ஐரோ

ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள 12 நாடுகளில் பயன்படுத்தப்படும் நாணய முறை
(யூரோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஐரோ அல்லது யூரோ (Euro) என்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் பயன்படுத்தப்படும் நாணய முறையாகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 28 நாடுகளில், 19 நாடுகள் (ஐரோ வலய நாடுகள்) யூரோவை அதிகாரபூர்வ நாணயமாக கொண்டுள்ளன. ஆஸ்திரியா, சைப்ரஸ், எசுத்தோனியா, பெல்ஜியம், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பேர்க், மால்ட்டா, நெதர்லாந்து, போர்த்துக்கல், சிலோவேக்கியா, சுலோவீனியா, ஸ்பெயின் ஆகியவை இந்த 18 நாடுகளாகும்.[1] இந்நாணயம் ஒரு நாளில் 334 மில்லியன் ஐரோப்பியர்களால் பயன்படுத்தப்படுகிறது.[2] மேலும் உலகெங்கும் 210 மில்லியன் மக்கள் யூரோவுடன் தொடர்புடய நாணயத்தை பயன்படுத்துகிறார்கள். "யூரோ" என்னும் வார்த்தை திசம்பர் 16,1995ல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

ஐரோ
ευρώ (கிரேக்கம்), евро (சிரில்லிக்)
வங்கித் தாள்கள்
ஐ.எசு.ஓ 4217
குறிவார்ப்புரு:ISO 4217/maintenance-category
சிற்றலகு0.01
அலகு
குறியீடு
மதிப்பு
துணை அலகு
 1/100சதம்
வங்கித்தாள்
 அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்)€5, €10, €20, €50
 அரிதாக பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்)€100, €200, €500
உலோக நாணயம்
 அடிக்கடி பயன்படுத்தப்படப்படும்
உலோக நாணயம்(கள்)
1, 2, 5 ,10, 20, 50 சென்ட் நாணயம், €1, €2
 அரிதாக பயன்படுத்தப்படப்படும்

உலோக நாணயம்(கள்)

1 சென்ட் மற்றும் 2 சென்ட் (பின்லாந்து மற்றும் நெதர்லந்து நாட்டில் மட்டும்)
மக்கள்தொகையியல்
பயனர்(கள்)ஐரோப்பிய ஒன்றியம்;

ஆஸ்திரியா, பெல்ஜியம், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பேர்க், நெதர்லாந்து, போர்த்துகல், ஸ்பெயின், அண்டோரா, மொனாக்கோ, சான் மரீனோ, வாட்டிகன் நகரம், மொண்டெனேகுரோ,

கொசோவோ.
வெளியீடு
நடுவண் வங்கிஐரோப்பிய மத்திய வங்கி
 இணையதளம்www.ecb.int
மதிப்பீடு
பணவீக்கம்1.4%, திசம்பர் 2012
 ஆதாரம்ஐரோ வலயம், May 2005
Euro 2015

1999ம் ஆண்டு சட்டரீதியாக உருவாக்கப்பட்ட இந்த நாணய முறை, 2002ம் ஆண்டு வரை மின் அஞ்சல் முறைப் பணம் பட்டுவாடா செய்யமட்டுமே உபயோகபப்படுத்தப்படது. பின்னர் 2002ம் ஆண்டு, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களின் பழைய நாணய முறையை ஒழித்து, ஐரோ நாணய முறையை பயன்படுத்தத் தொடங்கியது.அமெரிக்க டாலருக்கு அடுத்தபடியாக உலகளவில் அதிகப்படியான மக்களால் பயன்படுத்தப்படும் நாணயம் யூரோ ஆகும். €942 பில்லியன் யூரோ அளவில் உலகில் அதிகப்படியான வங்கிப்பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.உலகில் இரண்டாவது பொருளாதார பலம் பொருந்தியதாக யூரோ வலயம் உள்ளது.

அதிகாரப்பூர்வ அமைப்பு

தொகு

யூரோ நாணயங்களை வெளியிடும் அதிகாரப்பூர்வ அமைப்பு ஐரோப்பிய மத்திய வங்கி(ECB) ஆகும். இது ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் உள்ளது. நாணயங்களின் மதிப்பை நிர்ணயிப்பது இவ்வமைப்பே ஆகும்.

இயல்பு

தொகு

நாணயங்கள் மற்றும் வங்கித்தாள்கள்

தொகு
 
 
அனைத்து யூரோ நாணயங்களுக்கும் ஒரு பொது பக்கமும், வெளியிடும் வங்கியின் நாட்டு பக்கமும் இருக்கும்.

ஒரு ஐரோ நாணயம் அதிகாரப்பூர்வமாக நூறு பகுதிகளாகப் (சென்ட் ) பிரிக்கப்படுகின்றது. சென்ட் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளின் தேசிய மொழிகளில் வெவ்வேறு பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது, உதாரணமாக பிரான்ஸ் தேசத்தில் சென்டிமேஸ் என்றும் ஸ்பெயின் தேசத்தில் சென்டிமொஸ் என்றும் அழைக்கப்படுகின்றது.

நாணயத்தின் பொது பக்கத்தில் அதன் மதிப்பும் பின்புலத்தில் ஒரு வரைபடமும் இருக்கும். ஐரோப்பிய கண்டத்தில் பல்வேறு மொழிகள் பேசப்படுவதால் யூரோவை குறிக்க இலத்தீன் எழுத்தும் அரபி எண்களும் பயன்படுத்தப்படுகிறது.

மின்னணு நிதி பரிமாற்றம்

தொகு

ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ஒரு நாட்டில் இருந்து மற்றொறு நாட்டிற்கு எவ்வளவு வேண்டுமானாலும் நிதி பரிமாற்றம் செய்து கொள்ளலாம். ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் செய்யப்படும் அனைத்து பரிமற்றாங்களும் உள்ளூர் பரிமாற்றங்களாகவே கருதப்படும். இது ஐரோ வலய நாடுகளுக்கும் பொருந்தும்.

நாணய குறியீடு

தொகு

யூரோ குறியீட்டை நிர்ணயிக்க ஒரு பொது கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் மூலம் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த வடிவமைப்பாளர் ஆலைன் பில்லியெட்யின் வடிவமைப்பான (€) ஏற்றுக்கொள்ளப்பட்டது. குறிப்பிட்ட முன்புலம் மற்றும் பின்னணி வண்ணங்களுடன் சின்னத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரைக்கிறது.[3]

வரலாறு

தொகு

அறிமுகம்

தொகு

1992 ம் ஆண்டு மாஸ்ட்ரிச் உடன்படிக்கையின் ஏற்பாடுகளால் யூரோ நிறுவப்பட்டது.நாணயத்தில் பங்கேற்க, உறுப்பு நாடுகள் பின்வரும் கடுமையான விதிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டும்,அவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று சதவிகிதத்திற்கும் குறைவான வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அறுபது சதவிகிதத்திற்கும் குறைவான கடன் விகிதம் (இரண்டும் இறுதியாக பரவலாக அறிமுகம் செய்யப்பட்ட பின்னர்), குறைந்த பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் ஐரோப்பிய ஒன்றிய சராசரிக்கு சமம்மாக அல்லது ஒத்து இருக்க வேண்டும்.மாஸ்ட்ரிச் உடன்படிக்கையில், ஐக்கிய இராச்சியம் மற்றும் டென்மார்க் ஆகியவை யூரோ அறிமுகப்படுத்தப்படும் விளைவாக பணவியல் சங்கத்தின் நிலைக்கு செல்லுமாறு தங்கள் கோரிக்கைக்கு விலக்கு அளிக்கப்பட்டன.

யூரோவிற்கு உதவியது அல்லது பங்களித்த பொருளாதார வல்லுநர்கள்,ஃபிரெட் அர்டிட்டி, நீல் டோவ்லிங், விம் டூசென்ன்பெர்க், ராபர்ட் முண்டெல், டோம்ஸோ படோ-சியோப்பா மற்றும் ராபர்ட் டோலிசன் ஆகியோர் அடங்குவர்.

1995 ஆம் ஆண்டு டிசம்பர் 16 அன்று "யூரோ" என்ற பெயரை மாட்ரிட்டில் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டனர்.பெல்ஜியன் எஸ்பெராண்ட்டிஸ்ட் ஜெர்மைன் பிர்லோட், பிரஞ்சு மற்றும் வரலாற்றின் முன்னாள் ஆசிரியரான இவர் 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 அன்று "யூரோ" என்ற பெயரைக் குறிப்பிட்டு ஐரோப்பிய ஆணைக்குழுவின் ஜனாதிபதியிடம் ஒரு கடிதத்தை அனுப்பியதன் மூலம் யூரோ என்ற புதிய நாணயத்தை பெயரிடுவதில் பெருமை அடைகிறார்.[4]

முலு இலக்கம் மற்றும் குறிப்பிடத்தக்க இலக்கங்களுக்கு தேசிய மரபுகளில் வேறுபாடுகள் இருப்பதால், தேசிய நாணயங்களுக்கு இடையில் அனைத்து மாற்றங்களும் யூரோ வழியாக முக்கோணத்தின் செயல்முறையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த விகிதங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டமைப்பு,[note 1] 1998 டிசம்பர் 31 ஆம் தேதி சந்தை விகிதங்களின் அடிப்படையில் ஐரோப்பிய ஆணைக்குழுவின் பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டது. ஒரு ஐரோப்பிய நாணய அலகு (ECU) ஒரு யூரோவை சமன் செய்வதற்கு அவை அமைக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாணய அலகு என்பது ஐரோப்பிய ஒன்றியத்தால் பயன்படுத்தப்படும் ஒரு கணக்குப் பிரிவாகும், இது உறுப்பினர் நாடுகளின் நாணயங்களை அடிப்படையாகக் கொண்டது; அது ஒரு சொந்த நாணயமாக இல்லை. ECU நாணயங்களின் (முக்கியமாக பவுண்டு ஸ்டெர்லிங் இறுதி நாளான அந்நிய செலாவணி விகிதத்தை அந்நிறுவனம் நம்பியிருந்ததால், அவை முந்தைய காலத்தை நிர்ணயிக்க முடியாது.

யூரோ நெருக்கடி

தொகு
 
யூரோவின் நிதிப் பற்றாக்குறை அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்துடன் ஒப்பிடுகையில்.

2008 ஆம் ஆண்டில் அமெரிக்க நிதி நெருக்கடிக்குப் பின், சில ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பழமைவாத முதலீட்டாளர்களிடையே 2009 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இறையாண்மை கடன் நெருக்கடி பற்றிய அச்சங்கள், இது 2010 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நிலைமை.[5][6] இது யூரோப்பகுதி உறுப்பினர்கள் கிரீஸ்,[7]அயர்லாந்து மற்றும் போர்ச்சுகல் மற்றும் இந்த பகுதிக்கு வெளியிலுள்ள சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகளையும் நிதி நெருக்கடிக்கு உள்ளானது.[8]ஐஸ்லாந்து நாடு, மிகப் பெரிய நெருக்கடியை அனுபவித்த போதும், அதன் முழு சர்வதேச வங்கி முறை சரிந்தபோதும், அரசாங்கத்தின் வங்கிக் கடனை பிணைக்க முடியாததால், இறையாண்மை கடன் நெருக்கடியினால் குறைவாக பாதிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய ஒன்றியத்தில், குறிப்பாக வங்கி பிணை எடுப்புகளின் காரணமாக இறையாண்மைக் கடன்கள் பெருமளவில் அதிகரித்த நாடுகளில், பிணைப்பு, இலாபம் பரவுதல் மற்றும் அபாய காப்பீடு, இந்த நாடுகள் மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களுக்கிடையில் மிக முக்கியமாக ஜெர்மனிக்கு கடன் இயல்புநிலை இடமாற்று மூலம் நிதி நெருக்கடி சமாலிக்கப்பட்டது.[9][10] யூரோப்பகுதியில் சேர்க்கப்பட வேண்டிய நாடுகள், சில யூரோ கூட்டிணைப்புக் கோட்பாடு, குவிப்புக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், ஆனால் அத்தகைய நிபந்தனைகளின் அர்த்தம், ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு கடுமையான அதே அளவு உறுதியுடன் செயல்படவில்லை என்ற உண்மையால் குறைந்துவிட்டது.[11]

நேரடி மற்றும் மறைமுக புழக்கம்

தொகு

நேரடி புழக்கம்

தொகு

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 17 ஐரோ வலய நாடுகளுக்கு யூரோ ஒரே நாணயமாக இருக்கிறது. 2013 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி 33.4 கோடி மக்கள் யூரோவை பயன்படுத்துவதாக தெரிகிறது.[2] ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பிற நாடுகளும் யூரோவை பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அதன் பயன்பபாடு அதிகரிக்கும்.

இருப்பு நாணயம்

தொகு

அறிமுகம் செய்யப்பட்ட காலத்திலிருந்தே அமெரிக்க டாலருக்கு அடுத்து அதிகபட்சமாக இருப்பு வைக்கப்படும் நாணயமாக யூரோ விளங்குகிறது. இருப்பு நாணயமாக அதன் மதிப்பு 1999 ஆம் ஆண்டு 18 சதவிகிததிலிருந்து 2008 ஆம் ஆண்டு 27 சதவிகிதமாக உயர்ந்தது. இந்த காலத்தில் டாலரின் மதிப்பு 71சதவிகிததிலிருந்து 64சதவிகிதமாகவும் ஜப்பானிய யென்னின் மதிப்பு 6.4சதவிகிததிலிருந்து 3.3சதவிகிதமாகவும் சரிந்தது. உலகில் அதிகபட்சமாக இருப்பு வைக்கப்படும் நாணயமாக யூரோ மாறுவது குறித்து பொருளாதார நிபுணர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.[12]

யூரோவுடன் தொடர்புடைய நாணயங்கள்

தொகு
 
உலகளவில் யூரோ மற்றும் அமெரிக்க டாலரின் பயன்பாடு:
  வெளியில் இருந்து யூரோவை ஏற்றுக்கொண்டவர்கள்
  யூரோவுடன் தொடர்புடைய நாணயங்கள்
  குறுகிய மாற்றங்களுடன் யூரோவுடன் தொடர்புடைய நாணயங்கள்
  வெளியில் இருந்து அமெரிக்க டாலரை ஏற்றுக்கொண்டவர்கள்
  அமெரிக்க டாலருடன் தொடர்புடைய நாணயங்கள்
  குறுகிய மாற்றங்களுடன் அமெரிக்க டாலருடன் தொடர்புடைய நாணயங்கள்

யூரோ வலயத்திற்கு வெளியே 23 நாடுகள் யூரோவுடன் தொடர்புடைய நாணயத்தினை பயன்படுத்துகின்றன. இவற்றில் 14 ஆப்பிரிக்க நாடுகளும் 2 ஆப்பிரிக்க தீவுகளும் அடங்கும். 2013 ஆம் ஆண்டின் படி 182 மில்லியன் ஆப்பிரிக்க மக்களும், 27 மில்லியன் ஐரோ வலயத்திற்கு வெளியே வாழும் ஐரோப்பியர்களும், 545,000 பசிபிக் தீவு வாழ் மக்களும் யூரோவுடன் தொடர்புடைய நாணயத்தினை பயன்படுத்துகின்றனர்.[2]

பொருளாதாரம்

தொகு

உகந்த நாணய பகுதி

தொகு

பொருளாதாரத்தில், ஒரு பகுதியில் ஒற்றை நாணய முறையை பயன்படுத்தும்போது அந்த புவியியல் பகுதியின் (உகந்த நாணய பகுதி - Optimum currency area) பொருளாதார திறன் அதிகரிக்கும் என்று ராபர்ட் முன்டெல் தெரிவித்தார். அதன்படி யூரோவின் பயன்பாட்டை ஆதரிக்கவும் செய்தார்.

மேலும் பார்க்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. by means of Council Regulation 2866/98 (EC) of 31 December 1998.

மேற்கோள்கள்

தொகு
  1. Rosenberg, Matt (23 May 2010). "Euro Countries: 22 Countries use the Euro as their Official Currency". About.com. Archived from the original on 6 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 08 November 2013. {{cite web}}: Check date values in: |accessdate= and |archive-date= (help)
  2. 2.0 2.1 2.2 Population Reference Bureau. "2013 World Population Data Sheet" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2013-11-08.
  3. "The €uro: Our Currency". ஐரோப்பிய ஒன்றியம். Archived from the original on 11 அக்டோபர் 2007. பார்க்கப்பட்ட நாள் 17-11-2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Germain Pirlot 'uitvinder' van de euro" (in Dutch). De Zeewacht. 16 February 2007. http://www.ikso.net/vikipedio/artikeleuro.jpg. பார்த்த நாள்: 21 May 2012. 
  5. George Matlock (16 February 2010). "Peripheral euro zone government bond spreads widen". Reuters இம் மூலத்தில் இருந்து 20 செப்டம்பர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200920081902/https://www.reuters.com/article/idUSLDE61F0W720100216. பார்த்த நாள்: 28 April 2010. 
  6. "Acropolis now". The Economist. 29 April 2010. http://www.economist.com/node/16009099. பார்த்த நாள்: 22 June 2011. 
  7. Brian Blackstone; Tom Lauricella; Neil Shah (5 February 2010). "Global Markets Shudder: Doubts About U.S. Economy and a Debt Crunch in Europe Jolt Hopes for a Recovery". The Wall Street Journal. https://www.wsj.com/article/SB10001424052748704041504575045743430262982.html. பார்த்த நாள்: 10 May 2010. 
  8. Bruce Walker (9 April 2010). "Greek Debt Crisis Worsens". The New American இம் மூலத்தில் இருந்து 13 ஏப்ரல் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100413065221/http://www.thenewamerican.com/index.php/world-mainmenu-26/europe-mainmenu-35/3274-greek-debt-crisis-worsens. பார்த்த நாள்: 28 April 2010. 
  9. "Greek/German bond yield spread more than 1,000 bps". Financialmirror.com. 28 April 2010. Archived from the original on 1 ஜூன் 2020. பார்க்கப்பட்ட நாள் 5 May 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. "Gilt yields rise amid UK debt concerns". Financial Times. 18 February 2010. பார்க்கப்பட்ட நாள் 15 April 2011.
  11. "The politics of the Maastricht convergence criteria | vox – Research-based policy analysis and commentary from leading economists". Voxeu.org. 15 April 2009. பார்க்கப்பட்ட நாள் 1 October 2011.
  12. "Will the Euro Eventually Surpass the Dollar As Leading International Reserve Currency?" (PDF). Archived from the original (PDF) on 2013-08-25. பார்க்கப்பட்ட நாள் 17-11-2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஐரோ
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐரோ&oldid=3928345" இலிருந்து மீள்விக்கப்பட்டது