முகமது அலிமுதீன்

இந்திய அரசியல்வாதி

முகமது அலிமுதீன் (Mohammed Alimuddin)(1920 தௌபால் மாவட்டம் – 3 பிப்ரவரி 1983) ஓர் இந்திய அரசியல்வாதியும் மணிப்பூரின் முன்னாள் முதல்வரும் ஆவார்.[1][2][3] இவர் மொய்ராங் கொய்ரெங் சிங்கிற்குப் பிறகு 1972-ல் மணிப்பூரின் முதலமைச்சராகப் பதவி வகித்தார். மணிப்பூர் மக்கள் கட்சியின் உறுப்பினராக அலிமுதீன் இருந்தார்.

முகமது அலிமுதீன்
Mohammed Alimuddin
மணிப்பூர் முதலமைச்சர்
பதவியில்
மார்ச்சு 23, 1972 – மார்ச்சு 27, 1973
முன்னையவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
பின்னவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
தொகுதிலில்லாங்
மணிப்பூர் முதலமைச்சர்களின் பட்டியல்
பதவியில்
மார்ச்சு 4, 1974 – சூலை 9, 1974
முன்னையவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
பின்னவர்யாங்மாசோ சாய்சா
தொகுதிலில்லாங்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1920-01-01)1 சனவரி 1920
லிலாங் துரெல் அகான்பி, லில்லாங்
இறப்பு3 பெப்ரவரி 1983(1983-02-03) (அகவை 62)
அரசியல் கட்சிமணிப்பூர் மக்கள் கட்சி
வாழிடம்(s)லிலாங் துரெல் அகான்பி, லில்லாங்

பணி தொகு

முகமது அலிமுதீன் 1948-ல் நடைபெற்ற முதல் சட்டமன்றத் தேர்தலில் லிலோங் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற முதல் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் ராஜ் குமார் டோரேந்திர சிங்கின் அரசாங்கத்தில் சபாநாயகராகவும், யாங்மாசோ ஷைசாவின் அமைச்சகத்தில் நிதி அமைச்சராகவும் பணியாற்றினார். இவரது காலத்தில், வடகிழக்கு இந்தியாவில் ஒரு முதன்மை மருத்துவக் கல்லூரிக்கு மண்டல மருத்துவ அறிவியல் நிறுவனம் உருவாகக் காரணமாக இருந்தார்.[4][5][6][7]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_அலிமுதீன்&oldid=3813210" இலிருந்து மீள்விக்கப்பட்டது