ஃபரடே கூண்டு
முழுமையாக கடத்தியொன்றால் மூடப்பட்ட கூடு போன்ற மூடுதலே ஃபரடே கூண்டு எனப்படும். இது அதனுள்ளே இருக்கும் பொருட்களை வெளியிலிருந்து வரும் நிலைமின்னேற்றத்திலிருந்தும் ஏனைய மின்தாக்கங்களிலிருந்தும் பாதுகாக்கும். ஃபரடே கூண்டுகளானது அவற்றை 1836இல் கண்டுபிடித்த மைக்கல் ஃபரடேயின் பேரில் பெயரிடப்பட்டுள்ளன.[1] வெளியிலிருந்து வரும் மின்னேற்றத்தை ஃபரடே கூண்டின் கடத்தும் பொருள் விநியோகிப்பதால் கூண்டின் உட்பகுதி மின்தாக்கத்திலிருந்து பாதுகாக்கப்படுகின்றது. இது பொதுவாக மின்சாதனங்களை மின்னலிலிருந்து பாதுகாக்கப் பயன்படுகின்றது. இது அதிக அலை நீளத்தைக் கொண்டுள்ள மின்காந்த அலைகளான ரேடியோ அலைகள் ஊடுருவுவதைத் தடுக்கக் கூடியது.
உதாரணங்கள்
தொகு- மைக்ரோ வேவ் அவன்
- உயர்த்திகள்
- அலுமினியப் பைகள்
- காந்த அதிர்வு அலை வரைவு அறைகள். இதில் ஏனைய ரேடியோ அலைகளின் தகவல்கள் பெறுபேற்றில் சேராமல் தடுப்பதற்காக.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Michael Faraday". Encarta. Archived from the original on 31 அக்டோபர் 2009. பார்க்கப்பட்ட நாள் 20 November 2008.