சதம் (நாணயம்)

பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் வெளியிட்ட 1/2 சதம் (1845).
முன் பக்கம்: முடியுடன் விக்டோரியா இராணி. பின் பக்கம்: பெறுமதி, ஆண்டு, பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவன பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
18,737,498 coins minted in 1845.

பல நாடுகளின் நாணயங்களில், சதம் அடிப்படை பண அலகில் 1100 பகுதியாக் காணப்படுகிறது. சொற்பிறப்பியலில், சதம் இலத்தீன் சொல்லான "சென்டம்" (centum) என்பதில் இருந்து உருவாகியது "சென்டம்" என்பது நூறு என பொருள்படுகிறது. சதம் என்பதனை ¢ என்ற குறியீடு மூலமும் அல்லது ஆங்கில எழுத்தான "c" என்பது மூலமும் குறிப்பிடலாம்.)

இலங்கை தொகு

நாணயம் தொடர்பில், இலங்கையில், சதம் என்பது ரூபாயின் நூற்றில் ஒரு பங்கைக் குறிக்கும். இலங்கையில் நாணயங்களுக்கான தசம முறை பிரித்தானியரால் அறிமுகப் படுத்தப்பட்டது.

1869 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் நாள், இலங்கையின் நாணயம் அரசாங்கக் கட்டளை ஒன்றின் மூலம் ஒழுங்கமைக்கப்பட்டது. இதன்படி, இந்திய ரூபாய் அதன் வெள்ளியில் குறிக்கப்பட்ட துணை அலகுகளுடன் (sub-divisions) இலங்கையின் சட்டப்படியான நாணயமாக அறிவிக்கப்பட்டது. இத்தோடு ஒரு துணை முறைமையாக தசம முறையில் அமைந்த செப்புக் காசுகளும் பயன்பாட்டுக்கு வந்தன. இதற்காக அக்காலத்திய ஒரு இந்திய ரூபாய் 100 சதமாக வரையறுக்கப்பட்டது. இதன் அடிப்படையிலான முதல் நாணயங்கள் பிரித்தானிய இந்திய அரசின் கல்கத்தாவிலிருந்த (இன்றைய கொல்கத்தா) நாணயச் சாலையில் வார்க்கப்பட்டு 1872 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து பயன்பாட்டுக்கு விடப்பட்டது. இந்தக் காசுகளில் இவற்றின் பெறுமானங்கள் ஆங்கிலத்துடன், தமிழிலும், சிங்களத்திலும் பொறிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

1890 ஆம் ஆண்டில், இந்திய வெள்ளி நாணயக் குற்றிகளுக்குப் பதிலாக, உள்ளூர் வெள்ளி நாணயத்தைப் பயன்படுத்த வேண்டுமென்று இலங்கை அரசு முன்மொழிந்தது. ஆனால் இந்தியாவின் ரூபாய் தொடர்ந்தும் சீர்தரமாக இருக்க வேண்டும் என்றும், அதன் பகுதிகள் மட்டும் 50, 25, 10 சதங்கள் பெறுமதி கொண்ட வெள்ளி நாணயங்களால் மாற்றீடு செய்யப்படவேண்டும் என்றும் கருத்து நிலவியது. 1892 ஆம் ஆண்டு பெப்ரவரி 9 ஆம் நாளில் இந்த முன்மொழிவை இலங்கையின் சட்டசபை ஏற்றுக்கொண்டது. இதைத் தொடர்ந்து, இலங்கையின் நாணய முறைமை பின்வருமாறு அமைந்திருந்தது:

"https://ta.wikipedia.org/w/index.php?title=சதம்_(நாணயம்)&oldid=2231144" இருந்து மீள்விக்கப்பட்டது