வான்வழிப் போக்குவரத்து நிறுவனம்

பயணிகளையும் சரக்குகளையும் வான்வழியே ஏற்றிச் செல்ல போக்குவரத்து சேவைகளை வழங்கும் நிறுவனம்

வான்வழிப் போக்குவரத்து நிறுவனம் அல்லது விமானச்சேவை நிறுவனம் (airline) என பயணிகளையும் சரக்குகளையும் ஏற்றிச் சென்று வான்வழிப் போக்குவரத்து சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் அழைக்கப்படுகின்றன. இந்தச் சேவைகளை வழங்குவதற்கான வானூர்திகள் இந்த நிறுவனங்களுக்கு உரிமையானதாகவோ குத்தகைக்கு எடுக்கப்பட்டதாகவோ இருக்கலாம். மேலும் மற்ற வான்வழிப் போக்குவரத்து நிறுவனங்களுடன் இணைந்தோ கூட்டணி அமைத்தோ ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதும் உண்டு. பொதுவாக வான்வழிப் போக்குவரத்து நிறுவனங்கள் வான்வழி இயக்கச் சான்றிதழோ அல்லது ஒரு அரசு பறப்பியல் அமைப்பிடமிருந்து உரிமமோ கொண்டிருக்க வேண்டும்.

வான்வழிப் போக்குவரத்து நிறுவனம்
உலகின் மிகப்பெரிய பயணியர் வான்வழி போக்குவரத்து நிறுவனமான டெல்ட்டா ஏர்லைன்சின் போயிங் 767-300ER இரக வானூர்தி.

ஒரேஒரு வானூர்தியுடன் அஞ்சல் அல்லது சரக்கு எடுத்துச் செல்லும் நிறுவனங்களிடமிருந்து இவை வேறுபடுகின்றன. இந்த நிறுவனங்களை கண்டமிடை, கண்டத்தினுள், உள்நாட்டு, மண்டல, அல்லது பன்னாட்டு வான்வழிப் போக்குவரத்து நிறுவனங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. மேலும் பட்டியலிடப்பட்ட சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் என்றும் தனியுரிமைப் பயணவசதிகளை வழங்கும் நிறுவனங்கள் எனவும் பிரிக்கப்படுகின்றன.

மேற்சான்றுகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு