மின்னல்

வளிமண்டல மின்சார வெளியேற்றம்

மின்னல் என்பது மழைக் காலங்களில் திரண்ட கார் மேகங்களின் இடையே ஏற்படும் மிகப்பெரிய தீப்பொறிபோன்ற மின் பொறிக் கீற்றல். கண்ணைப்பறிக்கும் ஒளிவீச்சோடு, கோடுகளாய் வானில் கிளைத்து நொடிப்பொழுதில் தோன்றி மறையும் நிகழ்ச்சி தான் மின்னல். மின்னலோடு கூட பேரொலியாய் இடி இடிப்பதையும் கேட்கலாம். மழை மேகங்கள் (முகில்கள்) தமக்குள் இருக்கும் அணுக்கள் பல வழிகளிலும் உராய்ந்தோ பிறவாறோ மின்னூட்டம் பெற்று விடுகின்றன. மின்னூட்டம் பெறும் வழிபாடுகள் எல்லாம் முற்றிலுமாய் அறியப்படவில்லை. ஆனால் இப்படி மின்னூட்டம் பெற்று அது அதிகமாகிவரும் பொழுது, எதிர் மின்னூட்டம் கொண்ட பிற மேகக் கூட்டங்கள் அருகே வரும் பொழுது, மின்னூட்ட ஈர்ப்பு விசையால் காற்றின் வழியே மின் ஆற்றல் பாய்ந்து மின்னூட்டத்தை இழக்கின்றன. இவ்வாறு காற்றின் வழியே மின்னூட்டம் பாயும் பொழுது மின்பொறியாய் (தீப்பொறி போல) ஒளிவிடுகின்றது. ஒளிக்கீற்று போல் ஒளி இழையாய் தெரியும் பகுதியில் காற்று மின் மயமாக்கப் படுகின்றது.

6,200 சட்டங்கள் வினாடிக்கு எனும் முறையில் படமெடுக்கப்பட்ட அதியுயர் மெதுநகர் மின்னல் காணொளி
மின்னல் அடித்தல்
அமெரிக்காவில் உள்ள வர்சீனியாவில் மின்னல்
ஈபிள் கோபுரத்தை மின்னல் தாக்கும் காட்சி
இடிச் சத்தம்
மின்னல்

சில பொழுதுகளில் மின்னல் ஒரு மரத்தையோ நிலத்தையோ தாக்க வல்லது (இவ்வழியாக மேகங்களில் சேர்ந்திருந்த மின்னூட்டம் நிலத்திற்கு பாய்ந்து விடும்). இம்மின்னல் நிலத்தில் உள்ள விலங்குகளையும், ஆட்களையும் கூட தாக்கும். இதனால் பலர் உயிரிழந்து உள்ளனர் (தொடர்ந்து ஆண்டுதோறும் உயிரிழந்தும் வருகின்றனர்). [1]


வானில் வானூர்தியில் பறந்து செல்லும் பொழுதும் இவ்வாறு தாக்குதல் நிகழும், ஆனால் தரைக்கு இவ்வாற்றல் இறங்க அதிக வாய்ப்பில்லாததால், அதிக சேதம் ஏதும் விளைவிப்பதில்லை.

மின்னலின் வகைகள்

தொகு

சிறந்த ஆய்வு மற்றும் புரிந்துணர்வு மூலம் மின்னல் பொதுவாக மூன்று வகைப்படும். மின்னல் முகில்களிலிருந்து புவியில் முடிவடைதல் "புவி மின்னல்" எனப்படும்.இதில் மிகவும் பொதுவானது,ஒரு முகிலினுள்/முகில் தொகுதியினுள் நிகழும் மின்னல் "முகில் மின்னல்"எனப்படும். முகில்கள் இரண்டிற்கும் இடையே ஏற்படும் மின்னலும் "முகில் மின்னல்"எனப்படும்.மேலும், மிக குறைந்த அளவில் ஏற்படும் மின்னல் வகை உண்டு அது முகிலில் இருந்து வளிக்கு வெளிவிடப்பட்டு முடிவடையும் மின்னல் இது "வளி மின்னல்" எனப்படும். இவற்றை ஆராய்வது மிகவும் கடினமானது. இவற்றை ஆராய்வதற்கு மின்னலை அவதானிக்க வேண்டும் ஆனால் மின்னல் தாக்கும் இடத்தை முன்னரே அறிய முடியாது என்பதால் இவற்றை அவதானிப்பது மிகவும் கடினமானது.

மேற்கோள்கள்

தொகு
  1. மின்னல் தாக்கும் போது உயிர் பிழைக்க என்ன செய்ய வேண்டும் ? (புகைப்படத் தொகுப்பு)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்னல்&oldid=3601177" இலிருந்து மீள்விக்கப்பட்டது