பறப்பியல் என்பது வானூர்தியின் வடிவமைப்பு, உருவாக்கம், உற்பத்தி, செயல்பாடு மற்றும் பயன்பாடு ஆகியவற்றின் ஒட்டுமொத்தக் குறியீட்டுச் சொல்லாடலாகும், குறிப்பாக காற்றை விட கனமான வானூர்திகளைப் பற்றியது.[1][2][3]

இராணுவப் பயிற்சியில் பங்கேற்ற நார்வேஜியன் பெல் 412 ஹெலிகாப்டர்களின் தொகுப்பு.

வரலாறு

தொகு
காற்றைவிட கனமான பறக்கும் வாகனம் சாத்தியமற்ற ஒன்று.[4]
 

கற்கள் மற்றும் ஈட்டி போன்ற பழங்கால உந்தி வீசப்படும் எறிபொருட்களிலிருந்து விண்ணில் பறக்கும் சாதனங்கள் உருவாகியுள்ளன.[5][6] அந்தப் பொருள்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் பூமாராங், கோங்மிங் விளக்கு மற்றும் பட்டங்கள் ஆகியவையும் அடங்கும். இக்காரஸ் கதை போன்று பறக்கும் மனிதர்களைப் பற்றிய முற்கால செவி வழிக் கதைகள் உள்ளன, பின்னர் மிகவும் நம்பகத் தன்மை வாய்ந்த குறுகிய தூரம் பறக்கும் குறு விமானங்கள் தோன்றின, அப்பாஸ் இபின் ஃபிர்னாஸின் (810–887) இறக்கை விமானங்கள், மால்மெஸ்பரியின் எய்லிமர் (11ஆம் நூற்றாண்டு) மற்றும் பார்ட்டலோமியா லர்னென்சோ டி குஸ்மாவோவின் (1685-1724) ஹாட்-ஏர் பாசரோலா ஆகியவை தோன்றின.

மனிதர்களின் வானில் பறக்கும் செயல் நவம்பர் 21, 1783 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போது விமானவியலின் நவீனகாலம் தொடங்கியது. அது முதன் முதலாக மன்கோல்ஃபியர் சகோதரர்களால் உருவாக்கப்பட்ட காற்றை விட லேசான, கட்டப்படாத வெப்பக் காற்று பலூன்களில் செயல்படுத்தப்பட்டது. பலூன்கள் கீழ் நோக்கி மட்டுமே பயணிக்க முடியும் என்பதால் அவற்றின் நடைமுறையியலானது வரம்புக்குட்பட்டது. ஓட்டத்தக்க அல்லது இயக்கத்தக்க பலூன் தேவை என்பது உடனடியாக உணரப்பட்டது. ஜீன்-பியர் ப்ளான்ச்சர்டு மனிதரால் இயக்கப்படும் பலூனை முதன் முதலில் 1784 ஆம் ஆண்டு இயக்கிப் பறந்தார், அதன் மூலம் 1785 ஆம் ஆண்டு இங்கிலீஷ் கால்வாயைக் கடந்தார்.

தூக்குவதற்கு, முன்செலுத்துவதற்கு மற்றும் கட்டுப்படுத்துவதற்கு என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அமைப்புகளைக் கொண்டுள்ள விதத்திலான பொருத்தப்பட்ட இறக்கை கொண்ட பறக்கும் எந்திரமாக, நவீன விமானம் பற்றிய கருத்தை 1799 இல் சர் ஜியார்ஜ் கேலே முன்மொழிந்தார்.[7][8] முற்காலத்திய இயக்கத்தக்க மேம்பாடுகளில் இயந்திரத்தால் இயக்கப்படும் முன்செலுத்தல் (ஹென்றி கிஃப்ஃபார்டு, 1852), திடமான சட்டகங்கள் (டேவிட் ஸ்க்வார்ஸ், 1896) மற்றும் மேம்பட்ட வேகம் மற்றும் நிலைமாற்றுதலுக்கான திறன் (ஆல்பர்ட்டோ சாண்டோஸ்-டமோண்ட், 1901) ஆகியவை அடங்கும்.

 
, 1903 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ரைட் சகோதரர்களின் முதல் பறத்தல்
 
லேக்ஹர்ஸ்ட் நாவல் ஏர் ஸ்டேஷனில் ஹிண்டென்பர்க், 1936

முற்காலத்தில் ஆற்றல் மிக்க, காற்று விமானத்தை விட திடமான விமானம் எது என்பது பற்றி பல்வேறு போட்டிபோடும் கூற்றுகள் இருந்தாலும், பெரும்பாலும் பரவலாக டிசம்பர் 17, 1903 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதை ரைட் சகோதரர்கள் சாதித்தனர், அவர்கள் நீண்டகாலமாக இருந்து வந்த விமானத்தைக் கட்டுப்படுத்துவதில் இருந்த சிக்கல்களைத் தீர்த்தனர். இறக்கைத் துடுப்புகளின் பரவலான பயன்பாட்டினால் விமானத்தைக் கட்டுப்படுத்தி இயக்குவது எளிதானது, மேலும் ஒரு பத்தாண்டுகளுக்குப் பின்னரே முதல் உலகப்போரின் தொடக்கத்தின் போதே, வேவு பார்த்தல், தளவாடங்கள் அறிதல் மற்றும் நிலப் படைகளைத் தாக்குதலிலும் கூடப் பயன்படுத்துவதற்கான காற்றை விட அதிக எடை கொண்ட, இயந்திர சக்திக் கொண்ட விமானங்கள் நடைமுறைக்கு வந்தன.

இந்த வடிவமைப்புக்கள் மிகவும் பெரிதாகவும் மிகவும் நம்பகமானதாகவும் மாறிய பின்னர் விமானங்கள் மக்களையும் சரக்குகளையும் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்டன. சிறிய திடமல்லாத ப்ளிம்புகளுக்கு மாறாக, பெரிய திடமான ஏர்ஷிப்களே முதன் முதலில் நெடுந்தூரத்திற்கு மக்களையும் சரக்குகளையும் ஏற்றிச்செல்லப் பயன்படுத்தப்பட்ட விமானங்களாகும். இந்த வகை விமானங்களில் மிகவும் பிரபலமானது ஜெர்மானிய ஜெப்பெளின் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்டது.

மிகவும் வெற்றிகரமான ஜெப்பெளின் விமானம் கிராஃப் ஜெப்பெளின் ஆகும். அது ஒரு மில்லியன் மைல்களையும் விட அதிக தொலைவு பறந்தது. மேலும், 1929 ஆம் ஆண்டு ஆகஸ்டில் உலகைச்சுற்றிய பயணமும் அதில் அடங்கும். இருப்பினும், அந்தக் காலத்தைச் சேர்ந்த, சில நூறு மைல்களே பறக்கும் திறன் கொண்ட விமானங்களின் மீதான ஜெப்பெளினின் மேலாதிக்கம் விமான வடிவமைப்பு முன்னேறியதால் குறைந்து போயின. ஏர்ஷிப்களின் "பொற்காலம்" 1937 ஆம் ஆண்டின் மே 6 ஆம் தேதி முடிந்தது, அப்போது தான் ஹிண்டன்பர்க் விமானம் தீப்பற்றி 36 பேர் இறந்தனர். இருப்பினும் அவற்றை மீண்டும் பயன்படுத்துவது பற்றி பரிசீலிக்க அவ்வப்போது முயற்சிகள் எடுக்கப்பட்டன, அப்போதிலிருந்து ஏர்ஷிப்கள் ஒரு மூலையில் ஒதுக்கப்பட்டுவிட்டன.

விமானவியல் துறையில் மிகப் பெரும் முன்னேற்றமானது 1920 மற்றும் 1930 ஆம் ஆண்டுகளின் போது நிகந்தது. சார்லஸ் லிண்ட்பெர்க்ஸ் 1927 ஆம் ஆண்டில் ட்ரான்ஸட்லாண்டிக் பயணம் மற்றும் அதற்கடுத்த ஆண்டில் சார்லஸ் கிங்ஸ்ஃபோர்டு ஸ்மித்தின் ட்ரான்ஸ்பசிஃபிக் போன்றவற்றால் அம்முன்னேற்றம் நிகழ்ந்தது. டக்லஸ் DC-3 என்ற டிசைன் அந்தக் காலகட்டத்தில் மிகவும் வெற்றிகரமாக அமைந்த வடிவமைப்புக்களில் ஒன்றாகும், அதுவே முதல் ஏர்லைனராக தனிப்பட்ட முறையில் பயணிகளை மட்டும் ஏற்றிச்சென்றதில் இலாபமிக்கதாக இருந்தது, அதுவே பயணிகள் விமான சேவையின் நவீன காலத்தைத் தொடங்கியது. இரண்டாம் உலகப்போரின் தொடக்கத்தின் போது, பல நகரங்களிலும் ஊர்களிலும் விமான நிலையங்கள் கட்டப்பட்டன, அப்போது தகுதிவாய்ந்த விமானிகள் பலர் இருந்தனர். இந்தப் போரினால் விமானவியலில் பல புதிய கண்டுபிடிப்புகள் உண்டாயின, முதல் ஜெட் விமானம் மற்றும் முதல் திரவ எரிபொருள் ராக்கெட்டுகள் ஆகியனவும் அதிலடங்கும்.

 
NASA வின் ஹீலியோஸ் சூரிய சக்தியில் இயங்கும் விமானத்தை ஆரய்கிறது.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், குறிப்பாக வட அமெரிக்காவில், பொது விமானவியலில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டது. அது வணிக ரீதியாகவும் தனியார் பிரிவிலும் காணப்பட்டது, பல ஆயிரக்கணக்கான விமானிகள் இராணுவ சேவைகளிலிருந்து விடுவித்தது மேலும் பல செலவு குறைந்த, போரில் உபரியாக மீந்த போக்குவரத்து மற்றும் பயிற்சிக்கான விமானங்கள் பல கிடைத்தது இதற்குக் காரணமாகும். செஸ்னா, பைப்பர் மற்றும் பீச்க்ராஃப்ட் போன்ற உற்பத்தியாளர்கள் புதிய மத்தியதர வர்க்க சந்தைக்கான லேசான விமானங்களை உற்பத்தி செய்யும்படி தங்கள் உற்பத்தி செயலாக்கத்தை விரிவாக்கினர்.

1950 ஆம் ஆண்டுகளின் போது குடிமக்களுக்கான ஜெட்கள் உற்பத்தி செய்வது வளர்ந்தது, அதன் தொடக்கமாக டி ஹேவிலேண்ட் கோமெட் உற்பத்தியானது. இருப்பினும் முதலில் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட ஜெட் போயெங் 707 ஆகும், ஏனெனில் அந்த நேரத்தில் இருந்த மற்ற எதனையும் விட அதுவே அதிகளவில் பொருளாதார ரீதியில் சாதகமாக இருந்தது. அதே நேரம், சிறிய பயணிகள் விமானங்களுக்கான முன்செலுத்தல் இறக்கையுடைய டர்போப்ராப் பிரபலமடையத் தொடங்கியது, இதனால் சிறிய அளவு தடங்களுக்கு பரவலான காலநிலைகளில் விமான சேவையை வழங்க முடிந்தது.

1960 ஆம் ஆண்டுகளிலிருந்து, சிக்கலான காற்றுச்சட்டகங்கள் மற்றும் மென்மையான மிகவும் செயல்திறன் மிக்க பொறிகள்(எஞ்சின்கள்) கிடைக்கத் தொடங்கின. கன்கார்டு நிறுவனம் ஒரு முறை சூப்பர்சோனிக் பயணிகள் விமான சேவையை வழங்கியது, ஆனால் மிகவும் முக்கியமான புதிய கண்டுபிடிப்புகள் கருவிமயமாக்கல் மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றிலேயே தோன்றின. திட-நிலை எலக்ட்ரானிக்ஸ் உலகளாவிய, இடமறிதல் முறைமை, செயற்கைக்கோள் தகவல்தொடர்பு மற்றும் தொடர்ந்து அதிகரித்துவரும் சிறிய கணினிகள் மற்றும் LED டிஸ்ப்ளேக்கள் ஆகியவற்றின் வருகையால் ஏர்லைனர்களின் விமானி இருக்கைகள் பலவித மாற்றங்களைப் பெற்றன, மேலும் அவை மிகச் சிறிய விமானங்களைச் செய்யவும் உதவியுள்ளன. விமானிகள் இப்போது மிகவும் துல்லியமாகச் வழிச்செலுத்தவும், தரை, தடைகள் மற்றும் பிற அருகாமையிலுள்ள விமானம் ஆகியவற்றை வரைபடத்திலோ செயற்கைக் காட்சியின் மூலமாகவோ, இரவில் அல்லது குறைவான புலப்படுதன்மை கொண்ட நேரத்திலோ கூடப் பார்க்கவும் முடியும்.

2004 ஆம் ஆண்டில் ஜூன் 21 ஆம் திகதி ஸ்பேஸ்ஷிப்ஒன் முதல் தனியார் நிதியளிப்பில் உருவான ஒரு விண்வெளிப் பயணத்தை உருவாக்க உதவிய விமானமாக விளங்கியது. இது விமானவியல் சந்தையானது புவியின் வளிமண்டலத்தையும் தாண்டிச் செல்ல ஒரு தொடக்கப் புள்ளியாக அமைந்தது. அதே நேரத்தில், எத்தனால் மின்சாரம் மற்றும் சூரிய ஆற்றல் ஆகியவை போன்ற மாற்று எரிபொருள்களால் இயங்கும் பறக்கும் விமான மாதிரிகளும் பொதுவான பயன்பாட்டிலுள்ளன, விரைவில் பிரதான பயன்பாட்டில், குறைந்தது லேசான விமானத்திற்கான இடத்திலாவது வரக்கூடும்.

குடிசார் பறப்பியல்

தொகு

மக்கள் விமானவியலில் இராணுவமல்லாத அனைத்து விமான சேவைகளும் அடங்கும், அவை பொது விமானவியல் மற்றும் திட்ட அட்டவணைப்படியமையும் விமானப் போக்குவரத்து ஆகிய இரண்டையும் உள்ளடக்கியவை.

விமானப் போக்குவரத்து

தொகு
 
நார்த்வெஸ்ட் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் A330-300

மக்கள் விமானப் போக்குவரத்துக்கான விமானங்களுக்கான ஐந்து பெரிய உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன (அகர வரிசையில்):

  • எம்ப்ரேயர், பிரேசிலைச் சேர்ந்தது
  • ஏர்பஸ், ஐரோப்பாவை சேர்ந்ததுபோயெங், அமெரிக்காவை சேர்ந்தது
  • பாம்பேர்டையர், கனடாவைச் சேர்ந்தது
  • போயிங், அமெரிக்காவை சேர்ந்தது
  • டுப்போலேவ், ரஷ்யாவைச் சேர்ந்தது (யுனைட்டட் ஏர்க்ராஃப்ட் பில்டிங் கார்ப்பரேஷனுடன் ஒன்றிணைக்கப்பட உள்ளது)

போயிங், ஏர்பஸ் மற்றும் டுப்புலேவ் ஆகியவை அகல உடல்பகுதி கொண்ட மற்றும் குறுகலான உடல் பகுதி கொண்ட ஜெட் ஏர்லைனெர்களில் கவனம் செலுத்துகின்றன, பாம்பேர்டையர் மற்றும் எம்ப்ரேயர் ஆகியவை வட்டார ஏர்லைனர்களில் கவனம் செலுத்துகின்றன. சிறப்பு பாகங்களை வழங்கும் உலகெங்கிலுமுள்ள வழங்குநர்களின் பெரிய நெட்வொர்க்குகளால் இந்த உற்பத்தி நிறுவனங்கள் ஆதரவளிக்கப்படுகின்றன, இதில் சில வழங்குநர்கள் தொடக்க வடிவமைப்பு மற்றும் இறுதி ஒருங்கமைப்பு ஆகியவற்றை மட்டும் தங்கள் ஆலைகளிலேயே செய்து தருகின்றனர். சீன ACAC கன்சோர்ட்டியம் அதன் ACAC ARJ21 வட்டார ஜெட் விமானத்தின் மூலம் விரைவில் மக்களுக்கான விமானப் போக்குவரத்து சேவையில் இறங்க இருக்கிறது.[9]

1970 ஆம் ஆண்டு வரையில் பெரும்பாலான பெரிய விமானங்கள் கொடியேற்றப்பட்ட விமானங்களாகவே இருந்தன, அவை அந்தந்த நாட்டு அரசாங்கங்களால் நிதியளிக்கப்பட்டு உருவாக்கப்பட்டவை, மேலும் போட்டியினின்றும் மிகவும் பாதுகாக்கப்பட்டிருந்தன. அப்போதிலிருந்து, விமான துறையின் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களின் விளைவாக போட்டி அதிகரித்தது, மேலும் நுகர்வோர்களின் தேர்வு செய்தலானது விமான சேவைகளின் கட்டணக் குறைவுடன் பிணைக்கப்பட்டதானது. அதிக எரிபொருள் விலைகள், குறைந்த கட்டணங்கள், அதிக ஊதியங்கள் மற்றும் செப்டம்பர் 11, 2001 தாக்குதல் மற்றும் சார்ஸ் தொற்றுநோய் போன்ற சிக்கல்கள் ஆகியவற்றால் பல பழைய விமான சேவை நிறுவனங்கள் அரசாங்க கையகப்படுத்தல், திவால் அல்லது கூட்டிணைவு ஆகிய முடிவுகளை அடைந்தன. அதே நேரம், ரியானேர், சவுத்வெஸ்ட் மற்றும் வெஸ்ட்ஜெட் போன்ற குறைந்த கட்டண விமான போக்குவரத்துக்கள் செழித்தன.

பொது விமானப் போக்குவரத்து

தொகு
 
1947 செஸ்னா 120
 
வெயிட்-ஷிஃப்ட் அல்ட்ராலைட் விமானம், ஏர் கிரியேஷன் டனராக்

பொது விமானப் போக்குவரத்தில் நேரத்திட்டமிடப்படாத அனைத்து மக்கள் விமானாங்களும் அடங்கும், இதில் தனியார் மற்றும் வணிக வகை ஆகிய இரண்டும் சேரும். பொது விமானப் போக்குவரத்தில் வணிக விமானங்கள், ஏர் சார்ட்டர், தனியார் விமானப் போக்குவரத்து, விமானப் பயிற்சி, பலூனிங் பயிற்சி, பாராசூட் பயிற்சி, கிளைடிங், ஹேங் கிளைடிங், உச்சிக் காட்சிப் புகைப்படவியல், ஃபுட் லான்ச்சுடு பவர்டு ஹேங் கிளைடர்கள், ஏர் ஆம்புலான்ஸ், விதை தூவல், வாடகை விமானங்கள், போக்குவரத்து அறிக்கையிடல், காவல் துறை விமான ரோந்துகள் மற்றும் காட்டுத்தீயணைப்பு ஆகியவையும் அடங்கும்.

ஒவ்வொரு நாடும் அதன் விமானப் போக்குவரத்தை வெவ்வேறு முறையில் ஒழுங்குமுறைப்படுத்துகிறது, ஆனால் பொதுவாக விமானப் போக்குவரத்தானது அது தனியாருக்குரியதா, வணிகத்திற்குரியதா என்பதையும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்களின் வகையைப் பொறுத்தும் வெவ்வேறு ஒழுங்குமுறைகளுக்கு உட்படுகின்றது.

செஸ்னா, பைப்பர், டைமண்ட், மூனி, சைரஸ் டிசைன், ரேய்த்தியான் மற்றும் பிற நிறுவனங்கள் உள்ளிட்ட பல சிறிய விமான உற்பத்தியாளர்கள் பொது விமானப் போக்குவரத்து சந்தையில் சேவையை வழங்குகின்றன, அவற்றின் சேவைகள் பெரும்பாலும் தனியார் விமானப் போக்குவரத்து மற்றும் விமானப் பயிற்சி ஆகியவற்றிலேயே கவனம் செலுத்துகின்றன.

முன்னர் பெரிய விமானங்களில் மட்டுமே இருந்த (GPS உள்ளிட்ட) மேம்பட்ட விமானத் தொழில்நுட்பங்களின் அறிமுகம் மற்றும் விமானத்தை லேசானதாகவும் வேகமாகச் செல்லக்கூடியதாகவும் வடிவமைப்பதற்கான லேசன உறுதியான பொருள்களின் அறிமுகம் ஆகியவையே (GA விமானங்களில் பெரும்பாலானவையாக உள்ள) சிறு விமானங்களிலான மிகவும் முக்கியமான சமீபத்திய மேம்பாடுகளாக உள்ளன. அல்ட்ராலைட் மற்றும் தனிநபர் தயாரிப்பு விமானங்கள் ஆகியவையும் உடற்பயிற்சி தேவைகளுக்காக மிகவும் அதிகமாக பிரபலமாகியுள்ளன, தனியார் விமானப் போக்குவரத்தை அனுமதிக்கும் பல நாடுகளில் அவை மிகவும் செலவு குறைந்தவை மற்றும் அவை சான்றளிக்கப்பட்ட விமானங்களைக் காட்டிலும் குறைவாகவே கட்டுப்பாடுகளுக்குட்பட்டவை என்பதே இதற்குக் காரணமாகும்.

இராணுவ விமானப் போக்குவரத்து

தொகு

18ஆம் நூற்றாண்டு காலத்தில் எளிய பலூன்கள் மேற்பார்வைப் பணிக்காக விமானமாகப் பயன்படுத்தப்பட்டன. ஆண்டுகள் செல்லச் செல்ல, அதிகரித்துவரும் திறன் மற்றும் தேவைகளுக்கு ஏற்ற வகையிலான இராணுவ விமானங்கள் உருவாக்கப்பட்டன. இராணுவ விமான உற்பத்தியாளர்கள் தங்கள் நாட்டு விமானப் படைக்காக விமானங்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்திற்காக போட்டியிடுகின்றனர். செலவு, செயல்திறன் மற்றும் உற்பத்திக்கான வேகம் ஆகிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டே விமானங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

 
லாக்கீட் SR-71 இன் பல அம்சங்களிலான செயல்திறனை இதுவரை எதுவும் விஞ்சவில்லை.

இராணுவ விமானங்களின் வகைகள்

தொகு
  • பிற விமானங்களை அழிப்பதே போர் விமானங்களின் பிரதான செயல்பாடாகும். (எ.கா. சாப்வ்வித் கேமல், A6M ஜீரோ, F-15, MiG-29, Su-27, F-22).
  • தரைத் தாக்குதல் விமானமானது யுத்த ரீதியில் முக்கியத்துவம் மிக்க நிலத்திலமைந்த இலக்குகளைத் தாக்க பயன்படுத்தப்படுகிறது. (எ.கா. ஜங்கர்ஸ் ஸ்டுகா டைவர் பாமர், A-10 வார்தாக், இலியூஷின் Il-2, J-22 Orao மற்றும் ஷுக்கோயி சூ-25).
  • பாமர்கள் பொதுவாக தொழிற்சாலைகள் மற்றும் எண்ணெய் ஆலைகள் போன்ற மிகவும் யுத்த கேந்திரங்கள் இலக்குகளைத் தாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. (எ.கா. ஜெப்பெளின், B-29 சூப்பர்ஃபோர்ட்ரெஸ், Tu-95, டஸ்ஸால்ட் மைரேஜ் IV மற்றும் B-52 ஸ்ட்ரேட்டோஃபோர்ட்ரெஸ்)
  • போயிங் சி-17 குளோப்மாஸ்டர் III அல்லது C-130 ஹெர்குலஸ் போன்ற சரக்குப் போக்குவரத்து விமானங்கள் பொருள்களையும் ஆட்களையும் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படுகின்றன.
  • விசாரணை விமானங்கள் தேடுதல் பணிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன (எ.கா. ரம்ப்ளர் டாப், டி ஹேவிலேண்ட் மஸ்கிட்டோ, U-2 மற்றும் MiG-25R).
  • ஹெலிகாப்டர்கள் தாக்குதல் ஆதரவு, சரக்குப் போக்குவரத்து மற்றும் புவி நெருக்கப் பறத்தல் ஆகிய தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன (எ.கா.AH-64,Mi-24).

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு (ATC)

தொகு
 
நெதர்லாந்தின் ஸ்கைபோல் விமான நிலையத்திலுள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரங்கள்

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு (ATC) என்பது பிரிந்திருத்தலுக்கு உதவியாக இருக்கத் தேவையான தகவல்தொடர்பு முக்கியமானதாகும் — அதாவது, கிடைமட்டத்திலும் செங்குத்துவாக்கிலும் மோதும் ஆபத்துகளைத் தவிர்க்கப் போதுமான அளவு தொலைவில் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துதல். விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் விமானிகளால் வழங்கப்படும் நிலை அறிக்கைகளை ஒருங்கிணைத்து செயல்படுகின்றனர் அல்லது (அமெரிக்கா போன்ற) அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் அவர்கள் விமானங்களின் நிலைகளைக் காண ரேடார் வசதியைப் பயன்படுத்துகின்றனர்.

பொதுவாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டில் நான்கு வெவ்வேறு வகைகள் உள்ளன:

  • விமான நிலையங்களுக்கிடையே தடத்திலேயே விமானத்தைக் கட்டுப்படுத்தும் மையக் கட்டுப்பாட்டாளர்கள்
  • விமான நிலையத்தின் குறுகிய தொலைவில் (வழக்கமாக கிடைமட்டத்தில் 10–15 கி.மீ. மற்றும் செங்குத்துவாக்கில் 1,000 மீ.) விமானத்தைக் கட்டுப்படுத்தும் கட்டுப்பாட்டு கோபுரங்கள் (கோபுரம், தரைக் கட்டுப்பாடு, இடம் வழங்கல் மற்றும் பிற சேவைகள்).
  • பொதுவாக ரேடார் சாதனங்களைப் பயன்படுத்தாமலே கண்டங்களுக்கிடையே உள்ள சர்வதேச கடல்களின் மேலே விமானங்களைக் கட்டுப்படுத்தும் கடல்வழிக் கட்டுப்பாட்டாளர்கள்.
  • பரபரப்பான விமான நிலையங்களில் பரந்த பகுதியில்(வழக்கமாக 50–80 கி.மீ.) விமானங்களைக் கட்டுப்படுத்தும் முனையக் கட்டுப்பாட்டாளர்கள்.

குறிப்பாக இன்ஸ்ட்ருமெண்ட் ஃப்ளைட் ரூல்ஸ் (IFR) விதிகளின்படி இயங்கும் விமானங்களுக்கு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மிக முக்கியமானதாகும், இதில் விமானிகள் எதிரே வரும் பிற விமானங்களைப் பார்க்க முடியாதபடி வானிலை நிலவலாம். இருப்பினும் அதிக போக்குவரத்து நெரிசலுள்ள பகுதிகளில், குறிப்பாக பெரிய விமான நிலையங்களில் விஷுவல் ஃப்ளைட் ரூல்ஸ் (VFR) விதிகளின்படி இயங்கும் விமானங்களும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.

பிற விமானங்களிலிருந்து பிரிந்திருத்தலுக்கு உதவுவதோடு, அவர்களின் பணிச்சுமையைப் பொறுத்து விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், வானிலை அறிவுரைகள், தரைப் பிரிப்பு, வழிச்செலுத்தல் உதவி மற்றும் பிற சேவைகளையும் விமானிகளுக்கு வழங்கலாம்.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் அனைத்து விமானங்களையும் கட்டுப்படுத்துவதில்லை. வட அமெரிக்காவின் பெரும்பாலான VFR விமானங்கள் (அவை அதிக போக்குவரத்து நெரிசல் பகுதி அல்லது பெரிய விமான நிலையங்களுக்கு அருகே செல்லாத வரை) விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் பேச வேண்டிய அவசியம் இல்லை. வடக்கு கனடா, வடக்கு ஸ்காட்லாந்தின் குறை உயரப் பகுதிகள் போன்ற பல பகுதிகளில் IFR விமானங்களுக்கும் கூட குறை உயரங்களில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் சேவைகள் கிடைப்பதில்லை.

சுற்றுச்சூழல் தாக்கம்

தொகு

எரித்தல் செயல்பாட்டுடன் தொடர்புடைய எல்லா நடவடிக்கைகளையும் போலவே, இயக்கப்படும் விமானங்கள் (ஏர்லைனர்களிலிருந்து வெப்பக் காற்று பலூன்கள் வரை) கார்பன் டை ஆக்சைடு (CO2) போன்ற பசுமை இல்ல வாயுக்கள், புகைக்கரி மற்றும் பிற மாசுபடுத்திகளை வளிமண்டலத்தில் வெளியிடுகின்றன. மேலும், விமானவியலுக்கே உரித்தான சில சுற்றுச்சூழல் தாக்கங்களும் உள்ளன:

 
அதி உயர ஜெட் ஏர்லைனர்களால் விட்டுச்செல்லப்பட்ட நீராவி செயற்கை மேகங்கள்இதனால் கீற்று மேகம் உருவாகலாம்.
  • ட்ரோபோஸ்பியருக்கு அருகில் அதிக உயரத்தில் இயங்கும் விமானங்கள் (பிரதானமாக பெரிய ஜெட் ஏர்லைனர்கள்) தூசிப்படலத்தை வெளியிட்டு செயற்கை மேகங்களை விட்டுச் செல்கின்றன, இதில் இரண்டுமே கீற்று மேக உருவாக்கத்தை அதிகரிக்கின்றன — விமானப் போக்குவரத்து தொடங்கியது முதல் இந்த மேக மூட்டத்தின் அளவு குறைந்தது 0.2% அதிகரித்துள்ளது.[10]
  • ட்ரோபோஸ்பியருக்கு அருகில் அதிக உயரத்தில் இயங்கும் விமானங்கள் அந்த உயரத்தில் உள்ள பசுமை இல்ல வாயுக்களுடன் வினைபுரியக்கூடிய வேதிப்பொருள்களையும் வெளியிடலாம் குறிப்பாக நைட்ரஜன் சேர்மங்கள், இவை ஓசோனுடன் வினைபுரிந்து ஓசோன் செறிவை அதிகரிக்கின்றன.[11][12]
  • பெரும்பாலான லேசான பிஸ்டன் விமானங்கள் ஏவ்கேஸைப் பயன்படுத்துகின்றன, அதில் உள்ள டெட்ரா-எத்தில் லெட் (TEL) என்ற அதிக நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள் விமான நிலையத்தின் அருகாமைப் பகுதிகளில் மண் மாசுபடுத்தலை விளைவிக்கலாம். சில குறை அமுக்கம் கொண்ட பிஸ்டன்களைக் கொண்ட எஞ்சின்கள் காரீயம் இல்லாத மோகாஸில் இயங்குகின்றன, மேலும் சில புதிய லேசான விமானங்கள் டர்பைன் எஞ்சின்கள் மற்றும் டீசல் எஞ்சின்களைப் பயன்படுத்துகின்றன, இவை இரண்டும் காரீயம் இல்லாமலே இயங்கக்கூடியவை.

மேலும் காண்க

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Aviation
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

குறிப்புகள்

தொகு
  1. World's Air Fleets Hardcover – 1 May 1969 by David Wragg (Author), Publisher: ‎Littlehampton Book Services Ltd; 2nd edition (1 May 1969), Language: ‎English, Hardcover:176 pages ISBN-10: ‎0711000859, ISBN-13: ‎978-0711000858
  2. World's Air Forces Hardcover – 15 Oct. 1971 by David Wragg (Author), Publisher: ‎Osprey Publishing; First Edition (15 Oct. 1971), Language: ‎English, Hardcover: ‎232 pages, ISBN-10: ‎0850450381, ISBN-13: ‎978-0850450385
  3. Speed in the Air, Hardcover – 5 Sept. 1974 by David Wragg (Author), Publisher: ‎Osprey Publishing; 1st ed edition (5 Sept. 1974), Hardcover: ‎192 pages, ISBN-10: ‎0850451752, ISBN-13: ‎978-0850451757
  4. Thompson, Silvanus. "Wikiquote Lord Kelvin", Letter to R. B. Hayward (1892), as quoted in Energy and Empire : A Biographical Study of Lord Kelvin (1989) by Crosbie Smith and M. Norton Wise
  5. "ஆர்ச்சிட்டாஸ் ஆஃப் டார் எண்ட்டம், டெக்னாலஜி மியூசியம் ஆஃப் தெஸ்ஸலோனிக்கி, மேசிடோனியா, கிரீஸ்". Archived from the original on 2008-12-26. பார்க்கப்பட்ட நாள் 2010-02-26.
  6. "தனித்தியங்கி வரலாறு". Archived from the original on 2002-12-05. பார்க்கப்பட்ட நாள் 2010-02-26.
  7. "Aviation History". பார்க்கப்பட்ட நாள் 2009-07-26.
  8. "Sir George Carley (British Inventor and Scientist)". Britannica. பார்க்கப்பட்ட நாள் 2009-07-26. English pioneer of aerial navigation and aeronautical engineering and designer of the first successful glider to carry a human being aloft.
  9. "சைனா'ஸ் ஏர்க்ரேஃப்ட் இண்டஸ்ட்ரி கெட்ஸ் ஆஃப் த க்ரௌண்ட் - டைம்". Archived from the original on 2010-10-31. பார்க்கப்பட்ட நாள் 2010-02-26.
  10. ஏவியேஷன் அண்ட் க்ளோபால் அட்மாஸ்ஃபியர் (IPCC)
  11. Lin, X.; Trainer, M. and Liu, S.C., (1988). "On the nonlinearity of the tropospheric ozone production.". Journal of Geophysical Research 93: 15879–15888. doi:10.1029/JD093iD12p15879. 
  12. Grewe, V.; D. Brunner, M. Dameris, J. L. Grenfell, R. Hein, D. Shindell, J. Staehelin (July 2001). "Origin and variability of upper tropospheric nitrogen oxides and ozone at northern mid-latitudes". Atmospheric Environment 35 (20): 3421–3433. doi:10.1016/S1352-2310(01)00134-0. http://linkinghub.elsevier.com/retrieve/pii/S1352231001001340. பார்த்த நாள்: 2007-11-20. 

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பறப்பியல்&oldid=3682462" இலிருந்து மீள்விக்கப்பட்டது