போயிங்
போயிங் ( Boeing ) என்னும் நிறுவனம் வில்லியம் போயிங் என்பவரால் ஐக்கிய அமெரிக்காவின் சியாட்டில் நகரில் 1916 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. வானூர்தி தயாரிப்புத் துறையிலும், விண்வெளி, மற்றும் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தித் துறையிலும் சிறந்து இது விளங்குகிறது. 1997 ஆம் ஆண்டு மெக்டொனால்டு டக்ளஸ் வானூர்தி தயாரிப்பு நிறுவனத்தை வாங்கிய போயிங் நிறுவனம், இன்றைய காலகட்டத்தில் தலைசிறந்த வானூர்தி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது.[1] உலகமெங்கிலும் பல கிளைகளை கொண்டுள்ள இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சிகாகோ நகரில் அமைந்துள்ளது. வணிகநோக்கில், பயணிகள் மற்றும் சரக்கு வானூர்தி தயாரிப்பில் உலகில் முதல் இடத்தில் உள்ளது. போயிங் நிறுவனம் ஐக்கிய அமெரிக்காவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தின் பங்கு, டௌ ஜோன்ஸ் தொழில்துறை குறியீட்டின் அங்கமாகும்.[2][3][4]
வகை | பொதுத்துறை நிறுவனம் (நியாபச: BA, டோபச: 7661) |
---|---|
நிறுவுகை | சியாட்டில், வாஷிங்டன் மாநிலம் (1916) |
தலைமையகம் | சிக்காகோ, இலினொய், ஐக்கிய அமெரிக்கா |
முதன்மை நபர்கள் | W. ஜேம்ஸ் மெக்நேர்லி ஜுனியர், CEO |
தொழில்துறை | வானூர்தி தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு துறை சாதனங்கள் மற்றும் ஆராய்ட்சி. |
உற்பத்திகள் | வணிகரீதியான வானூர்திகள் இராணுவ வானூர்தி இராணுவ தளவாடங்கள் விண்வெளி கலங்கள் |
வருமானம் | அமெ$66.38 பில்லியன்( 2007) |
நிகர வருமானம் | $4.05 பில்லியன் |
பணியாளர் | 163,851 (2008) |
பிரிவுகள் | போயிங் வணிக வானூர்திகள் போயிங் இணைந்த பாதுகாப்பு அமைப்புகள் |
உள்ளடக்கிய மாவட்டங்கள் | Aviall, Inc. Jeppesen போயிங் ஆஸ்திரேலியா போயிங் பாதுகாப்பு நிறுவனம், ஐக்கிய இராச்சியம் போயிங் வணிக மையம் |
இணையத்தளம் | Boeing.com |
வரலாறு
தொகு1950ஆம் ஆண்டுக்கு முன்
தொகுபோயிங் நிறுவனம் ஜூலை 15, 1916 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டில் நகரில் வில்லியம் எட்வர்ட் போயிங் என்பவரால் "பசிபிக் ஏரோ புராடக்ட்ஸ் கோ" என்ற பெயரில் துவங்கப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையை சார்ந்த ஜார்ஜ் கோனார்ட் என்பவரின் தொழில்நுட்ப உதவியுடன் வளர்ந்த இந்நிறுவனத்தின் தொடக்ககால வானூர்திகள் கடல்வானூர்திகளே. 1917 ஆம் ஆண்டு மே மாதம் "போயிங் வானூர்தி நிறுவனம்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. யேல் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த வில்லியம் போயிங், மர தச்சு வேலையில் வல்லுனர் ஆனார்.
1927 ஆம் ஆண்டு போயிங் நிறுவனம் போயிங் வான் போக்குவரத்து கழகம் என்ற கிளை நிறுவனத்தை தொடங்கியது. பின் இக்கிளை பசிபிக் வான் போக்குவரத்து மற்றும் போயிங் வானூர்தி நிறுவனம் ஆகிய நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டது. இந்நிறுவனமே பின் யுனைடட் வானூர்தி நிறுவனம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
போயிங் நிறுவனத்தின் புகழ்பெற்ற பயணிகள் விமானமான போயிங் 247 1933 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்விமானம் நவின பயணிகள் வானூர்திகளின் முதல் வடிவாக நோக்கப்படுகிறது. இரட்டை இயந்திரம் பொருத்தப்பட்ட இவ்வானூர்தி அக்காலகட்டத்தில் வேகமான விமானமாகவும், பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியதாகவும், ஒரு இயந்திரத்தில் பறக்கும் வல்லமை பெற்றதாகவும் விளங்கியது. போயிங் நிறுவனம் தயாரித்த 60 இவ்வகை விமானங்களை அதன் சொந்த கிளை நிறுவனமான போயிங் வான்வழி போக்குவரத்து நிறுவனம் மட்டுமே பயன்படுத்தியது. இதன் விளைவாக வினைதிறனற்ற மற்ற பலவகை விமானங்களை மட்டுமே நம்பி வணிகம் செய்து வந்த பல வான்வழி போக்குவரத்து நிறுவனங்கள் நலிவடைந்தன. வர்த்தக தனியுரிமையை எதிர்க்கும் அமெரிக்க அரசாங்கம் 1934 ஆம் ஆண்டு நலிவடைந்த நிறுவனங்களை காப்பாற்ற ஏர் மெயில் சட்டத்தை நிறைவேற்றியது. இச்சட்டத்தின்படி வானூர்தி உற்பத்தியில் ஈடுபடும் எந்த நிறுவனமும் வான்வழி போக்குவரத்து வணிகம் நடத்த தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக போயிங் நிறுவனம், மூன்று சிறிய நிறுவனமாக பிரிக்கப்பட்டது. அவையாவன போயிங் வானூர்தி நிறுவனம், யுனைடட் வான்வழிகள் நிறுவனம், மற்றும் யுனைடட் வானூர்தி மற்றும் போக்குவரத்து கழகம்.
போயிங் நிறுவனம் பான் அமெரிக்கன் உலக வான்வழிகள் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்ததின்படி அட்லாண்டிக் கடலை கடந்து செல்லவல்ல பயணிகள் விமானங்களை உருவாக்கும் முயற்சியில், போயிங் 314 கிளிப்பர் என்ற புதிய வானூர்தி வடிவமைக்கப்பட்டது. போயிங் 314 கிளிப்பர் வானூர்தி தனது முதல் பயணத்தை ஜுலை 1938 ஆம் ஆண்டு துவக்கியது. அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய வானூர்தியான இவ்வூர்தி, சுமார் 90 பயணிகளை கொண்டு செல்லும் திறன் பெற்றது. இவ்விமானம் ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஐக்கிய ராச்சியத்திற்கும் இடையே இயக்கப்பட்டது.
1938 ஆம் ஆண்டு, போயிங் நிறுவனம் தயாரித்த போயிங் 307 விமானம். முதன்முதலாக காற்றழுத்த கட்டுப்பாட்டுடன் உருவாக்கப்பட்ட வானூர்தியாகும். இவ்விமானம் சுமார் 2000 அடிகளுக்கு மேல் பறக்கும் திறன் வாய்ந்ததால், பூவியின் இயற்கை சீற்றங்களால் பாதிப்படையாமல் பயணம் செய்ய வழிவகை செய்தது.
இரண்டாம் உலகப்போரின் போது, போயிங் நிறுவனம் அதிக எண்ணிக்கையில் அமெரிக்க ராணுவத்திற்கு வெடிகுண்டாளர் வானூர்திகளை தயாரித்தது. மார்ச் 1944 ஆம் ஆண்டு போர் உச்சத்தில் இருந்தபோது மாததிற்கு 350 போர்விமானங்கள் என்ற நிலையில் உற்பத்தி வேகம் இருந்தது.
இரண்டாம் உலகப் போரின் முடிவில், போயிங் நிறுவனத்தில் சுமார் 70,000 பேர் வேலையிழந்தனர்.
1950ஆம் ஆண்டு முதல் 1959 ஆம் ஆண்டு வரை
தொகு1950 ஆம் ஆண்டுகளில் இராணுவ தாரை வானூர்திகளான B-47 ஸ்டேட்டோஜெட் and B-52 ஸ்டேட்டோபோட்டிரஸ் ஆகியவற்றை போயிங் தயாரித்தது.
அக்காலகட்டத்தின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக போயிங் நிறுவனம் பல புதிய நவின வானூர்திகளையும் இராணுவ தளவாடங்களையும் தயாரித்தது. முதன்முதலாக எதிரி வானூர்திகளை வானில் தாக்கியழிக்க வல்ல வழிகாட்டபட்ட குறைந்த தூர ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டன.
மேற்கோள்
தொகு- ↑ "Top 100 for 2016" (based on 2015 data). Defense News.
- ↑ "General Information". Boeing. Archived from the original on April 20, 2015. பார்க்கப்பட்ட நாள் March 25, 2024.
- ↑ "The Boeing Co. 2023 Annual Report (Form 10-K)". U.S. Securities and Exchange Commission. January 31, 2024. Archived from the original on February 1, 2024. பார்க்கப்பட்ட நாள் February 1, 2024.
- ↑ Bernal, Kyle (December 23, 2022). "What Are the Top Boeing Government Contracts?". executivegov.com (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on June 14, 2023. பார்க்கப்பட்ட நாள் June 8, 2023.