விமானம்
விமானம், வான் விமானம் அல்லது ஆகாய விமானம் (airplane, aeroplane அல்லது plane) என்பது ஆற்றலால் இயங்கும் நிலைத்த இறக்கை வானூர்தி ஆகும். இது சுழல் விசிறி அல்லது தாரைப் பொறியிலிருந்து கிடைக்கும் உந்துவிசை மூலம் முன்னோக்கி தள்ளப்படும். விமானம் பல அளவுகளில், வடிவத்தில், இறக்கை உருவங்களில் உள்ளன. விமானம் மக்கள் போக்குவரத்திற்கும், சரக்கு போக்குவரத்திற்கும், ராணுவத்திலும், பொழுதுபோக்கிற்காகவும், அறிவியல் ஆராய்ச்சிகளுக்கும் பயன்படுகின்றது.
விமானம்/ஆகாய விமானம் | |
---|---|
![]() | |
எயார் பேர்லினின் போயிங் 737-700 |
விமானி வானூர்தியினுள் இருந்து பல விமானங்கள் பறக்க வைக்கப்படுகின்றன. ஆனால், சில தன்னியக்கமாக அல்லது கணினி கட்டுப்படுத்தல் கூடாக பறக்க வைக்கப்படுகின்றன.