிகளை தமிழில் மொழிபெயர்க்க உங்கள் உதவி தேவை.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:43, 21 சூலை 2013 (UTC)  Y ஆயிற்று--மணியன் (பேச்சு) 04:44, 22 சூலை 2013 (UTC)Reply


வணக்கம் மணியன் எனக்கு சில மொழிபெயர்ப்பில் உதவி தேவை..

fighter aircraft - [i propose சமரவிமானம் (சமரம்-சண்டை,போர் source:wiktionary) ] ;
bomber - [i propose குண்டெறிமானம்] ;
helicopter - உலங்கு வானூர்தி ;
rotorcraft- - சுற்றகவூர்தி ;
jet- தாரை ;

and i also need some help as i am a newbie here...தமிழ்ப்பையன் (பேச்சு)

தமிழ் விக்கிப்பீடியாவிற்கு நல்வரவு தமிழ்ப்பையன். இங்கு aircraft என்பது வானூர்தி எனப்படுகிறது. எனவே fighter aircraft போர் வானூர்தி ஆகும். ஏற்கெனவே இக்கட்டுரை தமிழ் விக்கியில் உள்ளது ->போர் வானூர்தி அதேபோல helicopter என்பதற்கு உலங்கு வானூர்தி என்ற கட்டுரை உள்ளது. bomber என்பதற்கு குண்டெறி விமானம் அல்லது குண்டெறி வானூர்தி எனலாம், குண்டு வீசு வானூர்தி என்றும் மொழி பெயர்க்கலாம். இங்கு பறப்பியல் கலைச்சொற்களுக்கு] மொழிபெயர்ப்புகள் உள்ளன.
புதிய பயனர்களுக்கு பல உதவி பக்கங்கள் எழுதப்பட்டுள்ளன. முக்கியமாக பயிற்சியில் தொடங்கலாம். நீங்கள் எழுதவிரும்பும் கட்டுரை ஏற்கெனவே தமிழில் உள்ளதா என நன்கு சோதித்து அறிந்து கொண்டு பிறகு தொடங்குங்கள்..இல்லாதுபோனால் உங்கள் முயற்சி வீணாகலாம்.--மணியன் (பேச்சு) 09:13, 29 செப்டம்பர் 2014 (UTC)
குறிப்பு:எந்தப் பேச்சுப்பக்கத்திலும் இறுதியில் புதிய தலைப்பிட்டு எழுதுங்கள். உரையாடலைக் காணவும் தொடரவும் பயனுள்ளதாக இருக்கும். மணியன்

நன்றி

விக்கிப்பீடியா நண்பர்களுக்கு மிக்க நன்றி. உங்களின் வாழ்த்துக்கள் என்னை மேலும் வளர்க்க உதவும் படிகட்டுகள் ஆகும்.

மன்னிக்கவும்

அண்ணா என்னிடம் படங்கள் உள்ளன ஆனால் எனக்கு அதை எப்படி பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரியாது அண்ணா. உதவினால் நலம்.

முதலாவதாக, இங்கு அண்ணன்/அக்கா முறை சொல்லி அழைப்பது வழக்கமில்லை. மேலை நாட்டு வழக்கப்படி பெயர்சொல்லியே குறிப்பிடுதல் வழக்கமாக உள்ளது. எனவே நீங்களும் என்னை மற்றவர்கள் போல மணியன் என்றே அழைக்கலாம். இங்கு பள்ளி மாணவர்கள் கூட பங்களிக்கின்றனர்.
அடுத்து விக்கிப்பீடியாவில் ஏற்றப்படும் படிமங்கள் எவ்விதக் காப்புரிமையும் அற்றவையாக இருக்க வேண்டும். இல்லையெனில் அதற்கு காப்புரிமை விலக்கு பெற ஆக்கியவர்களின் அனுமதி தேவை. இதற்கானச் செயல்முறை விரிவானதாகையால் நீங்களே உருவாக்கிய கோட்டுச் சித்திரங்கள், எடுத்த ஒளிப்படங்கள் ஆகியவற்றை இங்கு தரவேற்றலாம். இதற்கான இணைப்பு இடது பக்க வழிநடத்துப் பட்டியில் (Navigation panel) "கோப்பைப் பதிவேற்று" என்று உள்ளது. இதில் எழுகின்ற பக்கத்தில் உள்ள படிவத்தை நிரப்பினால் உங்கள் படிமம் தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்றப்பட்டு விடும். (பொதுவாக நீங்கள் எடுத்த ஒளிப்படங்களை பொதுவகத்தில் ஏற்றுவது நல்லது). இதனை உரிய பக்கத்தில் காட்டுவதற்கு விக்கிப்பீடியா:படிமம் பயிற்சி பக்கம் பயனுள்ளதாக இருக்கும்.
பேச்சுப் பக்கத்தில் உங்கள் கையொப்பத்தை இடுதல் யாரிடமிருந்து செய்தி வந்துள்ளது என அறியப் பயனாகும். இதற்கு விக்கிப்பீடியா:கையெழுத்து படித்துப் பாருங்கள். --மணியன் (பேச்சு) 18:24, 19 ஆகத்து 2013 (UTC)Reply

ஒரு குறிப்புக்கு: தமிழ் விக்கிப்பீடியாவில் பயனர்களைப் பெயர் சொல்லி அழைப்பதை மேலை நாட்டு வழக்கம் போன்று எனக் கருதுவதை விட சமூக இயக்கங்களில் தோழமை பாராட்டுவது போல் கருதலாம். அண்ணா / அக்கா / ஐயா / அம்மா போன்ற விளிப்புகள் தமிழ்ப் பண்பாட்டுக்கு ஏற்றவை என்றாலும் அதுவே உரையாடல்களில் தயக்கத்தை உருவாக்கி விடக்கூடாது. sir, madam போன்றவையும் பணி, கல்வி சார்ந்த படிநிலைகளை உருவாக்கி விடலாம். தற்போது ஒரு மாணவப் பயனர் கூட பேராசிரியராக இருக்கும் பயனரைப் பார்த்துச் சரிக்குச் சரியாக கருத்தளவில் வாதிடலாம். இந்தச் சூழல் விக்கிக்கு வெளியே அரிதாகவே கிடைக்கும். தமிழ் விக்கிப்பீடியாவின் தரம், ஆழம், சமூகப் பிணைப்பைப் பேண இந்தச் சூழல் அவசியம் ! அதே வேளை, விக்கிக்கு வெளியே நேரில் உரையாடும் போது சிலருக்குப் பெயர் சொல்லி அழைக்கத் தயக்கமாக இருக்கலாம். அது புரிந்து கொள்ளத்தக்கது.--இரவி (பேச்சு) 22:53, 30 ஆகத்து 2013 (UTC)Reply

பத்தாண்டு கொண்டாட்ட ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு

மணியன், தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பான ஏற்பாடுகளின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக பணிபுரிய இயலுமா? ஏற்கனவே கட்டுரைப் போட்டி குறித்த பணிகளில் சிறப்பாக பங்களித்து வருகிறீர்கள். நேரம் கிடைத்தால், அதைப் போன்று இணையத்தில் இருந்து செய்யக்கூடிய இன்னும் சில பணிகளில் பங்கெடுத்துக் கொண்டால் உதவியாக இருக்கும். வரும் மாதம் நீங்கள் சென்னையி்ல் இருப்பீர்கள் எனில் இன்னும் சிறப்பாக இருக்கும். நன்றி. --இரவி (பேச்சு) 17:11, 23 ஆகத்து 2013 (UTC)Reply

இரவி, தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தை சிறப்பாக ஒருங்கிணைத்து வருகிறீர்கள். இந்த பன்னாட்டு ஒன்றுகூடல் நமது தமிழ் விக்கிப்பீடியாவிற்கு ஒரு சிறப்பான மைல்கல். துரதிருட்ட வசமாக நான் இச்சமயத்தில் சென்னையில் இல்லாமல் இருக்க நேருட்டுள்ளது :( இ.ஆ.ப சேவைக்காக ஆறு மாத காலத்திற்கு நான் ஒபாமாலாந்து வந்துள்ளேன்:) இங்கு இணையத்தில் செலவிடும் நேரம் குறைவென்றாலும் இணையம்வழி பங்களிக்கக்கூடிய சில பணிகளில் பங்கேற்க உற்சாகமாக உள்ளேன். செய்ய வேண்டுவதை சொல்லுங்கள்!! --மணியன் (பேச்சு) 18:26, 23 ஆகத்து 2013 (UTC)Reply
இ. ஆ. ப :):) பொறுப்பெடுத்துக் கொள்வதற்கு நன்றி, மணியன். பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்பது தொடர்பான கையேடு ஒன்றை உருவாக்கும் பணியில் நற்கீரன் ஈடுபட்டுள்ளார். தங்கள் பங்களிப்பை இதில் இருந்து தொடங்கினால் நன்றாக இருக்கும். நன்றி. --இரவி (பேச்சு) 18:51, 23 ஆகத்து 2013 (UTC)Reply
நல்லது, முயற்சிக்கிறேன். தள அறிவிப்பில் பத்தாண்டுக் கொண்டாட்ட ஒருங்கிணைப்புப் பக்கத்திற்கு சுருக்குவழி ஏற்படுத்த முடியுமா ?--மணியன் (பேச்சு) 12:23, 24 ஆகத்து 2013 (UTC)Reply

ஒபாமாலாந்து என்றால் ஐக்கிய அமெரிக்காவா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:31, 7 செப்டம்பர் 2013 (UTC) ஆம், எனது பயனர் பக்கம் பார்க்கவும். ஒபாமாலாந்து, புதரகம் (bushland) என்பன சமூக வலைத்தளங்களில் புழங்கும் சொற்கள் :)--மணியன் (பேச்சு) 11:20, 7 செப்டம்பர் 2013 (UTC)

Article request: York Region District School Board

Are you interested in starting a stub about the en:York Region District School Board? It serves several cities near Toronto.

Documents in Tamil from the district:

Thank you WhisperToMe (பேச்சு) 05:51, 27 ஆகத்து 2013 (UTC)Reply

 Y ஆயிற்று
Thank you :) - Yes, lots of Indians live in Canada so this article will help those with origins from Tamil Nadu, portions of Sri Lanka, Singapore, and others who speak Tamil who now live in the York Region in Ontario. WhisperToMe (பேச்சு) 01:44, 10 செப்டம்பர் 2013 (UTC)

கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்

  கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
சூலை 2013 கட்டுரைப் போட்டியில் கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை விரிவாக்குவதில் இரண்டாம் இடம் வென்றமைக்காக இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். முதல் இரு மாதங்கள் போட்டி களை கட்டியதற்கு நீங்களே முக்கிய காரணம். தொடர்ந்து வரும் மாதங்களில் கலந்து கொண்டு ஊக்குவிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் :) --இரவி (பேச்சு) 06:41, 2 செப்டம்பர் 2013 (UTC)

கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்

  கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
ஆகத்து 2013 கட்டுரைப் போட்டியில் விரிவான கட்டுரைக்கான சிறப்புப் பரிசு வென்றமைக்காக இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு கட்டுரையையும் மிகத் தரமாக விரிவாக்குவதற்கு உங்கள் பங்களிப்பு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. தொடர்ந்து முக்கிய கட்டுரைகளைத் தரமுயர்த்தித் தருமாறு வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:59, 2 செப்டம்பர் 2013 (UTC)
வாழ்த்துக்கள். பொதுவாகவே விரிவான கட்டுரைத் தொகுப்பாளர்! --Anton (பேச்சு) 09:58, 2 செப்டம்பர் 2013 (UTC)
வாழ்த்துகள். நான் விரிவான கட்டுரைகள் தொகுப்பதற்கும் தாங்களே முன்னோடி. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:52, 2 செப்டம்பர் 2013 (UTC)

இங்கு தொழிலாளர் தின வார இறுதி விடுமுறையில் சென்று வருவதற்குள் இன்ப அதிர்ச்சிகளாக இரட்டைப் பரிசுகள் கிடைத்துள்ளனவே ! இரண்டாமிடத்திற்கும் விரிவான கட்டுரை ஆக்கலுக்கும் கூடுதல் பரிசுகள் அறிவித்து என்னைத் தெரிவு செய்ததற்கு மிக்க நன்றிகள் !! வாழ்த்துகள் தெரிவித்த அன்டன், பார்வதிஸ்ரீக்கும் நன்றிகள் !! என்னைப் போன்ற விக்கி ஆர்வலருக்கு தொடர் கட்டுரைப் போட்டி சூடு பிடித்துள்ளதுதான் சிறப்பானப் பரிசு !--மணியன் (பேச்சு) 02:01, 3 செப்டம்பர் 2013 (UTC)   விருப்பம்--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 12:46, 7 செப்டம்பர் 2013 (UTC)

Article request: Troy School District (Michigan)

If you want another set, please do:

Thanks WhisperToMe (பேச்சு) 06:16, 9 செப்டம்பர் 2013 (UTC)

மணியன், விக்கிப்பீடியா:பயிற்சி (தொகுத்தல்) விபரங்களை முன்வைத்து இதையும், தேவைப்படும் துணைப் பகுதிகளையும் உருவாக்கித் தாருங்கள். நன்றி. --Natkeeran (பேச்சு) 16:30, 2 செப்டம்பர் 2013 (UTC) உங்களின் ஆலோசனைக்கு நன்றி. இனிமேல் தொகுக்கும் கட்டுரைகளில் அவ்வாறே செய்கிறேன்.BALA.R,Sankaranputhoor. (பேச்சு) 13:04, 17 செப்டம்பர் 2013 (UTC)

ஊடக அறிக்கை எழுத உதவி தேவை

விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/ஊடகச் சந்திப்பு/அறிக்கை எழுதுவதிலும் உங்கள் உதவி தேவைப்படுகிறது. வரும் 23ஆம் தேதித்துக்குள் எழுதி முடித்துவிட்டால் நன்றாக இருக்கும். சுந்தர், பாலாவின் உதவியையும் கோரியுள்ளேன். எப்படி எழுதலாம் என்ற பரிந்துரைகளுக்கு அதன் பேச்சுப் பக்கம் பாருங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 21:51, 19 செப்டம்பர் 2013 (UTC)

உதவித் தொகை வழங்கல் குழு

வணக்கம் மணியன். சென்னை விக்கிப்பீடியர் கூடலுக்கான பயண உதவித் தொகை மற்றும் தங்குமிட உதவி கோருவோர் விண்ணப்பங்கள் கூடுதல் எண்ணிக்கையில் வந்தால் யார் யாருக்கு வழங்கலாம் என்று தெரிவு செய்து தரும் பணியில் உதவ இயலுமா? பயன்களின் பங்களிப்பு மற்றும் தேவை அடிப்படையில் இதனை முடிவெடுக்கலாம். சிறீதரனின் உதவியையும் கோரியுள்ளேன். நன்றி.--இரவி (பேச்சு) 07:30, 21 செப்டம்பர் 2013 (UTC)

இரவி, தற்போதுள்ள சூழலில் எந்த நேரக்கெடுவுடன் ஆற்றவேண்டிய பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள இயலாமைக்கு வருந்துகிறேன். மன்னிக்கவும். --மணியன் (பேச்சு) 14:15, 21 செப்டம்பர் 2013 (UTC)
பரவாயில்லை மணியன். வேறு சிலரின் உதவியைக் கேட்டுப் பார்க்கிறேன். என்னாலேயே செய்து விட முடியும். ஆனால், நிதியையும் நானே கையாள்வதால் இதையும் நான் முடிவெடுப்பது சரியாக இருக்காது. நிகழ்வில் கலந்து கொள்ளாத மதிப்புக்குரிய ஒரு குழு இதனை முடிவு செய்தால் நடுநிலையாகவும் வெளிப்படையாகவும் இருக்கும்.--இரவி (பேச்சு) 14:31, 21 செப்டம்பர் 2013 (UTC)

தங்களைப் பற்றிய குறிப்புகள் தேவை

தமிழ் விக்கிப்பீடியா தொடர்புடைய கட்டுரை ஒன்றைத் தமிழ்நாட்டில் வெளியாகும் பத்திரிகையில் வெளியிடுவதற்காகத் தங்களைப் பற்றிய குறிப்புகளுடன் தங்கள் புகைப்படம் ஒன்றும் என்னுடைய msmuthukamalam@gmail.com msmuthukamalam@yahoo.co.in மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைத்திட வேண்டுகிறேன்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 05:27, 22 செப்டம்பர் 2013 (UTC)

இங்குள்ள குறிப்புக்களும் புகைப்படமும் போதுமா அல்லது ஏதேனும் மேல்விவரங்கள் தேவையா ? என்னை விக்கி மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். --மணியன் (பேச்சு) 02:52, 24 செப்டம்பர் 2013 (UTC)

பதக்கம் - ஈராயிரவர்

  ஈராயிரவர் பதக்கம்
முக்கிய மற்றும் விரிவான கட்டுரைகள் உட்பட்ட இரண்டாயிரம் கட்டுரைகளை உருவாக்கிய உங்களுக்கு ஈராயிரவர் என்னும் பட்டம் தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். வளர்க உங்கள் நற்பணி! நான் பதக்கம் வழங்கிப் பாராட்டிய முதல் விக்கிப்பீடியர் தாங்களே! --Anton (பேச்சு) 17:57, 23 செப்டம்பர் 2013 (UTC)
ஈராயிரம் கட்டுரைகள் எழுதி ஈராயிரவர் குழுவில் இணைந்த மணியனுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகள்!--Kanags \உரையாடுக 21:07, 23 செப்டம்பர் 2013 (UTC)
தமிழ் விக்கியில் சிறப்பாக பங்களித்துவரும் இருவரிடமிருந்து கிடைத்தப் பாராட்டுக்கள் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றன. மனமார்ந்த நன்றிகள் !!--மணியன் (பேச்சு) 02:55, 24 செப்டம்பர் 2013 (UTC)
மிகச் சிறந்த படைப்பாளியாக விளங்கும் அதே நேரத்தில், அனைத்துப் பயனர்களையும் ஊக்குவிக்கும் தங்களை 'தமிழ் விக்கிப்பீடியா குமுகாயம்' என்றும் மதிக்கும்; அன்பு செலுத்தி நட்பு பாராட்டும்! உங்களின் தொண்டிற்கு மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:25, 24 செப்டம்பர் 2013 (UTC)
கருநாடக இசைக்கெனத் தனி வலைவாசல் படைத்திட்ட உங்கள் பாராட்டு பேருவகை தந்தது. நன்றி சிவா !--மணியன் (பேச்சு) 19:54, 26 செப்டம்பர் 2013 (UTC)

உதவி தேவை...

வணக்கம்! தமிழ் விக்கியில் பல ஆண்டுகளாக பங்களித்துவரும் பங்களிப்பாளர் எனும் முறையில், தங்களின் உதவி தேவைப்படுகிறது…

  • தமிழ் விக்கியின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களித்த / பங்களித்துவரும் பயனர்களுக்கு 'பாராட்டுச் சான்றிதல்' வழங்கிட நாம் முடிவு செய்ததை தாங்கள் அறிவீர்கள். இதற்கான தெரிவு செய்தலில் உங்களின் உதவியினை நாடுகிறோம்.
  • 'முதற்பக்க பங்களிப்பாளர் அறிமுகம்' எனும் காப்பகத்திலிருந்து பயனர்களின் பெயர்களை எடுத்து முதற்கட்ட பட்டியல், இங்கு இடப்பட்டுள்ளது. ஆனால் இது முழுமையடைந்த பட்டியலன்று… இந்தப் பட்டியலை நிறைவு செய்திட தங்களின் உதவி தேவைப்படுகிறது!
  • சிலர் 'முதற்பக்க பங்களிப்பாளர் அறிமுகத்தில்' இடம்பெறவில்லை; சிலர் அதற்குரிய தகவலை இன்னும் தரவில்லை. இன்னும் பலர் கடந்த சில மாதங்களில் நல்ல பங்களிப்புகளைத் தந்திருக்கிறார்கள். இதை அனைத்தையும் கருத்தில் கொண்டு சான்றிதழ் பெற இருப்போரின் பட்டியலை தாங்கள் முழுமை செய்து தந்தால் உதவியாக இருக்கும். தொகுப்புகள் எண்ணிக்கை, ஒட்டு மொத்தப் பங்களிப்பு என்பது போல் ஏதேனும் ஒரு வரையறையைக் கொள்ளலாம்.
  • வேறு ஏதேனும் காரணிகள் உங்கள் எண்ணத்தில் தோன்றினால்... அதனையும் கருத்தில்கொண்டு தெரிவினை செய்யலாம்.
  • மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:46, 26 செப்டம்பர் 2013 (UTC)
வணக்கம் சிவகுரு, எனக்கு கிடைத்த நேர இடைவெளியில் இயன்றவரை பக்கத்தை இற்றைப்படுத்தி உள்ளேன். விக்கிப் பண்பாட்டில் இந்தப் பக்கத்தையும் யாரும் தொகுக்கலாம் :) தனிநபர் தெரிவை விட crowd sourcing உண்மையான விக்கித் தெரிவாக அமையும்.--மணியன் (பேச்சு) 17:05, 26 செப்டம்பர் 2013 (UTC)

வணக்கம்! உதவிக்கு நன்றி. உங்களிடம் வேண்டியது போலவே நீண்டநாள் பயனர்கள் 5 பேரிடம் உதவி நாடினேன். குறிப்பிடத்தக்க பயனர்கள் அனைவரும் கௌரவிக்கப்படல் வேண்டும் என்பதே நமது எண்ணம்; ஒருவர் மறந்தாலும் இன்னொருவர் குறிப்பிடுவாறே?!

புதுப்பயனர் கட்டுரை வார்ப்புரு

வணக்கம் நண்பரே,

விக்கிப்பீடியாவின் பத்தாண்டு கொண்டாட்த்தின் காரணமாக பல புதிய பயனர்கள் வருகை தருகின்றார்கள். அவர்களின் கட்டுரைகளில் விக்கியின் புரிதல் இன்றி இருப்பதனால் சில காலம் தாமதித்து நீக்கம் செய்ய வேண்டுகிறேன். உடனடியாக நீக்கப்பெறும் பொழுது பயனர்களுக்கு விக்கியின் மீதான ஆர்வம் குறையவும் புரிதலில் தவறு ஏற்படவும் வாய்ப்புள்ளது என்பதனால், புதிய பயனர்களின் கட்டுரைகளில் சேர்க்க புதிய வார்ப்புரு அமைக்கப்பெற்றுள்ளது. இதனை பயன்படுத்த: {{புதுப்பயனர் கட்டுரை|புதுப்பயனரின் பெயர்|date=இன்றய திகதி}} என இடுக. இதில் புதுப்பயனரின் பெயரும், திகதி கட்டாயமல்ல. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:55, 30 செப்டம்பர் 2013 (UTC)

நன்றி !

"ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதோ? அரசன் இல்லாமல் ஜனங்கள் ஆளும் காலமும் வாராதோ?" என்ற வரிகளை மிகப் பொருத்தமாகச் சுட்டி, ஏன் உரிய பங்களிப்புகள் செய்த அனைவரும் தமிழ் விக்கிப்பீடியா சான்றிதழ்களில் கையெழுத்திடலாம் என்ற விளக்கியுள்ளீர்கள். என் சிந்தனையைச் சரியாகப் புரிந்து கொண்டு அதனை மிக அழகாகவும் விளக்கியுள்ளது நெகிழச் செய்தது. தமிழ் விக்கிப்பீடியாவில் இன்னும் பல புதிய, நல்ல மரபுகளை உருவாக்கிப் பார்ப்பதற்கான கருத்துகளைத் தயக்கமின்றி முன்வைக்கத் தூண்டுகிறது. நன்றி ! நன்றி ! --இரவி (பேச்சு) 20:30, 1 அக்டோபர் 2013 (UTC)Reply

வலைவாசல் வரலாறு அளவு குறித்து

வணக்கம் நண்பரே, தாங்கள் வடிவமைப்பினை தொடங்கிய வலைவாசல்:வரலாறு 15கணினி திரையில் காணுகையில் கணினி திரையைவிடவும் அகலமாக உள்ளது. எல்லா திரையிலும் காண வழிவகை செய்யுங்கள். நன்றி --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:02, 3 அக்டோபர் 2013 (UTC)Reply

சுட்டியமைக்கு நன்றி நண்பரே. நான் கவனிக்கிறேன். எனது நிரல் அறிவுப் போதாமையால் வேறேதாவது வலைவாசலின் வடிவமைப்பிலிருந்து படி எடுக்க வேண்டும். உங்களுக்குப் பயிற்சி இருந்தால் நீங்களே உதவலாம் :)--மணியன் (பேச்சு) 19:38, 3 அக்டோபர் 2013 (UTC)Reply

நூல் வார்ப்புருவை மேம்படுத்த ஆலோசனை வேண்டுதல்

நூல் வார்ப்புருவை மேம்படுத்தி இங்கு ஒரு மாதிரியை அமைத்துள்ளேன். மேம்படுத்த ஆலோசனைகள் கூறவும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:26, 4 அக்டோபர் 2013 (UTC)Reply

நூல் வார்ப்புரு குறித்தான தங்களுடைய வழிகாட்டலுக்கு நன்றி, கனகரத்தினம் அவர்களும் ஆங்கில வார்ப்புருவினை மாற்றம் செய்ய வேண்டாம் என்று கோரியிருந்தார். எனினும் தாங்கள் அளித்த விளக்கத்தின் மூலமாகவே ஆங்கில கட்டுரைகளை மொழி பெயர்க்கும் பொழுது ஏற்படும் இலகுத்தன்மையை உணர்ந்தேன். வழிகாட்டியமைக்கு நன்றி. அத்துடன் ஓசிஎல்சி சுட்டெண் என்று இட பரிந்துரைத்துள்ளீர்கள். ஓசிஎல்சி இணைய இணைப்பே அங்கு வருவதால் சுட்டெண் என்பது பொருத்தமாதாக தோன்றவில்லை. ஓசிஎல்சி தளம் என்பது சரியாக இருக்குமா?. ஆலோசிக்கவும்,. உடன் வேறு பரிந்துரைகள் இருப்பினும் தெரிவிக்கவும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:43, 5 அக்டோபர் 2013 (UTC)Reply
வார்ப்புருக்களை ஒழுங்குபடுத்தும் உங்கள் முயற்சி உவகையான ஒன்றே. வாழ்த்துகள் ! நீங்கள் குறிப்பிட்டதைப் போலவே ஓசிஎல்சி தளம் என்று குறிக்கலாம். வேர்ல்டுகேட் பற்றியும் கட்டுரை எழுத வேண்டும். நமது பயனர்களில் நூலகர் ஒருவர் உள்ளார்.(சட்டென்று பெயர் நினைவிற்கு வரவில்லை). அவர் விரிவாக எழுதினால் துறைசார்ந்த விளக்கம் கிடைக்கும்.--மணியன் (பேச்சு) 11:53, 5 அக்டோபர் 2013 (UTC)Reply
நன்றி நண்பரே. அந்தப் பயனர் பெயர் நினைவுக்கு வந்ததும் எனக்கும் கூறுங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:32, 11 அக்டோபர் 2013 (UTC)Reply
இரா. முத்துசாமி என்ற பயனர் ஓய்வு பெற்ற நூலகர். நீங்கள் குறிப்பிடும் பயனர் இவரா?--Booradleyp1 (பேச்சு) 04:29, 12 அக்டோபர் 2013 (UTC)Reply
ஆம், அவரே. நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.--மணியன் (பேச்சு) 22:27, 14 அக்டோபர் 2013 (UTC)Reply

அரசியல் வலைவாசலை மேம்படுத்தி தந்திட வேண்டுகோள்

வணக்கம் நண்பரே,

தாங்கள் வலைவாசல்:அரசியல் என்பதை துவங்கியுள்ளதைக் கண்டேன். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அந்த வலைவாசல் மேம்படுத்தப்படாமல் உள்ளது. தாங்கள் அந்த வலைவாசலை மேம்படுத்தி தந்தால் முதற்பக்கத்தில் வெளியிடவும், உள்ளடக்கங்கள் வலைவாசலிருந்து அந்த வலைவாசலுக்கு வருகின்ற பயனர்கள் அரசியல் குறித்தான கட்டுரைகளை அறிந்துகொள்ளவும் ஏதுவாக இருக்கும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:53, 11 அக்டோபர் 2013

அந்த வலைவாசலில் இற்றைப்படுத்தக்கூடிய பகுதிகள் எதுவும் இல்லை. பகுப்புக்களின் தொகுப்புக்களே உள்ளன. எனவே புதிய அரசியல் சார் கட்டுரைகள் சரியான பகுப்புகளில் இடப்பட்டால் அவை காட்சிப்படுத்தபடும். இருப்பினும் மேலும் சிறப்பாக அமைக்க முடியுமா எனப் பார்க்கிறேன்..நமக்கு இருக்கும் ஆர்வத்திற்கும் கிடைக்கின்ற நேரத்திற்கும் எதிர்மறை விகிதப் பொருத்தம் இருப்பதால் பணிகள் தள்ளிப் போடப்படுகின்றன. அதிலும் தற்போது மிகுந்த நேர நெருக்கடியில் வழமையான விக்கிப் பங்களிப்பு கூட வெகுவாகக் குறைந்துள்ளது. இருப்பினும் உங்கள் உந்துதல் முன்னுரிமைகளை மாற்றியமைக்கும். சுட்டியமைக்கு நன்றி நண்பரே. --மணியன் (பேச்சு) 23:37, 11 அக்டோபர் 2013 (UTC)Reply
வேண்டுகோளை ஏற்றமைக்கு நன்றி நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:37, 16 அக்டோபர் 2013 (UTC)Reply

வாழ்த்து கண்டு மகிழ்ந்து

விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/வாழ்த்துகள்/தமிழ் விக்கிப்பீடியர்களும் வாசகர்களும் பக்கத்தில் தமிழ் விக்கிப்பீடியாவின் முக்கியத்துவம் குறித்து நீங்கள் குறிப்பிட்டவை அருமை. தன்னளவிலும் சமூக நோக்கிலும் விக்கிப்பீடியாவின் பயன் பெரிது. விரைவில் இ. ஆ. ப முடித்து த. வி. ப-க்கு முழு நேரமாகத் திரும்புவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் :)

நன்றி இரவி. விரைவில் த.வி.ப-க்கு திரும்ப எனக்கும் ஆசைதான். வருகிறேன் :)--மணியன் (பேச்சு) 23:26, 17 அக்டோபர் 2013 (UTC)Reply

நன்றியுரைத்தல்

  நிர்வாக அணுக்கம் தந்தமைக்கு நன்றியுரைத்தல்
வணக்கம் நண்பரே. எந்தன் மீது நன்மதிப்பு கொண்டு. தங்களுடைய மதிப்புமிக்க ஆதரவினை நல்கி, நிர்வாக அணுக்கத்தினை பெற்று தந்தமைக்கு என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:57, 15 அக்டோபர் 2013 (UTC)Reply
 
நடைபெற்ற நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு தமிழ் விக்கிபீடியாவின் தூண்களில் ஒருவரான தங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்! --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 01:55, 16 அக்டோபர் 2013 (UTC)Reply

மிக்க நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி!!
--அஸ்வின் (பேச்சு) 03:35, 16 அக்டோபர் 2013 (UTC)Reply

 --நந்தகுமார் (பேச்சு) 08:25, 16 அக்டோபர் 2013 (UTC)Reply

கட்டுரைப் போட்டி

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:56, 27 அக்டோபர் 2013 (UTC)Reply

ஆல்ட்டா கலிபோர்னியா

இதன் உரையாடல் பக்கத்தை பார்த்து உங்கள் கருத்தை தெரிவியுங்கள். இக்கட்டுரைக்கும் கலிபோர்னியா குடியரசு கட்டுரைக்கும் நன்றி. மெக்சிக்கோ அமெரிக்க போர் கட்டுரையில் ஆல்ட்டா கலிபோர்னியாவை அப்பெயரில் நான் கூறாததால் நிறைய சிகப்பு இணைப்பு உள்ளது. உங்கள் பதில் கிடைத்ததும் எல்லாம் ஊதா ஆகி விடும் :) --குறும்பன் (பேச்சு) 03:01, 31 அக்டோபர் 2013 (UTC)Reply

மறுமொழி இட்டுள்ளேன்.--மணியன் (பேச்சு) 03:39, 31 அக்டோபர் 2013 (UTC)Reply

தமிழாக்க உதவி

வணக்கம் மணியன், உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது வார்ப்புரு:Underlinked வார்ப்புருவைத் தமிழ்ப் படுத்தித் தரமுடியுமா? இணைப்புகளுக்கு ஆங்கில விக்கி இணைப்புகளையே (தற்காலிகமாகக்) கொடுக்கலாம். நன்றி.--Kanags \உரையாடுக 23:13, 1 நவம்பர் 2013 (UTC)Reply

 Y ஆயிற்று --மணியன் (பேச்சு) 23:46, 1 நவம்பர் 2013 (UTC)Reply
அழகான மொழிபெயர்ப்பு. விரைவாகத் தந்தமைக்கு நன்றி.--Kanags \உரையாடுக 23:59, 1 நவம்பர் 2013 (UTC)Reply

விக்கியூடகத் திட்டங்கள் - ஒரு பொது அறிமுகம்

விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/அறிமுகம் பக்கத்தை விக்கியூடகங்கள் என்ற பார்வையில் சற்று விரிவாக்கித் தர முடியுமா. அதில் உள்ள விக்கிப்பீடியா பற்றிய தகவல்களை விக்கிப்பீடியா பற்றிய ஒரு பக்கதுக்கு நகர்த்தி உள்ளேன். அதில் பொருத்தமான தகவல்களை மீண்டும் இணைத்து, ஆனால் ஒரு பொது அறிமுகப் பார்வையில் எழுதித் தர முடிந்தால் மிகவும் உதவியாக இருக்கும். நன்றி. --Natkeeran (பேச்சு) 15:07, 24 நவம்பர் 2013 (UTC)Reply

நிச்சயம் செய்கிறேன் நக்கீரன். சற்று நேரம் எடுத்துக் கொள்வேன். --மணியன் (பேச்சு) 21:49, 25 நவம்பர் 2013 (UTC)Reply

IWT கருவியில் மாற்றங்கள் குறித்து

திரு. மணியன்,

வணக்கம்! நீங்கள் பயன்படுத்தும் IWT கருவி புதுப்பிக்கப்பட்டுள்ளது. இப்புதிய மாற்றத்தின்படி இக்கருவியில் சொற்களைத் தேடிக்கண்டுபிடித்து மாற்ற உங்கள் உங்களின் common.js பக்கத்தில் உள்ள விருப்பப் பட்டியலின் வடிவமைப்பு மற்றப்பட வேண்டும். இதனை செய்ய உங்கள் உங்களின் common.js பக்கதுக்கு சென்று var en_words மற்றும் var ta_words எனத்தொடங்கும் வரிகளை நீக்கிவிட்டு அவ்விடத்தில் கீழ் உள்ளவற்றை சேர்கவும் (கீழுள்ள பட்டியல் உங்களின் common.jsஇல் இருக்கும் சொற்களிலிருந்து உங்களுக்காக தனியாக தயாரிக்கப்பட்டது) :

var relpaceList = {
'சனவரி' : 'January',
'பெப்ரவரி' : 'February',
'மார்ச்' : 'March',
'ஏப்ரல்' : 'April',
'மே' : 'May',
'சூன்' : 'June',
'சூலை' : 'July',
'ஆகத்து' : 'August',
'செப்டம்பர்' : 'September',
'அக்டோபர்' : 'October',
'நவம்பர்' : 'November',
'திசம்பர்' : 'December',
'வெளி இணைப்புகள்' : 'External links',
'மேற்சான்றுகள்' : 'References',
'பகுப்பு' : 'Category'
};

இதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டாலோ அல்லது விளக்கம் தேவைப்பட்டாலோ என்னை தொடர்பு கொள்ளவும். நன்றி! --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 16:56, 2 திசம்பர் 2013 (UTC)Reply

நன்றி செயரத்தினா ! --மணியன் (பேச்சு) 20:21, 2 திசம்பர் 2013 (UTC)Reply

Article requests

Hi! Are you interested in trying these article requests?

Thanks, WhisperToMe (பேச்சு) 08:37, 30 திசம்பர் 2013 (UTC)Reply

தமிழ் தட்டச்சு

ஆலமரத்தடியில் நடக்கும் உரையாடலை சற்றுக் கவனியுங்கள்.--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:12, 24 சனவரி 2014 (UTC)Reply

கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன் :) நேரமின்மையால் எனது பங்களிப்புகள் முதன்மை பெயர்வெளியில் மட்டுமே உள்ளது.--மணியன் (பேச்சு) 23:22, 24 சனவரி 2014 (UTC)Reply

உலகக்கோப்பை காற்பந்துப் போட்டிகள்...

வணக்கம்!

நன்றி செல்வகுருநாதன். உலகக்கோப்பை கால்பந்து இரசிகர்களுக்கு மிகப்பெரும் நிகழ்வாகும். எனவே 32 தேசிய அணிகள், ஆட்டம் நடைபெறும் 12 நகரங்கள், 12 விளையாட்டரங்கங்கள், முக்கிய விளையாட்டு வீரர்கள், நற்பேறுச் சின்னம் (mascot) எனப் பல கட்டுரைகளை எழுத வேண்டி உள்ளதால் நேரத்தே ஆரம்பித்தேன்...செந்தில்வேல் துணை புரிகிறார்.
தேர்தல் கட்டுரைகளில் எனக்கு அவ்வளவு ஆர்வமில்லை. சோடாபாட்டில், மாகிர், குறும்பன், தேனி சுப்பிரமணி போன்றவர்கள் முன்பு சிறப்பாக இற்றைப்படுத்தினர். என்னால் இயன்றளவு தேவைப்படும் துணைக் கட்டுரைகளை (சிவப்பு இணைப்புக்கள் ஏற்பட்டால்) ஆக்குகிறேன்.--மணியன் (பேச்சு) 23:33, 24 சனவரி 2014 (UTC)Reply
வணக்கம் மணியன், காற்பந்துப் போட்டி தொடர்பான கட்டுரைகளை இற்றைப்படுத்துவதற்குப் பாராட்டுகள். நானும் உதவுவேன். நாடுகளின் காற்பந்து அணிகள் தொடர்பாகக் கட்டுரைகள் (அல்லது பகுப்புகள்) எழுதும் போது அவற்றை அந்தந்த நாடுகளின் விளையாட்டு பகுப்புகளுக்குள் சேர்த்து விடுங்கள். (எ-கா: பகுப்பு:செருமனியில் விளையாட்டு). விளையாட்டு பகுப்பு இல்லாவிட்டால் புதிதாக உருவாக்குங்கள். அதிக கட்டுரைகள் இருந்தால், செருமனியில் கால்பந்து விளையாட்டு போன்ற புதிய பகுப்பையும் உருவாக்கலாம்.--Kanags \உரையாடுக 22:31, 25 சனவரி 2014 (UTC)Reply
நன்றி கனகு, கட்டுரைகளை நாடுகளின் விளையாட்டுப் பகுப்புகளில் இணைக்கிறேன். உங்கள் பாராட்டும் உதவியும் உற்சாகத்தைத் தருகிறது.--மணியன் (பேச்சு) 23:39, 25 சனவரி 2014 (UTC)Reply

மிக்க நன்றி! நடப்பு நிகழ்வுகள் குறித்த கட்டுரைகளில் ஆர்வம்காட்டுபவர் என்பதால் உங்களுக்கு வேண்டுகோள் வைத்தேன். நடைபெறவிருக்கும் தேர்தல் குறித்து துணைக் கட்டுரைகளை உருவாக்க வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், நிறைய கட்டுரைகளில் இற்றை இருக்கும். உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது இற்றைக்கு உதவுங்கள்; வடிவமைப்பில் (பட்டியல் போன்றவை) உங்களின் உதவிகள் தேவைப்படும்போது கேட்பேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:03, 1 பெப்ரவரி 2014 (UTC)

நிச்சயமாக உங்களுக்கு உதவியாக இருப்பேன் :)--மணியன் (பேச்சு) 04:32, 2 பெப்ரவரி 2014 (UTC)

உலகக்கோப்பை காற்பந்து கட்டுரையில் மேற்கு செருமனியின் வார்ப்புருவை, செருமனி தேசிய காற்பந்து அணிக்கு இட்டுச்செல்லுமாறு அமைக்கவும். அக்கட்டுரையில் இருந்த சிவப்பு இணைப்பு கொண்ட அணிகளுக்கு, கட்டுரைகள் அனைத்தும் ஆரம்பித்தாயிற்று.--செந்தில்வேல் (பேச்சு) 00:16, 20 பெப்ரவரி 2014 (UTC)

செந்தில், [[வார்ப்புரு:நாட்டுத் தகவல் மேற்கு செருமனி]]யில் வேண்டிய மாற்றங்களைச் செய்துள்ளேன். ஒருமுறை மணல்தொட்டியில் நேரடியாக செருமனி தேசிய காற்பந்து அணிக்கு இணைப்பு கொடுத்தது. ஆனால் இப்போது வேலை செய்யவில்லை. இருப்பினும் தற்காலிகமாக மேற்கு செருமனி தேசிய காற்பந்து அணிக்கான வழிமாற்றை செருமனி தேசிய காற்பந்து அணிக்கு கொடுத்துள்ளேன். விரைவாக இத்தனை கட்டரைகளை ஆக்கியதற்கு நன்றி !! --மணியன் (பேச்சு) 02:41, 20 பெப்ரவரி 2014 (UTC)

நல்வரவு...!

வணக்கம்! நீங்கள் தாய்நாடு திரும்பிவிட்டீர்கள் என நினைக்கின்றேன்; நல்வரவு! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:23, 3 பெப்ரவரி 2014 (UTC)

நானும் என் வாழ்த்தை சொல்லிக்கிறேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:28, 3 பெப்ரவரி 2014 (UTC)
தாயகம் திரும்பியாயிற்று ! உடல் பகல்/இரவு குளிர்/வெப்ப குழப்பங்களிலிருந்து மீண்டு கொண்டிருக்கிறது :)--மணியன் (பேச்சு) 16:32, 3 பெப்ரவரி 2014 (UTC)

காற்பந்துப் பதக்கம்

  காற்பந்துப் பதக்கம்
2014 உலகக்கோப்பை காற்பந்து தொடர்பான முக்கிய கட்டுரைகளை உருவாக்குவதற்கும், அதுபற்றிய செய்திகளை இற்றைப்படுத்துவதற்கும் இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். இம்முறை 2014 உலகக்கோப்பை காற்பந்து செய்திகளுக்கு தமிழ் விக்கியில் பஞ்சமிருக்காது! --AntonTalk 03:39, 20 பெப்ரவரி 2014 (UTC)
  விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:45, 20 பெப்ரவரி 2014 (UTC)
  விருப்பம்--Kanags \உரையாடுக 06:30, 20 பெப்ரவரி 2014 (UTC)
  விருப்பம்--இரவி (பேச்சு) 12:07, 26 சூன் 2014 (UTC)Reply

உதவி

  • ஏதோ நல்லவர்கள் நன்னோக்கோடு என் மணல் தொட்டியைப் பொதுத்தொட்டியாக அமைத்திருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. என் மணல் தொட்டி முழுமையாக எனது பழகும் தொட்டியாக இருந்தால் எனக்கு உதவியாக இருக்கும்.

எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும். --Sengai Podhuvan (பேச்சு) 17:25, 25 பெப்ரவரி 2014 (UTC)

முதற்பக்க வலைவாசல் அறிவிப்பு


வணக்கம் நண்பரே, தாங்கள் தொடங்கி மேம்படுத்திய வலைவாசல் புவியியல் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறந்த வலைவாசல்களை மேம்படுத்தி தர வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:45, 28 பெப்ரவரி 2014 (UTC)

உங்கள் பார்வைக்கு

பேச்சு:இந்திய மாநிலப் பெண் முதலமைச்சர்கள் பட்டியல் பார்க்கவும்.

இந்தியப் பெண் ஆளுநர்களின் பட்டியல் -இக்கட்டுரையை உருவாக்கியதற்கு நன்றி. முதலமைச்சர் பட்டியல் கட்டுரையை உருவாக்கிய பின் ஆளுநர்கள் பட்டியல் ஆவி கட்டுரையை எடுத்து எனது டெஸ்ட் பக்கத்தில் இணைத்திருந்தேன். 14 அன்று சென்னை-கோவை பயணத்தால் தொடரமுடியவில்லை. இன்று (15) அக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளதைப் பார்த்ததும் மகிழ்ச்சியாக உள்ளது. மார்ச் மாதம் மகளிர் தினம் கொண்டாடப்படும் மாதம் என்பதால் பெண்கள் பற்றிய சில கட்டுரைகளைத் தொடங்கலாம் என நினைத்தேன். ஆங்கில விக்கியிலுள்ள நமது நாட்டைச் சேர்ந்த பெண்களின் கட்டுரைகள் ஏதாவது எனக்கு பரிந்துரைக்க முடியுமா? என்னால் முடிந்தவற்றை உருவாக்க முயற்சி செய்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 04:25, 15 மார்ச் 2014 (UTC)

நான் உங்களது டெஸ்ட் பக்கத்தை பார்க்கவில்லை..உங்கள் முயற்சி வீணாயிற்றோ ? பெண்கள் பற்றிய கட்டுரைகள் நிறையவே எழுதப்படாது உள்ளன. அரசியல், திரைப்படம், நிகழ்கலைகளை விட்டால் வேறு துறை பெண்களைக் குறித்தக் கட்டுரைகளைக் குறைவாகவே காண்கிறேன். சட்டென்று எனக்கு இந்த கட்டுரையை நீங்கள் கவனிக்கலாம் என்று தோன்றுகிறது. இதேபோல அறிவியல், தொழினுட்பம், சட்டம், இலக்கியம் போன்ற துறைகளில் இந்தியப் பெண் ஆளுமைகளை கவனிக்கலாம். நீங்கள் பார்வதி கிருட்டினணைப் பற்றி எழுதியிருந்தீர்கள். அதேபோல கேரளத்து கௌரியம்மா, ஒரிசாவின் நந்தினி சத்பதி போன்றவர்களும் கவனிக்கப்பட வேண்டியவர்கள். நான் சற்று ஒழுங்குபடுத்தல் இல்லாது வேலை செய்பவன். எனவே உடனடியாக குறிப்பான பரிந்துரைகளை வழங்க முடியவில்லை.--மணியன் (பேச்சு) 07:19, 15 மார்ச் 2014 (UTC)

\\உங்கள் முயற்சி வீணாயிற்றோ ?\\ அப்படியெல்லாம் இல்லை. நான்தான் தொடங்கவே இல்லையே. நீங்கள் உருவாக்கியதைப் பார்த்ததும் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தது.

நீங்கள் குறிப்பிட்டுள்ள பெண்மணிகள் குறித்து என்னால் முடிந்த மட்டும் எழுத முயற்சிக்கிறேன். உங்களிடம் நான் வைத்த கோரிக்கையைப் பார்த்துவிட்டு செல்வ சிவகுருநாதனும் சிலரைப் பரிந்துரைத்திருக்கிறார். உங்கள் இருவருக்கும் நன்றி.--Booradleyp1 (பேச்சு) 13:53, 15 மார்ச் 2014 (UTC)

Wikimedians Speak

      
 

An initiative to bring the voices of Indian Wikimedians to the world
Hi Rsmn,

I am writing as Community Communications Consultant at CIS-A2K. I would like to interview you. It will be a great pleasure to interview you and to capture your experiences of being a wikipedian. You can reach me at rahim@cis-india.org or call me on +91-7795949838 if you would like to coordinate this offline. We would very much like to showcase your work to the rest of the world. Some of the previous interviews can be seen here.

Thank you! --రహ్మానుద్దీన్ (பேச்சு) 18:40, 9 ஏப்ரல் 2014 (UTC)

கட்டுரைப் போட்டி நிறைவு

வணக்கங்க, கட்டுரைப் போட்டியின் மூலம் குறைந்தது 500 முக்கிய குறுங்கட்டுரைகளை மேம்படுத்த வேண்டும் என்ற இலக்கை வெற்றிகரமாக எட்டியுள்ளோம். போட்டியில் பங்கேற்று இதற்கு உதவியமைக்காக என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இம்மாதத்துடன் கட்டுரைப் போட்டி நிறைவடைகிறது. முதல் சில மாதங்களில் பங்கேற்ற அதே உற்சாகத்துடன் இம்மாதமும் போட்டியில் பங்கேற்று உடன் போட்டியிடுபவர்களை உற்சாகப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 15:34, 6 மே 2014 (UTC)Reply

இரவி, எனது தந்தையாரின் மறைவு மற்றும் தொடர்பான சமயச் சடங்குகளால் என்னால் விக்கியில் (இணையத்திலும்) பங்களிக்க இயலவில்லை. இந்த விக்கி விடுப்பு இன்னும் சில நாட்களுக்குத் தொடரும்.--மணியன் (பேச்சு) 03:39, 10 மே 2014 (UTC)Reply
ஓ, உங்கள் இழப்புக்கு வருந்துகிறேன். இப்போது நான் கேட்டதைப் பொருட்படுத்த வேண்டாம்.--இரவி (பேச்சு) 18:33, 11 மே 2014 (UTC)Reply

உதவி: The

The என்பதை ஒலிபெயர்ப்புச் செய்வதில் ஓர் ஐயமுள்ளது. இங்கு கருத்திடமுடியுமா?--AntonTalk 01:47, 10 மே 2014 (UTC)Reply

உங்களின் கவனத்திற்கு...

பேச்சு:சுமித்ரா மகஜன் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:16, 6 சூன் 2014 (UTC)Reply

ஒரு வேண்டுகோள்

 

வணக்கம் Rsmn! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்!

--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:42, 9 சூன் 2014 (UTC)Reply

இயன்றளவில் இத்திட்டத்திற்கு துணை நிற்பேன்.!! இருப்பினும் எனது இயல்பான பங்களிப்பு முன்னுரிமை பெறும்.--மணியன் (பேச்சு) 09:03, 9 சூன் 2014 (UTC)Reply
தங்களுடைய இயல்பான பங்களிப்பில் இதையும் கவணிக்க கோருகிறேன். நீங்கள் தொடங்கிய 2210 கட்டுரைகளை தமிழ் விக்கிப்பீடியாவில் உருவாக்கியுள்ளீர்கள், எனக்குத் தெரிந்து புணே மண்டலம், நாக்பூர் மண்டலம், அமராவதி மண்டலம் போன்ற சில கட்டுரைகளில் சான்றுகள் ஏதுமின்றி உள்ளது. இவை வெகு சில எடுத்துக்காட்டுகளே, இவற்றிற்கு சான்று சேர்த்துவிடுங்கள். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:48, 9 சூன் 2014 (UTC)Reply
 Y ஆயிற்று நான் பெரும்பாலும் ஆய்வு செய்து எழுதுவதில்லை. ஆங்கில விக்கிப்பீடியாக் கட்டுரைகளையே தமிழாக்கம் செய்கிறேன். அதிலுள்ள தகவற்பிழைகளும் மேற்கோளின்மையும் எனது பங்களிப்பிலும் இருக்கும். இருப்பினும் 100% மேற்சான்றுகள் இணைக்கும் உங்கள் திட்டத்திற்கு விரிவாக தேடல் வேண்டியுள்ளது. அதனால்தான் அது எனது இயல்பில்லை எனத் தெரிவித்தேன். ஆங்கிலக் கட்டுரைகளில் மேற்சான்றுகள் இல்லாவிடில் நான் துவங்கிய கட்டுரைகளில் சான்றளிப்பது எனக்கு கடினம்தான் :( நீக்க வேண்டியதாயின் அவ்வாறே ஆகுக!--மணியன் (பேச்சு) 13:08, 9 சூன் 2014 (UTC)Reply
தினேசு, மேலே எனது கருத்துக்கள் எனது இயலாமையைக் குறித்ததே ! உங்கள் திட்டத்தை எதிர்த்தவை அல்ல!! உங்களைப் போன்ற இளைஞர்களின் துடிப்பும் கொள்கைப்பற்றும் போற்றற்குரியது. உங்கள் விடாமுயற்சியால் தமிழ் விக்கிப்பீடியா செம்மையுறுவதைக் காண மகிழ்ச்சி !! வளர்க உங்கள் பணி !!--மணியன் (பேச்சு) 13:34, 9 சூன் 2014 (UTC)Reply
முடிந்தவரை இணைத்தால் போதும், மீதமுள்ளவற்றை நான் கவணித்துக்கொள்கிறேன். மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் ஆங்கில விக்கியில் இருக்குமாயின் மறக்காமல் ஆதாரங்களை இணைக்கவும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:49, 13 சூன் 2014 (UTC)Reply
முடிந்தவரை இணைக்கிறேன்.--மணியன் (பேச்சு) 03:36, 15 சூன் 2014 (UTC)Reply

தங்களின் ஆலோசனை தேவை...

வணக்கம்! பதினாறாவது மக்களவையின் செயற்பாடுகள் எனும் கட்டுரையை ஆரம்பித்துள்ளேன். இக்கட்டுரையின் நோக்கம் - 5 ஆண்டுகளில் நடக்கும் பல்வேறு கூட்டத்தொடர்கள் குறித்த தகவல்களை பதிவுசெய்தல், பட்ஜெட் குறித்த தகவல்களை பதிவுசெய்தல், முக்கிய சட்டங்கள் நிறைவேற்றப்படுவது குறித்த தகவல்களை பதிவுசெய்தல் என்பனவாகும். பதினாறாவது மக்களவை எனும் கட்டுரையிலேயே பதிவுசெய்யலாமா எனவும் யோசித்தேன். ஆனால் அக்கட்டுரையின் நோக்கம் வேறு என்பதனையும் அறிந்தேன். எனவே புதிய கட்டுரையை துவக்கினேன். பதினாறாவது மக்களவையின் செயற்பாடுகள் எனும் தலைப்பு பொருத்தமானதா? அல்லது தலைப்பில் முன்னேற்றம் செய்யலாமா? தங்களின் கருத்து தேவை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:19, 12 சூன் 2014 (UTC)Reply

மிகச் சரியாகவே தலைப்பிட்டுள்ளீர்கள் ! ஏன் சந்தேகம் ? பதினாறவது மக்களவையின் அமைச்சரவை என்ற பகுப்புதான் பொருத்தமில்லாதுள்ளது எனத் தெரிவித்திருந்தேன். சில அமைச்சர்கள் மாநிலங்களவை உறுப்பினர்களாக மட்டுமே உள்ளனர். இருப்பினும் அலுவல்சார்ந்து அவர்களும் மக்களவையில் பங்கேற்பர். எனவே தலைப்பை தவறு என்று கூறவியலாவிடினும் மோதி அமைச்சரவை அமைச்சர்கள் அல்லது தே.மு.கூ II அமைச்சர்கள் என பகுத்திருக்கலாம். ஆனால் சட்டமியற்றலைப் பொறுத்தவரை மாநிலங்களவையால் சட்ட வரைவுகளை திருத்தவோ தேர்வுக்குழுவிற்கு அனுப்பி தடங்கல்கள் ஏற்படுத்தவியலுமே தவிர எந்த சட்டத்தையும் நிறைவேற்ற முடியாது; மக்களவை மாநிலங்களவையின் திருத்தங்களை ஏற்றுக் கொள்ளவும் மறுக்கலாம். அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரத்தான் மாநிலங்களவையின் ஒப்புதல் தேவை. மக்களவையின் செயற்பாடுகளை மட்டும் பதிவு செய்வதாக இருந்தால் இத்தலைப்பு பொருத்தமானதே. ஆனால் சில சட்டவரைவுகளுக்கு விரிவான விவாதங்கள் மாநிலங்களவையில் நடக்கலாம். அதனையும் பதிவு செய்ய வேண்டுமெனில் நாடாளுமன்ற செயற்பாடுகள் - (பதினாறாவது மக்களவை காலம்) எனத் தலைப்பிடலாம். இது விவாதங்களை முழுமையாக பதிவு செய்ய வழிவகுக்கும்.--மணியன் (பேச்சு) 11:37, 12 சூன் 2014 (UTC)Reply

உடனடியான, தெளிவான விளக்கத்திற்கு நன்றி. எனக்குள் மேலும் அலசிவிட்டு மீண்டும் பேசுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:29, 13 சூன் 2014 (UTC)Reply

  விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 03:35, 13 சூன் 2014 (UTC)Reply

குறித்த கட்டுரையை இந்திய நாடாளுமன்ற செயற்பாடுகள் (பதினாறாவது மக்களவைக் காலம்) என நகர்த்தியுள்ளேன். அருமையான பரிந்துரை!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:29, 14 சூன் 2014 (UTC)Reply

இன்னொரு உதவி...

வணக்கம்! நரேந்திர மோதி அரசின் வெளிநாட்டுக் கொள்கை செயற்பாடுகள் எனும் கட்டுரையை துவக்கியுள்ளேன். en:Foreign policy of the Bill Clinton administration என்பது போன்ற ஒரு கட்டுரை எனக் கருதலாம். கட்டுரையின் நோக்கம்: குறிப்பாக பாக்கித்தான், இலங்கை, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடனான உறவு நரேந்திர மோடியின் ஆட்சியில் எப்படி இருந்தது என்பதை பதிவுசெய்ய! அரசுமுறைப் பயணங்கள், பேச்சுவார்த்தைகள், ஐநா அவையில் இந்தியாவின் நிலைப்பாடுகள் என்பன இவற்றுள் அடங்கும். தலைப்பு பொருத்தமாக உள்ளதா? அல்லது நரேந்திர மோதி அரசின் வெளிநாட்டுக் கொள்கையும் நிருவாகமும் என மாற்றலாமா? நரேந்திர மோதி அரசின் வெளியுறவுக் கொள்கையும் நிருவாகமும் என மாற்றலாமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:24, 16 சூன் 2014 (UTC)Reply

உங்களது தலைப்பே சிறப்பாக உள்ளது. மாற்ற வேண்டியதில்லை. வேண்டுமானால் செயற்பாடுகளைத் தவிர்த்து நரேந்திர மோதி அரசின் வெளியுறவுக் கொள்கை எனலாம். Bill Clinton administration என்பதற்கு இணையாக நரேந்திர மோதி அரசு உள்ளதால் நிர்வாகமும் தேவையில்லை.--மணியன் (பேச்சு) 04:33, 16 சூன் 2014 (UTC)Reply

குறித்த கட்டுரையை நரேந்திர மோதி அரசின் வெளியுறவுக் கொள்கை எனும் தலைப்பிற்கு நகர்த்தியுள்ளேன். உதவிக்கு மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:40, 16 சூன் 2014 (UTC)Reply

நரேந்திர மோதி அரசின் நிருவாகம் எனும் கட்டுரையையும் துவக்கியுள்ளேன். (Administration of Narendra Modi Government)--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:10, 17 சூன் 2014 (UTC)Reply

தமிழ்ச் சொல்

’ஹோட்டல்’ என்பதற்குப் பொருத்தமான தமிழ்ச் சொல்லைப் பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஹோட்டல் குறித்த சில கட்டுரைகளுக்கான பகுப்பினை உருவாக்க உதவியாக இருக்கும். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 07:21, 21 சூன் 2014 (UTC)Reply

இது போன்ற உரையாடல்கள் விக்சனரியில் நடந்து அங்கு அலுவல்முறையான தமிழ்ச்சொல் தரவேற்றப்பட்டால் நன்றாக இருக்கும். அங்கு தரப்பட்டுள்ள உண்டுறை விடுதி பொருத்தமாகப் படுகிறது. தங்கு விடுதி என்றும் பயன்படுத்தியுள்ளேன். விக்சனரியில் தேடிவிட்டு பொருத்தமான சொல் கிடைக்காவிடில் பொதுவான எனது செயல்பாடு எனக்குத் தோன்றியபடி தமிழாக்கம் செய்து விடுவதுதான். தவறானதாக இருந்தால் மற்ற பயனர்கள் திருத்தி விடுவார்கள் என்ற அசட்டு (!) நம்பிக்கைதான் :) --மணியன் (பேச்சு) 07:45, 21 சூன் 2014 (UTC)Reply

2013 கட்டுரைப் போட்டி பரிசு விவரம்

வணக்கம், மணியன். 2013 கட்டுரைப் போட்டிப் பரிசுகள், பரிசுத் தொகை விவரம் இங்கு உள்ளது. ஒரு முறை சரி பார்த்து விடுங்கள். உங்கள் பரிசுத் தொகை, சான்றிதழை அனுப்பி வைக்க பின்வரும் விவரங்கள் தேவை. இவற்றை ravidreams at gmail dot com என்ற முகவரிக்கு, ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்து அனுப்பி வையுங்கள். இங்கு பொதுவில் பகிர வேண்டாம். தாங்கள் என்னுடன் பகிரும் தகவல் வேறு யாருடனும் எக்காரணம் கொண்டும் பகிரப்படாது என்று உறுதியளிக்கிறேன்.

  • உங்கள் வங்கிக் கணக்கு விவரம் (கணக்கில் உள்ள முழுப்பெயர், கணக்கு எண், கணக்கின் வகை (சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு போல), வங்கியின் பெயர், வங்கி முகவரி, IFSC குறியீட்டு எண்.

மேற்கண்ட விவரத்தைப் பகிர விரும்பவில்லை என்றால், பரிசுத் தொகை காசோலை மூலம் அனுப்பி வைக்க இயலும். அதற்கு

  • வங்கிக் கணக்கில் உள்ள உங்கள் முழுப்பெயர் விவரம் தேவை.
  • சான்றிதழ்கள் / காசோலை அனுப்பி வைக்க உங்கள் இல்ல முகவரி தேவை.

இவ்விவரங்கள் கிடைத்த உடன் மின்மடல் மூலம் மறுமொழி அளித்து உறுதிப்படுத்துகிறேன். பரிசுத் தொகையும் சான்றிதழும் சூலை மாத இறுதிக்குள் அனுப்பி வைக்கப்படும்.

நன்றி.--இரவி (பேச்சு) 19:16, 30 சூன் 2014 (UTC)Reply

காற்பந்துப் பதக்கம்

  காற்பந்துப் பதக்கம்

வணக்கம் , Rsmn/தொகுப்பு 3 2014 உலகக்கோப்பை காற்பந்து கட்டுரையை இற்றைப்படுத்திச் செம்மைப் படுத்தியமைக்காக இப்பதக்கத்தை உங்களுக்கு வழங்குகிறேன்.-- mohamed ijazz(பேச்சு) 09:31, 14 சூலை 2014 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:08, 15 சூலை 2014 (UTC)Reply

  விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 05:00, 15 சூலை 2014 (UTC)Reply
  விருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 05:33, 15 சூலை 2014 (UTC)Reply
இரண்டாம் முறை காற்பந்து பதக்கமளித்து பெருமைபடுத்திய இஜாசிற்கும் வாழ்த்து தெரிவித்த செல்வகுரு, ஸ்ரீகர்சன்,நந்தினிக்கும் நன்றிகள் !!--மணியன் (பேச்சு) 05:46, 15 சூலை 2014 (UTC)Reply

நடப்பு நிகழ்வுகள்/தலைப்புச் செய்திகள்

வணக்கம்! இன்று துவங்குகின்றன என நீங்கள் எழுதிய செய்தியினை சிறீதரன், திருத்தம் செய்திருந்தார். இதேபோன்று முன்பு ஒருமுறை எனக்கும் செய்திருந்தார். நாம் இன்று என எழுதிய செய்தியை நாளை இற்றை செய்வோம் என்பது உறுதியன்று என்பதனால் அவர் இந்தத் திருத்தத்தை செய்கிறார் என நினைக்கிறேன். ஒரு தகவல் பரிமாற்றத்திற்காக இதனை தங்களிடம் தெரிவிக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:06, 23 சூலை 2014 (UTC)Reply

விக்கிப்பீடியர்கள் உலகெங்கும் பல்வேறு நேர வித்தியாசத்தில் வாழ்கிறார்கள். ஒருவருக்கு இன்று மற்றொருவருக்கு நாளை, இன்னும் ஒருவருக்கு நேற்றாக இருக்கலாம். இதனாலேயே இன்று, நாளை போன்றவற்றை முதற்பக்கத்தில் எழுதுவதை தவிர்க்க வேண்டும் என நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 11:38, 23 சூலை 2014 (UTC)Reply
நன்றி செல்வகுருநாதன். நானும் புரிந்து கொண்டேன் :) பொதுவாக நான் கட்டுரைகளில் திகதிகளை இடுவேன். இது செய்தி என்பதாலும் அடிக்கடி இற்றைப் படுத்துகிறோம் என்பதாலேயே நான் இன்று துவங்குகின்றன பயன்படுத்தினேன். பொதுவாக ஒருங்கிணைந்த நேரத்தைத் தான் கருத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும் இன்று இரவு 9 மணிக்கு கிளாசுக்கோவில் நிகழும் துவக்கவிழாவை நாளை காலை 5 மணிக்கு காணவிருக்கும் கனக்சின் கருத்தோடு முழுமையாக ஒப்புகிறேன். --மணியன் (பேச்சு) 15:51, 23 சூலை 2014 (UTC)Reply

  விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:59, 23 சூலை 2014 (UTC)Reply

பதக்கம்

  செயல்நயம் மிக்கவர் பதக்கம்
2014 மேற்கு ஆபிரிக்கா எபோலா திடீர்ப் பரவல் கட்டுரையில் தாங்கள் செய்துள்ள தொகுப்புகளுக்காக . Commons sibi (பேச்சு) 16:20, 7 ஆகத்து 2014 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  விருப்பம் இன்னொரு சிபியின் வாழ்த்துகள் ;) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:28, 7 ஆகத்து 2014 (UTC)Reply

இரண்டு சிபிக்கும் மிகுந்த நன்றிகள் !! --மணியன் (பேச்சு) 03:25, 8 ஆகத்து 2014 (UTC)Reply

  விருப்பம் தற்சமயம் உலகில் என்ன நடக்கின்றதோ அவற்றைப்பற்றிய கட்டுரைகளை ஆர்வமாக விரிவாக்கிவருவதையிட்டு என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். முன்னர் காற்பந்தாட்ட உலகக்கிண்ணம் நடைபெற்ற போதும் பிரேசில் போன்ற கட்டுரைகளை அற்புத்மாக விரிவாக்கியிருந்தீர்கள். தொடரும் உங்களது சிறப்பன பங்க்ளிப்பிற்கு விக்கிப்பீடியா சமூகம் சார்பில் என் நன்றிகள்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 06:59, 8 ஆகத்து 2014 (UTC)Reply
மிக்க நன்றி ஸ்ரீகர்சன். --மணியன் (பேச்சு) 16:52, 8 ஆகத்து 2014 (UTC)Reply

New article request: Airport in Malaysia

Hi! Are you interested in doing: en:Sultan Abdul Aziz Shah Airport (சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையம்) ? It is one of the airports of Kuala Lumpur.

Thanks WhisperToMe (பேச்சு) 19:43, 4 செப்டம்பர் 2014 (UTC)

 Y ஆயிற்று--மணியன் (பேச்சு) 05:00, 5 செப்டம்பர் 2014 (UTC)
Thank you! WhisperToMe (பேச்சு) 13:44, 5 செப்டம்பர் 2014 (UTC)

Monuments of Spain Challenge

Hello and welcome to the contest. Two important things: the editing starts on October 1st and we wish you good luck and enjoy the event. B25es (பேச்சு) 14:40, 29 செப்டம்பர் 2014 (UTC)

பதக்கம்

  நடப்பு நிகழ்வுகள் பதக்கம்
ஜான் ஓ'கீஃப் , மே-பிரிட் மோசர்,எட்வர்டு மோசர் கட்டுரைகள் Commons sibi (பேச்சு) 14:55, 6 அக்டோபர் 2014 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

மிக்க நன்றி Commons sibi !
  விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:15, 7 அக்டோபர் 2014 (UTC)Reply
  விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 11:37, 7 அக்டோபர் 2014 (UTC)Reply

ஒரு வேண்டுகோள்...

வணக்கம்! Swachh Bharat Abhiyan எனும் ஆங்கிலக் கட்டுரைக்கு இணையான தமிழ்க் கட்டுரையை உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது துவக்க வேண்டுகிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:20, 12 அக்டோபர் 2014 (UTC)Reply

 Y ஆயிற்று--மணியன் (பேச்சு) 09:00, 12 அக்டோபர் 2014 (UTC)Reply
 

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:21, 12 அக்டோபர் 2014 (UTC)Reply

Request...need to create already existing page in tamil

Vijayganesh.s1996 (பேச்சு) 15:27, 16 அக்டோபர் 2014 (UTC) vijayganesh.s1996Reply

எந்தப் பக்கத்தைக் குறிப்பிடுகிறீர்கள் ? ஏற்கெனவே இருக்கும் பக்கத்தில் திருத்தங்கள் செய்யலாம்; விரிவாக்கலாம். உங்கள் ஐயம் புரியவில்லை. --மணியன் (பேச்சு) 01:20, 17 அக்டோபர் 2014 (UTC)Reply

ஒரு கோப்பை பதிவேற்றும் போது ...

ஒரு கோப்பை பதிவேற்றும் போது தயவு செய்து இவற்றை கருத்தில் கொள்ளவும்:

  • விக்கி பொதுவகத்தில் இருக்கும் கோப்புகளை மீண்டும் தமிழ் விக்கியில் பதிவேற்ற வேண்டியதில்லை. (எ.கா: படிமம்:RatRunningPath.JPG) தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவேற்றப்பட்ட கோப்புகளைப்போலவே அவற்றையும் பயன்படுத்தலாம். - பொதுவாக நான் பொதுவகத்திலிருந்து பதிவேற்றவதில்லை..கவனக்குறைவாக இருக்கலாம் அல்லது candidate for moving ஆக இருந்திருக்கலாம்.
  • பதிப்புரிமை உடைய ஒரு கோப்பு SVGஆக இருந்தால் அதை தமிழ் விக்கிப்பீடியாவிலும் SVGஆகவே பதிவேற்ற வேண்டுகின்றேன். - எனக்கு svg.png ஆகவே வருகிறது. தொழில்நுட்ப உதவி/பயிற்சி தேவை..:(
  • ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்து பதிவேற்றும் கோப்புகளில் {{enwiki}} இணைக்க வேண்டுகின்றேன். - இனி கவனத்தில் கொள்கிறேன்.

நன்றி. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 12:46, 17 அக்டோபர் 2014 (UTC)Reply

ஜெயரத்தினா, எனது மறுமொழிகளை சாய்ந்த எழுத்தில் மேலே தந்துள்ளேன். --மணியன் (பேச்சு) 16:24, 17 அக்டோபர் 2014 (UTC)Reply
தங்களின் பதிலுக்கு நன்றி. பல வழிகளில் SVGஐ பதிவிறக்கம் செய்யலாம். அதில் ஒன்று: ஒவ்வொரு படிமப்பக்கத்திலும் படிம காட்சிக்கு கீழுள்ள "Original file"-ஐ சொடுக்கினால் படிமம் விரிந்து தெரியும், அப்போது பக்கத்தை சேமித்தால் SVGஆக பதிவிறக்கம் செய்யலாம். மேலதிக தகவல் வேண்டுமெனில் தெரிவிக்கவும். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 19:45, 17 அக்டோபர் 2014 (UTC)Reply

நன்றி

மொழிபெயர்ப்பது நன்றி - கட்டுரைகள் இந்திய அரசின் முதன்மைப் பொருளியல் ஆய்வுரைஞர் (Chief Economic Adviser to the Government of India) மற்றும் அரவிந்த் சுப்பிரமணியன் (Arvind Subramanian). Arunram (பேச்சு)

நன்றி அருண் !--மணியன் (பேச்சு) 16:25, 17 அக்டோபர் 2014 (UTC)Reply

பெண்ணியம் தொடர்பான வலைவாசல்

வணக்கம் . பெண்ணியம் தொடர்பாக புதிதாக ஒரு வலைவாசல் துவங்கப்பட்டுள்ளது . இதன் வடிவமைப்பு , உள்ளடக்கம் எவ்வாறாக இருக்கலாம் என்று தங்களுக்கு ஏதேனும் கருத்து இருப்பின் , வலைவாசல் பேச்சு பக்கத்திலோ அல்லது ஆலமரத்தடியிலோ தெரிவிக்கவும் .நன்றி .--Commons sibi (பேச்சு) 08:45, 27 அக்டோபர் 2014 (UTC)Reply

தங்கள் பார்வைக்கு . மேம்படுத்த உதவவும் --Commons sibi (பேச்சு) 17:58, 28 அக்டோபர் 2014 (UTC)Reply
நன்றி ! உறுப்பினராக இணைந்துள்ளேன். இயன்றவரை பங்கேற்க முயல்கிறேன்.--மணியன் (பேச்சு) 02:56, 29 அக்டோபர் 2014 (UTC)Reply
சக பயனரின் முன்னெடுப்பிற்கு (வழமைபோல) முழு வீச்சில் துணை நிற்கிறீர்கள்; தமிழ் விக்கிக்கு கிடைத்த பேறன்றி வேறென்ன?! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:15, 31 அக்டோபர் 2014 (UTC)Reply
ஐயா, உங்களின் முன்னெடுப்பும் சளைக்காததல்ல :) கருத்தொருமித்தோர் கூடலின் இன்பம் பிறிதுண்டோ ?--மணியன் (பேச்சு) 17:19, 31 அக்டோபர் 2014 (UTC)Reply
மா. செல்வசிவகுருநாதன் ,மணியன் உங்கள் இருவரின் முணைப்பைக்கண்டு என்ன செய்வதென்றே எனக்கு தெரிய வில்லை :( அவ்வளவு வேகம் . அவ்வளவு திறமை . :):) சில நேரங்களின் நாம் ஏன் மகிழ்ச்சியாக இருக்கிறேம் என்று தெரியாது , ஆனால் மனம் நிம்மதியாக புன்னகைக்கும் . திட்டம் , வலைவாசல் பக்கங்களில் உங்கள் பங்களிப்பைப் பார்க்கும் போது எனக்கு அந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது . --Commons sibi (பேச்சு) 12:29, 2 நவம்பர் 2014 (UTC)Reply
வணக்கம் மணியன்.பெண்ணியம் வலைவாசல் , திட்டம் தொடங்கிய பின்னர் நான் அதில் வெகுவாக பங்களிக்கவில்லை . கல்லூரியில் இறுதியாண்டு "Project" வேலைகள் உள்ளதால் அவ்வப்போது மட்டுமே விக்கிபக்கம் வருகிறேன் . அடுத்த 2 மாதங்கள் கூட எப்படி இருக்கும் என்று தெரியவில்லை . என்னால் இயன்றவரை தலைப்புகளை திட்டத்தின் பக்கத்தில் சேர்ப்பது ,வார்புருக்களை சேர்ப்பது போன்றவற்றை இக்காலத்தில் செய்கிறேன் . அவ்வப்போது கட்டுரைகளை தொகுக்கிறேன் . தாமதத்திற்கு மண்ணிக்கவும் . :( --Commons sibi (பேச்சு) 10:51, 3 நவம்பர் 2014 (UTC)Reply
விக்கிப்பீடியாவில் காலக்கெடு ஒன்றும் இல்லை :) நேரம் கிடைக்கும்போது பங்களியுங்கள் ! வலைவாசலை இற்றைப்படுத்துவதை மட்டும் கவனித்துக் கொள்ளுங்கள் ! --மணியன் (பேச்சு) 14:27, 3 நவம்பர் 2014 (UTC)Reply

Thanks

 

Thanks a lot for your participation! B25es (பேச்சு) 19:19, 17 நவம்பர் 2014 (UTC)Reply

  இது ஓர் முந்தைய உரையாடல்களின் பெட்டகம். இந்தப் பக்கத்தின் உள்ளடக்கத்தை தொகுக்க வேண்டாம். ஏதேனும் புதிய உரையாடலைத் துவக்க எண்ணினாலோ அல்லது பழைய உரையாடல் ஒன்றினைத் தொடர விரும்பினாலோ, தயவு செய்து நடப்பிலுள்ள பேச்சுப் பக்கத்தில் செய்யவும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Rsmn/தொகுப்பு_3&oldid=1756698" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to the user page of "Rsmn/தொகுப்பு 3".