இத்தாலி
இத்தாலியக் குடியரசு அல்லது இத்தாலி (இத்தாலிய மொழி: Repubblica Italiana அல்லது Italia - இட்டாலியா) தெற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. இதன் நிலப்பகுதியானது கால்பாதம் போன்ற தீபகற்பப் பகுதியையும், மத்திய தரைக் கடல் பகுதிகளான சிசிலி மற்றும் சார்தீனியா என்ற தீவுப்பகுதிகளையும் கொண்டதாகும். இத்தாலியின் வடக்கே ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, சிலவேனியா ஆகிய நாடுகள் எல்லைகளாகவும் அமைந்துள்ளன. சான் மேரினோ மற்றும் வத்திக்கான் நகர் என்ற இரு தனி நாடுகளும், இத்தாலியின் நிலப்பகுதிக்குள் அமைந்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியம், ஜி8, ஜி20 ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது. உலகில் வாழ்வதற்கு ஏற்ற நாடுகளில் முதன்மையான நாடுகளில் இதுவும் ஒன்று. இத்தாலியின் தலைநகரான உரோம் நகரம் மேற்கத்தியக் கலாச்சாரத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியுள்ளது.
இத்தாலியக் குடியரசு Repubblica Italiana | |
---|---|
நாட்டுப்பண்: Il Canto degli Italiani | |
தலைநகரம் | ரோம் |
பெரிய நகர் | தலைநகர் |
ஆட்சி மொழி(கள்) | இத்தாலிய மொழி |
மக்கள் | இத்தாலியன் |
அரசாங்கம் | நாடாளுமன்றக் குடியரசு |
• குடியரசுத் தலைவர் | செர்சியோ மத்தெரெல்லா |
• தலைமை அமைச்சர் | ஜியோர்ஜியா மெலோனி |
இத்தாலியக் கூட்டு | |
• இத்தாலியக் கூட்டு | மார்ச் 17 1861 |
• குடியரசு | ஜூன் 2 1946 |
பரப்பு | |
• மொத்தம் | 301,318 km2 (116,340 sq mi) (71வது) |
• நீர் (%) | 2.4 |
மக்கள் தொகை | |
• 2006 மதிப்பிடு | 59,131,287 [1] (23வது) |
• அக்டோபர் 2001 கணக்கெடுப்பு | 57,110,144 |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2006 மதிப்பீடு |
• மொத்தம் | $1.956 திரிலியன் [1] (8வது) |
• தலைவிகிதம் | $31,200 [2] (20வது) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2006 மதிப்பீடு |
• மொத்தம் | $1.885 திரிலியன் [3] (7வது) |
• தலைவிகிதம் | $33,680 [4] (21வது) |
ஜினி (2000) | 36 மத்திமம் |
மமேசு (2004) | 0.940 அதியுயர் · 17வது |
நாணயம் | யூரோ (€)1 (EUR) |
நேர வலயம் | ஒ.அ.நே+1 (மஐநே) |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே+2 (மஐகோநே) |
அழைப்புக்குறி | 39 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | IT |
இணையக் குறி | .it2 |
|
புவியியல்
தொகுஇத்தாலி தெற்கு ஐரோப்பாவில் உள்ளது.
மொழிகள்
தொகுஇத்தாலிய மொழியே இத்தாலியின் ஆட்சி மொழியாகும். ஐந்தரை கோடி மக்கள் இம்மொழியை தாய்மொழியாகப் பேசுவதாக அறியப்படுகிறது. இருப்பினும் உலகளவில் 15 கோடி மக்கள் இம்மொழியை பேசுவதாக கணிக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல வட்டார வழக்குகள் உள்ளன. சிறுபான்மையினரின் மொழிகளும் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் ஆட்சிமொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பிரெஞ்சு, செருமன் மொழிகள் சில வட்டாரங்களில் பேசப்படுகின்றன. இத்தாலிய மொழியுடன் சிறுபான்மையினரின் மொழிகளிலும் கல்வி பயில வாய்ப்பு உள்ளது.
சமயம்
தொகுகிறித்தவமே பிரதான சமயமாகும். பிற சமயத்தினர் குறைவான விகிதத்திலேயே வாழ்கின்றனர். கத்தோலிக்கக் கிறித்தவமே பலரால் கடைப்பிடிக்கப்படுகிறது.
விளையாட்டு
தொகுகால்பந்தாட்டமே பிரதான விளையாட்டாகும். உலகக் கால்பந்தாட்டக் கோப்பையிலும் இத்தாலி கலந்துகொண்டு கோப்பைகளை வென்றுள்ளது. கைப்பந்தும், கூடைப்பந்தும் முக்கியமான விளையாட்டுகளாகும்.
இத்தாலியின் சிறப்புகள்
தொகுஇத்தாலியில் கி.மு.8000(Neolithic) ஆண்டு காலத்திலேயே, காமுனி(Camunni) நாகரீகம் இருந்துள்ளது. அதற்கானச் சான்று, இத்தாலியின் லோம்பார்டி மண்டலப் பகுதியிலுள்ள வால்கமோனிகா(Valcamonica)பள்ளத்தாக்குப் பகுதியின், பாறை ஓவியக் கீறல்களிலுள்ளன.[2].
இத்தாலி, ஐரோப்பியப் பண்பாடுகள் பலவற்றின் உறைவிடமாக விளங்கியது. மேற்குலக பண்பாட்டின் தலைநகராக ரோம் நகரம், பல நூற்றாண்டுகளாக இருந்தது. பரோக் என்றழைக்கப்படும் மேற்குலக கலாச்சாரம், 17ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ரோமிலேயே ஆரம்பமானது. அத்துடன் கத்தோலிக்க திருச்சபையும் இங்கேயே இருக்கிறது. 19ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் இருந்து 20ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதி வரையில், இத்தாலி காலனித்துவப் பேரரசாக இருந்தது.
இன்று, இத்தாலி ஒரு மக்களாட்சிக் குடியரசாகவும், வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது. மக்களின் வாழ்க்கைத் தரநிலை அளவீட்டில் உலகின் 8ஆவது நாடாக இத்தாலி விளங்குகிறது[3]. இத்தாலி ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ ஆகிய அமைப்புகளின் ஆரம்ப உறுப்பு நாடாகும். ஜி8 அமைப்பிலுள்ள ஒரு உறுப்பு நாடாகும்.
இத்தாலியின் தோற்றம்
தொகுதற்போதுள்ள இத்தாலியக் குடியரசு நாடு 1946 ஜூன் 2 இல் உருவானது. அதற்குமுன், இத்தாலிய பேரரசாக (Kingdom of Italy) 1861, மார்ச் 17 முதல் இருந்தது.
இத்தாலிய இராச்சியம் உருவாவதற்கான விதைக்கரு பல்வேறு வரலாற்று நிகழ்வுகளால் தோன்றியது. அவை வருமாறு;-
- 14-17ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட எலிக்கொள்ளை நோய் (Plague);
- 65 ஆண்டுகள் நடந்த இத்தாலியப் போர்கள் – (1494–1559);
- அப்போர்களுக்குப்பின், உருவான அரசுகளின் அமைதியான ஒருங்கிணைந்த ஆட்சிமுறைகள்;
- 154 ஆண்டுகள் நடைபெற்ற எசுப்பானிய (Habsburg Spain) ஆட்சி முறை – (1559–1713).
- 83ஆண்டுகள் நடைபெற்ற ஆஃசுதிரிய (Habsburg Austria) ஆட்சி முறை – (1713–1796);
- 18ஆண்டுகள் நடைபெற்ற பிரென்'சு குடியரசின் ஆட்சி முறை – (1796–1814);
- 1814ல் நடைபெற்ற வியன்னா பேராயத்தின் தீர்மானங்களும், செயலாக்கங்களும் ஆகும்.
இத்தாலியின் மண்டலங்கள்
தொகுஇத்தாலிய நாடானது, 20 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஐந்து மண்டலங்களுக்கு, சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மற்றவை, சாதாரண அதிகாரங்களுள்ள மண்டலங்கள் ஆகும். அம்மண்டலங்கள் ஆட்சி நிர்வாகத்திற்காக, இரண்டு அல்லது அதற்கு மேலும் ஒரு தடவை பிரிக்கப்பட்டுள்ளன. அ'சுடாப் பள்ளத்தாக்கு(Valle d'Aosta) என்ற சிறப்பு மண்டலம், அங்ஙனம் பிரிக்கப்படாத மண்டலமாகும்.
மண்டலங்கள் | தலைநகரம் | பரப்பளவு (km²) | மக்கள் தொகை |
---|---|---|---|
1) அப்ருசோ (Abruzzo) | L'Aquila | 10,794 | 13,24,000 |
2) Aosta பள்ளத்தாக்கு (சிறப்பு மண்டலம்-1) | Aosta | 3,263 | 1,26,000 |
3) அபுலியா(Apulia) | பாரி (Bari) | 19,362 | 40,76,000 |
4) பசிளிகாதா (Basilicata) | Potenza | 9,992 | 5,91,000 |
5) கலபிரியா (Calabria) | Catanzaro | 15,080 | 20,07,000 |
6) Campania | Naples | 13,595 | 58,11,000 |
7) Emilia-Romagna | Bologna | 22,124 | 42,76,000 |
8) Friuli-Venezia Giulia (சிறப்பு மண்டலம்-2) | Trieste | 7,855 | 12,22,000 |
9) Lazio | ரோம் | 17,207 | 55,61,000 |
10) Liguria | Genoa | 5,421 | 16,10,000 |
11) லோம்பார்டி (Lombardy) | மிலன் (Milan) | 23,861 | 96,42,000 |
12) Marche | Ancona | 9,694 | 15,53,000 |
13) Molise | Campobasso | 4,438 | 3,20,000 |
14) பியத்மாந்து (Piedmont) | துரின் | 25,399 | 44,01,000 |
15) சார்தீனியா (Sardinia) (சிறப்பு மண்டலம்-3) | Cagliari | 24,090 | 16,66,000 |
16) சிசிலி (Sicily) (சிறப்பு மண்டலம்-4) | Palermo | 25,708 | 50,30,000 |
17) Tuscany | Florence | 22,997 | 36,77,000 |
18)Trentino-Alto Adige (சிறப்பு மண்டலம்-5) | Trento | 13,607 | 10,07,000 |
19) Umbria | Perugia | 8,456 | 8,84,000 |
20) Veneto | வெனி'சு | 18,391 | 48,32,000 |
இவற்றையும் பார்க்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Presidenza della Repubblica - இத்தாலிய அதிபரின் உத்தியேகபூர்வ இணையத்தளம். (இத்தாலிய மொழியில்)
- Parlamento - இத்தாலிய நாடாளுமன்ற உத்தியேகபூர்வ இணையத்தளம்.(Senate in Italian only)
- Italia.gov.it Main governmental portal (இத்தாலிய மொழியில்)
- Ministero degli Affari Esteri, Italian Foreign Office பரணிடப்பட்டது 2008-05-17 at the வந்தவழி இயந்திரம்
- இத்தாலிய வரைபடம். - இத்தாலியின் வரைபடமும் பிராந்தியங்களும்.
- இத்தாலி - வரைபடமும் வாநிலையும் பரணிடப்பட்டது 2005-01-23 at the வந்தவழி இயந்திரம் - வரைபடமும் ஆறு நாட்களிற்கான வாநிலை முன் அறிவித்தலும்.
- இத்தாலித்தமிழ்.கொம் இத்தாலி வாழ் தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்ட முதலாவது இணையத் தளம். இத்தாலித் தமிழர்களின் கலை, கலாச்சார, சமூக, புகலிட மற்றும் பலவற்றை உள்ளடக்கி வெளி வந்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Istat - Monthly demographic balance (January–December 2006)". Istituto Nazionale di Statistica. Archived from the original on 2016-03-25. பார்க்கப்பட்ட நாள் 2006-07-05.
- ↑ ஆங்கில விக்கிபீடியா இணையப் பக்கம்
- ↑ Quality-of-life Survey, தி எக்கனாமிஸ்ட்