உற்பத்தி

உற்பத்திபொருளின் வாழ்க்கை வட்டம்

உற்பத்தி என்பது இயந்திரம், கருவிகள் போன்றவற்றின் செயலாக்கத்தாலும், தொழிலாளிகளின் உழைப்பாலும் சரக்குகள் அல்லது பொருட்களை தயாரிப்பதாகும். உற்பத்தி என்ற சொல் மனிதச் செயல்பாடுகள், கைவினைப்பொருள் அல்லது உயர் நுட்பத் உற்பத்தி போன்றவைகளை குறிப்பதாயினும், பொதுவாக மூலப் பொருள்களில் இருந்து பெருமளவில் ஆக்கம்பெற்ற சரக்குகளை உற்பத்தி செய்யும் தொழிற்துறை தயாரிப்பை குறிப்பதாகும். இதுபோன்ற ஆக்கம்பெற்ற சரக்குகள், பின் வேறு சில சிக்கலான தயாரிப்புகளை உற்பத்தி செய்யவோ, அல்லது மொத்த வியாபாரிகளுக்கு விற்கவோ பயன்படுகின்றன.

உற்பத்தியானது பொருளாதார அமைப்புகளில் அனைத்து வகையான மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது. தடையற்ற சந்தைப் பொருளாதாரத்தில், வழக்காக உற்பத்தி என்பது நுகர்வோருக்கு விற்பதால் இலாபமுண்டாகிற தயாரிப்புகளின் மொத்த தயாரிப்புகளையே குறிப்பிடுகிறது. கூட்டுடைமையளர் பொருளாதாரத்தில், உற்பத்தி என்பது மத்தியில் திட்டமிட்ட பொருளாதாரத்திற்கு வழங்கும் நிலையைக் குறிப்பிடும். கலப்புச் சந்தைப் பொருளாதாரத்தில், உற்பத்தி என்பது அரசின் சில கட்டுப்பாடுகளுக்கு இடையில் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உற்பத்தி&oldid=2486050" இருந்து மீள்விக்கப்பட்டது